• search
தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரகசிய ரூமில்.. மாமியார் ஜரூர் "தொழில்".. கூடவே மருமகள்.. டக்கென வந்த போலீஸ்.. ஹைலைட்டே "ஷோகேஸ்" தான்

வீட்டிற்குள்ளேயே ரகசிய அறை அமைத்து மதுவிற்பனை செய்த மாமியார் மருமகள் கைதானார்கள்
Google Oneindia Tamil News

தருமபுரி: மாமியாரும் - மருமகளும் சேர்ந்தே ஒன்றாக தொழில் நடத்தி, ஒன்றாகவே ஜெயிலுக்கு போகிறார்கள்.. என்ன நடந்துது?

பொதுவாக மாமியார் - மருமகள் என்றாலே எலியும் பூனையும்போல்தான் இருப்பார்கள்.. அந் வீட்டில் சண்டைக்கு ஒருநாளும் பஞ்சமிருக்காது..

அதிலும் தனிக்குடித்தனம் பஞ்சாயத்து வந்துவிட்டால், வீட்டில் உள்ள ஆணின் தலை எப்படியெல்லாம் உருளும் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை..

நவராத்திரி: கல்வி வளம் தரும் சரஸ்வதிபூஜை..தொழில் வளம் சிறக்க ஆயுத பூஜை..வெற்றி தரும் விஜயதசமி நவராத்திரி: கல்வி வளம் தரும் சரஸ்வதிபூஜை..தொழில் வளம் சிறக்க ஆயுத பூஜை..வெற்றி தரும் விஜயதசமி

மருமகள்

மருமகள்

இரு பெண்களிடமும் மாட்டிக் கொண்டு விழிக்கும் எத்தனையோஅப்பாவி ஆண்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. சில சமயம், மாமியார் கொடுமை தாங்காமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் பரிதாப மருமகள் உண்டு.. மேலும் சில இடங்களில் மாமியாரையே "போட்டு தள்ளும்" பாசக்கார மருமகள்களும் உண்டு.. ஆனால், இங்கே ஒரு மாமியார் + மருமகள் வித்தியாசமானவர்கள்.. அபூர்வமானவர்கள்.. இணைந்து தொழில் செய்து, இணைந்து ஜெயிலுக்கும் போயுள்ளார்கள்..!!

மாமியார்

மாமியார்

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ராஜிவ்நகர் பகுதியில் ஒருவீட்டில் மதுபானங்கள் பதுக்கி வைக்கப்படுவதாகவும், அவைகளை திருட்டுத்தனமாக விற்கப்படுவதாகவும் பென்னாகரம் டிஎஸ்பி இமயவரம்பனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது... தகவலின்பேரில், அந்த வீட்டிற்குள் போலீஸார் கும்பலாக நுழைந்தனர்.. அப்போதுதான், இந்த தொழிலை செய்து வருவது, சம்பந்தப்பட்ட மாமியார் + மருமகள் என்பது தெரியவந்தது.. மாமியார் பெயர் லட்சுமி 58 வயதாகிறது.. மருமகள் கிருஷ்ணம்மாள், 34 வயதாகிறது.. இதில், பக்கத்துவீட்டு மகேஸ்வரியும் கூட்டு..

 சந்து மதுக்கடை

சந்து மதுக்கடை

இவர்கள் தங்கள் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வந்திருக்கிறார்கள். இவர்கள் தங்கள் வீட்டில் மதுவை பதுக்கிவைத்துக்கொண்டு, அவைகளை அந்த பகுதிகளில் விற்று வந்துள்ளனர்.. 50-க்கும் மேற்பட்ட சந்து மதுக்கடைகளில் இந்த வியாபாரம் ஜரூராக நடந்துள்ளது. இந்த விற்பனைக்கு டைம் எதுவும் கிடையாது.. 24 மணி நேரமும் மது கிடைக்குமாம்.. லோக்கல் போலீஸை லேசாக கவனித்துவிட்டால் போதும்.. அதனால் அவர்களும் கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள்..

 தட்டிய பொறி

தட்டிய பொறி

அதனால்தான் இவ்வளவு காலமாக இவர்கள் சிக்காமல் இருந்துள்ளனர்.. பென்னாகரம் டிஎஸ்பி இமயவர்மன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டதால்தான் இவர்கள் தற்போது சிக்கி உள்ளனர்.. சம்பந்தப்பட்ட வீட்டில் மதுவிற்பனை நடப்பதாக தகவலறிந்து போலீசார் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.. ஆனால், முதலில் மதுப்பாட்டில் எதுவுமே சிக்கவில்லை.. எனவே சற்று நேரம் குழம்பி உள்ளனர்.. அதற்கு பிறகுதான் தீவிரமாக தேடினர்.. ரொம்ப நேரம் கழித்துதான் பொறி தட்டி உள்ளது.. அந்த வீட்டின் ஹாலிலேயே ஒரு அழகான ஷோகேஸ் இருந்திருக்கிறது..

 ஹால் + ஷோகேஸ்

ஹால் + ஷோகேஸ்

அந்த ஷோகேஸில் டிவி, உட்பட பல அழகு பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.. சந்தேகத்தின் பேரில் அந்த ஷோகேஸை தள்ளி பார்த்தபோதுதான், அங்கே ஒரு ரகசிய அறை இருப்பதை பார்த்து போலீசார் அதிர்ந்துவிட்டனர்.. அதனுள் போய்பார்த்தால், அட்டைப்பெட்டிகள் ஏராளமாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்திருக்கிறது.. மூட்டை மூட்டையாக மதுபாட்டில்களும் அங்கே மறைத்து வைத்திருந்துள்ளனர்.. 600-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் முதல்கட்டமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. லட்சுமி, மகேஸ்வரி என்ற இந்த பெண்கள் தீபாவளி பண்டிகையையொட்டி படுகுஷியில் இருந்து வந்துள்ளார்கள்..

 சீக்ரெட் ரூம்

சீக்ரெட் ரூம்

காரணம், தீபாவளிக்காக டபுள் மடங்கு விலை வைத்து விற்பனை நடந்து கொண்டிருந்ததாம்.. இந்த சரக்குகளை எல்லாம் வாங்கி வருவது மகேஸ்வரியின் கணவர்.. ஆனால், அவர் இப்போது எஸ்கேப் ஆகியுள்ளதால், போலீசார் தேடி வருகிறார்கள்.. இப்போதைக்கு மாமியார் - மருமகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.. ஆனாலும், சந்துக்கடை சமாச்சாரத்தை இத்தனை நாள் மறைத்து உடந்தையாக இருந்ததாக சொல்லப்படும் போலீஸ்காரர்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்குமா??? தெரியவில்லை.. பார்ப்போம்..!!!

ஊமத்தை காய்

ஊமத்தை காய்

டாஸ்மாக் கடைகளில் வாங்கப்பட்ட மதுபாட்டில்களை வாங்கி வந்ததும், மாமியாரும் மருமகளும் அதில் சில கலப்பட வேலைகளை செய்வார்களாம்.. அதன்படி, வெளியூர்களில் இரந்து சில ரசாயனங்களை வரவழைத்துள்ளனர்.. இதற்கு தனியாக புரோக்கர்கள் இருக்கிறார்களாம்.. இந்த ரசாயனத்துடன், ஊமத்தை காய் என்ற விஷ காயையும் சேர்த்துவிடுவார்கள்.. இப்படி சேர்க்கும்போது, இந்த மதுபானமானது, மேலும் போதை வஸ்துவாக மாறிவிடுமாம்.. இவைகளை கலக்கும்போது, அதன் ஒரிஜினல் கலரும் லேசாக மாறிவிடுகிறது.. பிறகு இதை விலைஉயர்ந்த வெளிநாட்டு சரக்கு என்று சொல்லி, சந்துக்கடைகளில் விற்றுவிட்டு வருவார்களாம்..

English summary
Has the mother in law and daughter in law been involved in anti-social activities, what happened in Dharmapuri
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X