சுகாதாரத்துறை ஒப்பந்த பணியாளர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் மா.சுப்பிரமணியன்.. செம!
தருமபுரி: சுகாதாரத்துறையில் உள்ள 30,000 ஒப்பந்த பணியாளர்களை பனி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்த செய்தி ஒப்பந்த பணியாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
அமைச்சர் மா.மா.சுப்பிரமணியன் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

3-வது அலை வந்தாலும் தயார்
கொரோனா இரண்டாவது அலையை தமிழ்நாடு அரசு சிறப்பாக எதிர்கொண்டு அதனை முழுமையாக கட்டுப்படுத்தி இருக்கிறது. கொரோனா 3-வது அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. இதற்காக அனைத்து மருத்துவமனைகளிலும் கூடுதல் படுக்கை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மருத்துவ துறையில் அனைத்து முன்னேற்பாடுகளும் தயாராக இருக்கின்றன.

முதல்வர் திறந்து வைப்பார்
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் திறந்து வைக்க உள்ளார். ரூ.12 கோடியில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம்
தமிழ்நாட்டில் சுகாதாரத்துறை பணியாளர்கள் உள்பட 30,000 ஒப்பந்த பணியாளர்கள் கொரோனா தொற்று முடிந்த பிறகு பணி நிரந்தரம் செய்வதற்கான தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியை மேம்படுத்துவது தொடர்பாக வருகிற பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும். மேலும் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் கூடுதல் தேவைகள் ஏற்பட்டால் அதுவும் நிறைவேற்றப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
Recommended Video

ஒகேனக்கலின் பெருமை
முன்னதாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 'கொரோனா முதல் அலையில் ஒகேனக்கல்லில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இப்பகுதியில் உள்ள மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதே இதற்கு காரணமாகும். இதனை முன்மாதிரியாக கொண்டு மற்ற இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்' என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications