திண்டுக்கல் டூ பத்தினம்திட்டா.. பசியுடன் 300 கிமீ நடந்த நபர்.. பின்னணியில் கலங்க வைக்கும் காரணம்!
திண்டுக்கல்: கேரளாவை நேர்ந்த நபர் திண்டுக்கல்லில் இருந்து பசியுடன் சுமார் 300 கி.மீ வரை நடந்தே தனது வீட்டை சென்று சேர்ந்திருக்கிறார்.
கேரளாவின் பத்தனம்திட்டாவை சேர்ந்தவர் அனில். இவரிடம் செல்போன் கிடையாது. அதேநேரம் தன்னுடைய வீட்டில் உள்ளவர்களின் தொலைப்பேசி எண்களோ அல்லது நண்பர்களின் தொலைப்பேசி எண்களோ இவருக்கு தெரியாது.
இந்நிலையில் ஆந்திராவில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் தனது மருமகளை சேர்த்துவிட குடும்பத்தினருடன் சென்றிருக்கிறார்.

திண்டுக்கல்லில்..
கல்லூரியில் மகளை சேர்த்து விட்டு அவள் தங்கும் விடுதிகளையும் பார்த்துவிட்டு கண்ணீர் மல்க அவளை பிரிந்து குடும்பத்தினர் மீண்டும் ஊர் திரும்பியுள்ளனர். ஆந்திராவிலிருந்து திருப்பதி வழியாக காட்பாடி, சேலம் என திண்டுக்கல் வரை அனைவரும் ஒன்றாக வந்திருக்கின்றனர். அப்போது அனிலுக்கு பயங்கர பசி எடுத்துள்ளது. இதனையடுத்து அவர் ரயிலிலிருந்து இறங்கி சாப்பிட சென்றுள்ளார். ஆனால் அவர் திரும்பி வருவதற்குள் ரயில் புறப்பட்டு சென்றுள்ளது. நன்றாக சாப்பிட்டு முடித்துவிட்டு வந்து பார்த்த அனிலுக்கு இது பெரும் ஏமாற்றமளித்துள்ளது.

ரயில் பயணம்
இதனையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துள்ளார். நீண்ட நேரம் திண்டுக்கல் ரயில் நிலையத்திலேயே அமர்ந்திருக்கிறார். அவருக்கு யாருடைய செல்போன் எண்ணும் தெரியாது என்பதால் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனையடுத்து பணியிலிருந்த ரயில்வே போலீசாரிடம் நடந்த விவரத்தை கூறியுள்ளார். இதனையடுத்து அனிலுக்கு அந்த போலீசார் ரூ.200ஐ கொடுத்து ஒரு வாகனத்தில் வழியனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்து வத்தலக்குண்டு, பெரியகுளம் வழியாக தேனி வரை அனில் வந்து சேர்ந்துள்ளார். அதன் பின்னர் நடக்கத் தொடங்கியுள்ளார். நடந்தே கம்பம், கூடலூர் என கேரள எல்லையான குமுளிக்கு வந்து சேர்ந்தார். அதற்குள் போலீசார் கொடுத்த பணம் எல்லாம் காலிகயாகிவிட்டது.

வெறும் வயிற்றுடன்
சாப்பாடுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இதற்கிடையில், அனில் குடும்பத்தினர் கேரளாவின் செங்கனூர் வந்து சேர்ந்துள்ளனர். அங்கு வந்த பின்னர்தான் அனில் காணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது. பின்னர் உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் அனிலிடம் மொபைல்போன் இல்லாதது காவல்துறையினருக்கு தேடுதல் பணியில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் யாரிடமும் பணம் கேட்டு வாங்க விருப்பம் இல்லாததால் அனில் வெறும் வயிற்றோடு நடந்தே பயணித்துள்ளார். நெடுஞ்சாலையில் இருந்த போர்டுகளை கொண்டு அவர் வழியை கண்டுபிடித்துள்ளார். ஆனால் வழக்கமான வாகன ஓட்டிகளையே இந்த வழிகாட்டி போர்டுகள் சில நேரம் குழப்பும் நிலையில், இவரும் இந்த போர்டுகளால் வழிதவறியுள்ளார்.

ஓய்வு
பின்னர் 40 கி.மீ தூரம் சுற்றி மீண்டும் சரியான வழியை கண்டு பிடித்துள்ளார். பகல் முழுவதும் பயணம் செய்வது, இரவில் ரயில் நிலையங்களிலோ அல்லது பேருந்து நிலையங்களிலோ படுத்து ஓய்வெடுப்பது என பயணத்தை தொடர்ந்திருக்கிறார். வழியில் கோயில்களில் வழங்கப்பட்ட அன்னதானம் சில நேரம் இவருக்கு உதவி செய்துள்ளது. ஆனால் பெரும்பாலும் பட்டினிதான். மழை, உச்சி வெயில், கடும் காற்று என எல்லாவற்றையும் அவர் எதிர்கொண்டு தொடர்ந்து நடந்திருக்கிறார். ஒருவழியாக 'முன்டகயம்' எனும் இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளார். அங்கிருந்து கோட்டயம் வந்துள்ளார். அங்குள்ள ஏட்டுமானுர் கோயிலில் வழங்கிய அன்னதானத்தை சாப்பிட்டுவிட்டு அங்கேயே அமர்ந்திருக்கிறார். இதுவரை அவர் பயணித்தது மட்டும் சுமார் 250 கி.மீ. இன்னும் 50 கி.மீ பயணித்தால் வீடு சென்று சேர்ந்துவிடலாம்.

மீட்பு
ஆனால் அவரால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. உடல் அவருடைய பேச்சை கேட்கவில்லை. நடந்த களைப்பும், உண்ட உணவும் மயக்கத்தை ஏற்படுத்த அங்கேயே படுத்துவிட்டார். ஒரு நாள் முழுவதும் அங்கேயே கழிந்துள்ளது. அடுத்த நாள் அவரை கவனித்த சிலர் விசாரித்துள்ளனர். நடந்த விவரத்தை அனில் கூறியதையடுத்து அவருக்கு சிலர் உதவி செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து சிறிது தூரம் வந்தவுடன் அனிலின் பக்கத்து வீட்டுக்காரர் அனிலை அடையாளம் கண்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் அனிலை மீட்டு குடும்பத்தினருடன் ஒப்படைத்துள்ளனர். வழி தவறிய நபர் ஒருவர் சுமார் 300 கி.மீ தொலைவுக்கு நடந்தே வீடு வந்து சேர்ந்திருப்பது கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications