சாலையோரம் சாக்குமூட்டை.. சடலமாகக் கிடந்த பாண்டிஸ்வரி! குறுக்கே வந்த கெளசிக்! வெலவெலத்த வேடந்தூர்!
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே கள்ளக் காதலியை கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி சடலத்தை வீசி சென்ற கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பூலாங்குளம் என்ற பகுதியில் சாக்குமூட்டையில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் ஒன்று இருப்பதாக வேடசந்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் சடலமாக கிடந்தவர் கீழதிப்பம்பட்டியை சேர்ந்த பாண்டீஸ்வரி என்பது தெரியவந்தது.

திண்டுக்கல்லில் அதிர்ச்சி
மேலும் பாண்டீஸ்வரி கணவர் அமுல்ராஜ் என்பதும் அவர் ஆந்திராவிற்கு கஞ்சா கடத்தி சென்ற போது அங்கு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் பாண்டீஸ்வரி தனியாக வசித்து வந்தார்.

கள்ளக்காதல் விவகாரம்
இந்நிலையில் நிலையில் வேடசந்தூர் அருகே உள்ள சேடபட்டியை சேர்ந்த கௌசிக் பாண்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இரண்டு மாதங்களாக கௌசிக் பாண்டி மற்றும் பாண்டீஸ்வரி ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

கொடூர கொலை
இந்த நிலையில் இன்று காலை பாண்டீஸ்வரியை கௌசிக் பாண்டியுடன் வாக்குவாதம் ஈடுபட்டது இதில் ஆத்திரமடைந்த கௌசிக் பாண்டி அரிவாளால் சரமாரியாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டி சாலையோரத்தில் தூக்கி வீசிச் சென்றுள்ளதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. பின்பு சடலத்தை மீட்ட வேடசந்தூர் காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை
மேலும் பாண்டீஸ்வரியை கொலை செய்த கௌசிக் பாண்டியை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாண்டீஸ்வரி இரண்டு வருடங்களுக்கு முன்பு 9 மாத நிறைமாத கர்ப்பிணியை கொலை செய்த குற்றவாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications