அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சியா? அமித் ஷா அப்படி சொல்லவில்லை.. ஷாக் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
திண்டுக்கல்: தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேர்தலை சந்திப்போம் என்று மட்டும்தான் மத்திய அமைச்சர் அமித் ஷா சொன்னதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். தேர்தலில் வென்றால் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று அமித் ஷா சொல்லவில்லை என்று கூறிய அவர், அரசியல்வாதிகள் மாற்றி மாற்றித்தான் பேசுவோம் என்றும் தெரிவித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து கூட்டணியை உறுதி செய்தனர். அப்போது 1998ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வென்றதை போல் மீண்டும் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அமித் ஷா தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் தேர்தல் போட்டியிடும் தொகுதி எண்ணிக்கை குறித்து பின்னர் பேசி முடிவெடுக்கப்படும் என்று கூறிய அமித் ஷா, கூட்டணி ஆட்சியாகவே அமையும் என்று தெரிவித்தார். இதன் மூலமாக அதிமுக - பாஜக கூட்டணி தேர்தலில் வென்றால்,. முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டாலும் துணை முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படலாம் என்று பார்க்கப்படுகிறது.
இதனால் பாஜகவினர் தீவிரமாக சட்டமன்றத் தேர்தலில் பணியாற்ற வாய்ப்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த நிலையில் கூட்டணி ஆட்சி தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சரும், பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், சினிமா கிளைமாக்ஸ் போல் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது.
மத்திய அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்துள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் நமது கூட்டணி நிச்சயமாக திமுகவை டெபாசிட் இழக்கம் செய்யும். முன்னதாக சைத்தான் கூட்டணியால் தான் தோற்றோம் என்று கூறினேன். அரசியல்வாதிகள் சூழலுக்கு ஏற்ப மாற்றி மாற்றித்தான் பேசுவோம்.
அதனால் பழசை எல்லாம் துடைத்துவிட வேண்டும். அதேபோல் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தேர்தலை சந்திப்போம் என்றுதான் அமித் ஷா தெரிவித்தார். அவர் கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். இதனால் அதிமுக மற்றும் பாஜக தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications