பழனியை பாஜகவுக்கு கொடுங்க.. எல்.முருகன் காரை முற்றுகையிட்ட அண்ணாமலை ஆதரவாளர்கள்.. ஆடிப்போன டெல்லி
திண்டுக்கல்: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டனர். பாஜக சார்பில் தற்போதுவரை வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் பழனி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று எல். முருகன் காரை அண்ணாமலை ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக போட்டியிடுகிறது. அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் ரவி மனோகரன் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் ரவி மனோகரன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பாஜக சார்பில் கடந்தமுறையில் பழனி தொகுதி வேண்டும் என்று அதிமுகவுக்கு அழுத்தம் கொடுத்தனர். ஆனால் வழங்கப்படவில்லை.

பழனியை பாஜகவுக்கு கொடுங்கள்
2026 தேர்தலில் எப்படியாவது பழனி தொகுதியை அதிமுகவிடம் வாங்கிவிடும் முடிவில் இருந்தனர். உள்ளூர் பாஜகவினர் பழனியில் தீவிரமாக களப்பாணிற்றி வந்தனர். பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பழனியில் அண்ணாமலை பழனியில் போட்டியிடுவார் என்றும் தகவல் வெளியானது.
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் புலிப்பாணி ஆசிரமத்தில் நடைபெற்ற யாகத்தில் கலந்து கொள்வதற்காக இன்று காலை பழனி வருகை புரிந்திருந்தார். அவரின் காரை முற்றுகையிட்டு பாஜகவின் அண்ணாமலை ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். "பழனியை பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும், இங்கு அண்ணாமலையை வேட்பாளராக அறிவிக்க வேண்டும்" என்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
அண்ணாமலை ஆதரவாளர்கள் போராட்டம்
மேலும், "கட்சிக்காக நீண்ட காலமாக உழைத்தவர்களை ஏமாற்ற கூடாது" என்றும் பாஜக அண்ணாமலை ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினார்கள். அவர்களிடம் எல். முருகன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் பழனி பாஜகவினர் தங்களது முழக்கங்களை அழுத்தமாக பதிவு செய்ததால் முருகன் என்ன செய்வதென்று அறியாமல் தவித்தார். உள்ளூர் நிர்வாகிகள், காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி முருகனை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பாஜகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications