தீவிரவாதிகள் உள்ளே புகுந்துட்டாங்க.. எங்களுக்கு பாதுகாப்பில்லை! பகீர் கிளப்பிய பாஜக வேலூர் இப்ராஹிம்
திண்டுக்கல் : காஷ்மீருக்கு அடுத்து தமிழகத்தில் தீவிரவாதி சக்திகள் ஊடுறுவியுள்ளனர் எனவும், இந்துத்துவ தத்துவத்தை பேசும் எங்களை போன்ற தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்த இருப்பதாக பாஜக சிறுபான்மை பிரிவு நிர்வாகியான வேலூர் இப்ராஹிம் கூறியுள்ளார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் பாஜகவின் சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் கரூர் சாலையில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட பாஜக தலைவர் தனபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு பேசினார்.

வேலூர் இப்ராஹிம்
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ,க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம்," பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மை அணி சார்பில் இந்தியா முழுவதும் பா.ஜ., கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவரான சிக்கந்தர்பத் பிறந்தநாளை கொண்டாடிவருகிறோம். சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுத்ததின் பேரில் பா.ஜ., அனைவருக்குமான கட்சியாக உள்ளது.

திண்டுக்கல் லியோனி
திண்டுக்கல் மாநகராட்சி பேருந்துநிலையத்தில் உள்ள 34 கடைகளை முறையாக ஏலம் விடாமல் திமுகவினர் மிரட்டி பெற்றுக் கொண்டுவிட்டனர். இதை கண்டித்து மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். பா.ஜ., அனைத்து மதங்களையும் சமமாக பார்க்கக்கூடிய கட்சி. திருமாவளவன் பிறந்தநாளில் திண்டுக்கல் லியோனி, கோயிலில் தேர் இழுத்து செல்வதை கேவலமாக பேசுகிறார்.

தீவிரவாத சக்திகள்
இதற்கு எதிர்வினையாற்றினால் அதை அரசியல் படுத்துகின்றனர். திமுக செய்தி தொடர்பாளர் ஒருவர் திராவிட நாடு கொள்கையை நாங்கள் கைவிடவில்லை என பிரிவினைவாதம் பேசுகிறார். வாக்குவங்கிக்காக சிறுபான்மையின மக்களை பிளவு படுத்தப்பார்க்கிறார்கள். தேசப்பற்றுக்கு எதிராக செயல்படுகிறார்கள். காஷ்மீருக்கு அடுத்து தமிழகத்தில் தீவிரவாத சக்திகள் ஊடுறுவியுள்ளனர்.

சட்டம் ஒழுங்கு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. குண்டுவெடித்த தீவிரவாதிகளை விடுதலைசெய்யவேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுக்கின்றனர். எங்களைப் போன்ற இந்துத்துவ தத்துவம் பேசும் தலைவர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் திமுகவின் கபடநாடகத்தை புரிந்துகொண்டு அனைவரும் ஒற்றுமையாக தேசத்திற்கு பாடுபடவேண்டும். தமிழர்களின் தன்மானத்தை மதிக்காதவராக தமிழக முதல்வர் உள்ளார். தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை" என்றார்.
-
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications