திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

”சின்னதம்பி” யானை ! காட்டுக்குள்ள, கூண்டுக்குள்ள பார்த்திருக்கீங்க! கும்கியா பார்த்திருக்கீங்களா?

Google Oneindia Tamil News

திண்டுக்கல் : கோவையின் செல்லப்பிள்ளையாக இருந்த சின்னத்தம்பி காட்டு யானை தற்போது கும்கியாக மாறி, தற்போது திண்டுக்கல் கன்னிவாடி பகுதியில் அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையினை விரட்டும் முதல் பணியில் களமிறங்கியுள்ளது.

Recommended Video

    கோவை: முழு கும்கியாக மாறிய சின்னத்தம்பி… காட்டு யானையை விரட்டும் பணியில் மும்முரம்!

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கோவையின் ஹாட் டாப்பிக்காக இருந்தவர் தான் சின்னத்தம்பி.கோவையின் மேற்கு தொடர்ச்சி மலையடிவரங்களில் படுச்சுட்டியாக வலம் வந்தவன் சின்னத்தம்பி.

    திரைப்படங்களில் பார்க்கும் யானைகளை போல் சுட்டித்தனமாக சேட்டைகளை செய்து கொண்டு தன்னனுடைய நிலப்பரப்பில் ராஜாவாக வலம் வந்தான். சின்னத்தம்பியின் தோழனாக வலம் வந்தவன் விநாயகன்.

    சின்னத்தம்பியின் டென்ட்டை காலி செய்த வனத்துறை.. குட்டிப்பையன் இனி என்ன செய்வானோ.. மக்கள் கவலை சின்னத்தம்பியின் டென்ட்டை காலி செய்த வனத்துறை.. குட்டிப்பையன் இனி என்ன செய்வானோ.. மக்கள் கவலை

    சின்னதம்பி யானை

    சின்னதம்பி யானை

    காட்டு வாழ்க்கையை மட்டுமே விரும்பி வாழ்ந்த விநாயகனுக்கு நேர் எதிராக நகரத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்விடங்கள் தான் சின்னத்தம்பிக்கு பிடித்திருந்ததுஅதற்கு ஒரு காரணமும் இருந்தது. முக்கியமாக பொதுமக்களை அச்சுறுத்தாமல் தான் உண்டு,தன் வேலையுண்டு என மேற்கு தொடர்ச்சி மலைகளை வலம் வந்த சின்னத்தம்பிக்கு வாழைப்பழம் பயிர்வகைகளை கொடுத்து பழக்கப்படுத்தினர் மக்கள். அவர்களே பின்னாளில் காட்டு உணவு பிடிக்காமல் உணவு தேடி விவசாயப்பகுதிகளுக்கு வரும் போது சின்ன தம்பியை விரட்ட ஆரம்பித்தனர்.

    பரம சாது

    பரம சாது

    ஆனால் ,சின்னத்தம்பி யாரையும் இது வரை தாக்கியது கிடையாது. மனிதர்களை மட்டுமல்ல ஆடு,மாடுகளை கூட தாக்கியதில்லை. இதனால் சின்னதம்பிக்கு தடாகம் ,மருதமலை ரசிகர்கள் ஏராளமானோர் உண்டு.போஸ்டர் ஒட்டும் அளவுக்கு சூப்பர் ஸ்டாராக வளர்ந்திருந்தான் சின்னத்தம்பி. தடாகம் பகுதிகளில் செங்கல் சூளைகள் ஏராளமாக இருந்த பகுதி. இதனால் மக்களுக்கு மட்டுமல்ல யானைகளுக்கும் பிரச்சனைதான். தன் கண் முன்னே காணாமல் போன காடுகளால் தனக்கான உணவும் காணாமல் போனதால் விளைநிலங்களில் இறங்கினர் விநாயகனும், சின்னத்தம்பியும்.

    அடம்பிடித்த சின்னதம்பி

    அடம்பிடித்த சின்னதம்பி

    முதலில் மனிதர்களுக்கு தொல்லை என கூறி சின்னத்தம்பியையும், விநாயகனையும் அப்புறப்படுத்த முனைந்தது வனத்துறை.முதலில் விநாயகனை பிடித்து முதுமலைக்கு அனுப்பி வைத்தனர். பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு வனத்துறையினர் சின்னத்தம்பியை மயக்க ஊசியை செலுத்தி பிடித்தனர். தான் வாழ்ந்த பூர்வீக நிலத்தை விட்டு செல்லமாட்டேன் என அடம்பிடித்த சின்னதம்பியை வாகனத்தில் ஏற்றும் முயற்சியின் போது, பின்னால் இருந்து கும்கி யானை தள்ளியதில் அதன் தந்தங்கள் குத்தி சின்னதம்பிக்கு காயம் ஏற்பட்டது. வாகனத்தில் மோதி அதன் ‌2 தந்தங்களும் உடைந்து சின்னதம்பி யானை அவதிப்பட்டு லாரியில் ஏறியதை பார்த்த மக்களால் சின்னத்தம்பிக்காக கண்ணீர் மட்டுமே விட முடிந்தது.

    கும்கியாக மாற்றம்

    கும்கியாக மாற்றம்

    பின்னர்,ஆனைமலை புலிகள் காப்பகத்திற்க்கு உட்பட்ட கோழிகமுத்தி முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கும்கியாக பல கட்ட போராட்டங்களுக்கு பின்னர் மாற்றப்பட்டான். மூன்று வருட காலம் சின்னத்தம்பியை கும்கியாக மாற்றுவதற்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு தற்போது முதல் முறையாக சின்னத்தம்பியை காட்டுக்குள்ள பார்த்திருக்க! கூண்டுக்குள்ள பார்த்திருக்க! கும்கியா பார்த்திருக்கியா? காட்டு யானைய விரட்டி பார்த்திருக்கியா? என்பது போல் திண்டுக்கல்லில் உள்ள கன்னிவாடி காட்டு பகுதிக்கு முழு கும்கியாக மாறியுள்ள சின்னத்தம்பியை இறக்கி விட்டிருக்கிறது வனத்துறை. கானகத்து யானையாக இல்லை. கும்கியாக...

    English summary
    Chinnathambi, the pet elephant of Coimbatore, has now turned into a kumki and is in the process of chasing the wild elephant that is currently roaming in the Kannivadi area of Dindigul.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X