நீ எனக்கு வேணும்! 18க்கு தொல்லை கொடுத்த 46 வயதினிலே! காலையில் பார்த்தால்.. திடுக்கிட்ட திண்டுக்கல்!
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே சோலைக்காடு வனப்பகுதியில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து வசித்து வந்த செல்வி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஏன் அவர் கொலை செய்யப்பட்டார்? கொலையாளி யார்? என நடத்தப்பட்ட விசாரணையில் தான் அந்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பன்றிமலை அருகே உள்ள மலையாண்டிபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் சோலைக்காடு பகுதியில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகிறார்.
இவரது மனைவி செல்வி (வயது 46). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தான் செல்வி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

திண்டுக்கல்லில் அதிர்ச்சி
போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுவன் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். தச்சுவேலை பார்க்கும் அந்த சிறுவன் கணேசனை மாமா என்று உரிமையோடு அழைத்ததால் அவர் மீது சந்தேகம் ஏற்படவில்லை. ஆனால் அந்த சிறுவனுடன் செல்விக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கடந்த 4 வருடங்களாக இவர்கள் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

18 வயது சிறுவர்
கணேசன் இரவு நேரங்களில் தோட்டத்தில் வன விலங்குகள் வருதை தடுக்க பாதுகாப்புக்கு சென்று விடுவார். அந்த சமயங்களில் செல்விக்கு துணையாக சிறுவன் இருந்துள்ளான். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கும் இவர்கள் தொடர்பில் எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. நேற்று செல்வியின் வீடு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து வீட்டை திறந்து பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து கன்னிவாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கொலை
இன்ஸ்பெக்டர் வெள்ளையன், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ், எஸ்.எஸ்.ஐ. ஈஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பன்றிமலையில் பதுங்கி இருந்த சிறுவனை பிடித்து விசாரணை நடத்தியதில் தான் கொலை செய்ததை ஒத்துக் கொண்டார். தொடர்ந்து செக்ஸ் உறவுக்கு தன்னை கட்டாயப்படுத்தி வந்ததாகவும் இதனால் தான் செல்வியை தள்ளி விட்டதாகவும் தெரிவித்தார்.

சிறுவன் கைது
அப்போது அங்கிருந்த கல்லின் மீது அவரது தலை பட்டு மயங்கி விழுந்ததாகவும், அதன் பிறகு குழவிக் கல்லால் தாக்கி கொலை செய்ததாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சிறுவனை கைது செய்தனர். பேரன், பேத்தி எடுத்த நிலையில் சிறுவனுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்











Click it and Unblock the Notifications