விஜய் சார் நீங்களா.. டூப் விஜயை களத்தில் இறக்கி லைக்ஸ் வாங்கிய வேட்பாளர்.. கப்பு முக்கியம் பிகிலு..!
திண்டுக்கல் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி காண வாக்குப்பதிவு தேதி நெருங்கி வரும் நிலையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் ஒருவர், நடிகர் விஜயை போலவே இருக்கும் டிக் டாக் பிரபலத்தை வைத்து பிரச்சாரம் மேற்கொண்டு வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சியான திமுகவும், எதிர்க் கட்சியாக உள்ள அதிமுகவும் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தங்களது பலத்தை நிரூபிக்க தயாராகி வருகின்றன. குறிப்பாக மாநகராட்சிகள், முக்கிய நகராட்சிகளை கைப்பற்றுவதில் இருவருக்கும் போட்டா போட்டி நிலவுகிறது.

தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம்
ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்டங்களில் பெற்ற வெற்றியை தற்போது கொண்டாடி வரும் விஜய் மக்கள் இயக்கத்தினர் மாநகராட்சி பேரூராட்சி நகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் காண தயாராகி உள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளிலும், தமிழகம் முழுவதில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் நகராட்சிகள், பேரூராட்சிகளில் களம் காண்கின்றனர்.

ஆட்டோ சின்னம்
தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு வழங்கப்படுவது போல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கும் பொதுச் சின்னத்தில் வழங்க வேண்டும் என விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. விஜய் மக்கள் இயக்கத்தை முறைப்படியாக இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவில்லை என்ற காரணத்தால் ஆட்டோ சின்னம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என மாநில தேர்தல் ஆணையம் கூறியதோடு ஆட்டோ சின்னத்தையும் ஒதுக்க மறுத்தது. பொது சின்னம் கிடைத்தால் மக்களிடம் கொண்டு செல்ல சுலபமாக இருக்கும் என நினைத்த விஜய் மக்கள் இயக்கத்தினர் இந்த அறிவிப்பால் சற்று ஏமாற்றம் அடைந்தனர்.

விமஇ வேட்பாளர்
இருந்தும் பல பகுதிகளில் தங்களுக்கு கிடைத்த சின்னத்தை வைத்து தற்போது பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள். இந்த நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி வார்டு ஒன்றில் விஜய் மக்கள் இயத்தின் சார்பில் உலக உருண்டை சின்னத்தில் போட்டியிடும் மகராஜ் என்ற விக்கி, நடிகர் விஜயைப் போல தோற்றம் கொண்ட டிக்டாக் பிரபலம் ஒருவரை வைத்து பிரச்சாரம் மேற்கொண்டார். தங்கள் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று வாக்குகளை சேகரித்தார்.

டூப் விஜய்
கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கச் சென்ற நடிகர் விஜய் முகக்கவசம் அணிந்த படி சைக்கிளில் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித்தார். கருப்பு சிகப்பு சைக்கிளில் சென்றார் எனவும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டிக்கும் வகையில் நடிகர் விஜய் சைக்கிளில் சென்றதாக பல்வேறு ஊகங்கள் வெளியானது. இதே போலவே இன்று டூப் விஜய்யை வைத்து வேட்பாளர் மகராஜ் வீதி வீதியாக சென்று வாக்காளர்களை வாக்கு சேகரித்தார். பார்ப்பதற்கு விஜய் போலவே இருந்ததால் சிலர் திடீரென அதிர்ச்சிக்கு ஆளாகி பின்னர் சமாளித்து அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
-
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications