கரூர் தொகுதியை காங்கிரஸுக்கு கொடுத்தால் எதிர்க்கும் கழுதை கூட ஜெயிக்கும்.. கொந்தளிக்கும் திமுக!
திண்டுக்கல்: கரூர் லோக்சபா தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கக் கூடாது என அத்தொகுதி திமுகவினர் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கரூர் தொகுதியை காங்கிரஸுக்கு கொடுத்தால் எதிர்த்து நிற்பது கழுதையாக இருந்தாலும் சுலபமான வெற்றியை பெறும் என திமுக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் குமுறலை கொட்டி வருகின்றனர்.
கரூர் லோக்சபா தொகுதியில் கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களின் சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. வேடசந்தூர்(திண்டுக்கல்), அரவக்குறிச்சி( கரூர்), கரூர் (கரூர்), கிருஷ்ணராயபுரம் (கரூர்), விராலிமலை (புதுக்கோட்டை), மணப்பாறை (திருச்சி) ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.

கரூர் லோக்சபா தொகுதியானது 1957-ம் ஆண்டு முதல் 16 தேர்தல்களை எதிர்கொண்டிருக்கிறது. இதில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 7 முறை வென்றுள்ளது. அண்ணாதிமுக 6 முறை வென்றுள்ளது. திமுக, தமிழ் மாநில காங்கிரஸ் தலா 1 தேர்தலில் வென்றுள்ளன. 1957 முதல் 1984-ம் ஆண்டு வரை கரூர் லோக்சபா தொகுதி எம்பிக்கள் அறியப்படாத முகங்களாக இருந்தனர். அண்ணா திமுகவின் தம்பிதுரை 4 முறை இத்தொகுதியில் வென்று விஐபி தொகுதியாக்கினார். திமுகவின் சீனியர்களில் ஒருவரான கேசி பழனிசாமி 2004-ல் இத்தொகுதியில் வென்றார். டெல்லி காங்கிரஸ் மேலிடத்துடன் மிக நெருக்கமான ஜோதிமணி தற்போது கரூர் தொகுதி எம்பியாக இருந்து வருகிறார்.

கரூர் தொகுதியானது 4 திசைகளில் திரும்பி இருக்கும் மாவட்டங்களை உள்ளடக்கி இருப்பதால் எந்த ஒரு எம்பியாலும் 4 மாவட்ட சட்டசபை தொகுதிகளின் மக்கள் கோரிக்கையையும் முழுமையாக நிறைவேற்றி தர முடியாத நிலை இருக்கிறது என்பது கள நிலவரம். இம்முறை லோக்சபா தேர்தலில் கரூர் தொகுதியை வழக்கம் போல திமுகவிடம் காங்கிரஸ் கேட்டு வருகிறது. திமுக ஒதுக்க நினைத்த 4 தொகுதிகளில் கரூர் இல்லைதான்; ஆனால் திமுக, காங்கிரஸுக்கு இறுதியாக தர வாய்ப்புள்ள 6 அல்லது 7 தொகுதிகளில் கரூரும் ஒன்றாக இருக்கவே சான்ஸ் அதிகம்.
அதேநேரத்தில் காலம் காலமாக கரூர் லோக்சபா தொகுதியில் கூட்டணி கட்சிக்கே வேலைபார்ப்பதா? இதெல்லாம் சரிவராது.. அடுத்த தலைமுறை நாங்க வந்துட்டோம்.. எங்களை நம்பி திமுக வேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும்.. நாங்க ஜெயிக்க வைக்கிறோம் என்கின்றனர் திமுக இளைஞர் பட்டாளம். இந்த கொந்தளிப்பைத்தான் தலைமைக்கு தெரிவிக்கும் வகையில், "கரூர் தொகுதியை காங்கிரஸ்-க்கு கொடுத்தால் எதிர்த்து நிற்பது கழுதையாக இருந்தாலும் சுலபமான வெற்றியை பெறும் ..." திமுக ஆதரவாளர்களே சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
-
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது?












Click it and Unblock the Notifications