Election Exclusive: 77ஐ எதிர்க்கும் 27? திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிராக கோடீஸ்வர குடும்ப வாரிசு? இவரா? திமுக திகுதிகு!
திண்டுக்கல்: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராகி வரும் நிலையில் திண்டுக்கல்லில் புதிய பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. அதிமுகவின் மிக மூத்த சீனியர்களில் ஒருவரான 77 வயதான திண்டுக்கல் சீனிவாசனை எதிர்த்து போட்டியிட தொழிலதிபர் திண்டுக்கல் ரத்தினத்தின் 27 வயது மகனான வெங்கடேசன் சீட் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. திண்டுக்கல் மாநகராட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் பிறகு திமுகவில் இணைந்து நிலையில் தற்போது நேரடியாக சட்டமன்ற தேர்தலுக்கு வாய்ப்பு கேட்டிருப்பது திண்டுக்கல் உடன்பிறப்புகளிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.
தமிழகம் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் ஆளும், ஆண்ட கட்சிகளின் சீனியர்கள் தங்கள் பகுதிகளில் தேர்தல் வேலைகளை துவக்கி விட்டனர். அந்த வகையில் அதிமுகவின் பொருளாளரும் மிக மூத்த உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன் தேர்தல் பணிமனைக்காக நேற்று முகூர்த்த கால் ஊன்றி இருக்கிறார்.
ஜெயலலிதா காலத்திலேயே பொருளாளராக இருந்த திண்டுக்கல் சீனிவாசன் அதற்கு பிறகு சில காரணங்களால் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்தார். அதற்கு முன் மூன்று முறை திண்டுக்கல் எம்பியாக இருந்தவர் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் சீனிவாசன்
14 ஆண்டு காலம் அரசியல் வனவாசத்தை அனுபவித்த அவர் 2016 இல் மீண்டும் பவர் பாலிடிக்ஸ்க்கு வந்தார். சசிகலாவின் ஆதரவால் அமைச்சர் பதவியும் கிடைத்தது. தனது சிஷ்யர் நத்தம் விஸ்வநாதன் மூலமாக திண்டுக்கல் சீனிவாசன் ஓரம் கட்டப்பட்ட நிலையில் பின்னர் அவரையே ஓரம் கட்டி மீண்டும் தான் இழந்த பொருளாளர் பதவியை கைப்பற்றினார். தற்போது வரை எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளராக இருக்கும் அவர் திண்டுக்கல்லில் ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறார்.
திண்டுக்கல் அரசியல்
அதே நேரத்தில் கட்சியில் இருக்கும் ஒரு சில உட்கட்சி பூசல்களால் திண்டுக்கல் சீனிவாசன் இந்த முறை வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டி இருக்கும் என்கின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் திமுக களமிறங்குவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து இருக்கிறது. கடைசியாக 1996 இல் மணிமாறன் திமுக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு பிறகு போட்டியிட்ட தேர்தல்களில் திமுக தோல்வியை சந்தித்தது. இதை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டு வந்தது.
ஐ.பெரியசாமி
கடந்த தேர்தலிலும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பாண்டி திண்டுக்கல் சீனிவாசனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் சீனிவாசன் களமிறங்கும் நிலையில் அந்த தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. அதே நேரத்தில் திண்டுக்கல்லில் தலைநகரான திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் திமுகவின் களமிறங்க வேண்டும் என உடன்பிறப்புகள் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் ஐபி செந்தில் குமார் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடலாம் என சொல்லப்படுகிறது.
திண்டுக்கல் ரத்தினம்
இதற்கிடையே புதிய பரபரப்பை பற்றவைக்கும் வகையில் அரசியலில் மிகவும் இளையவரான வெங்கடேசன் என்பவர் திண்டுக்கல்லில் சீட் கேட்டு உள்ளாராம். வெங்கடேசன் வேறு யாருமல்ல திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபரான திண்டுக்கல் ரத்தினத்தின் இளைய மகன் தான் வெங்கடேசன், கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட அவர் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார், தொடர்ந்து திமுகவில் இணைந்து அவருக்கு பகுதி செயலாளர் பொறுப்பும்ம் இளைஞர் அணி அமைப்பாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது.
2026 சட்டமன்ற தேர்தல்
அப்போதைக்கு துணை மேயர் பதவி கேட்டு சீனியர் அமைச்சர் உதவியுடன் கோபாலபுரம் வீட்டு கதவை தட்டினார் திண்டுக்கல் ரத்தினம். அப்போதைக்கு அது கைகூடாத நிலையில் தமிழகத்தின் மிக இளம் வயது எம்எல்ஏ என்ற பெருமையை பெற வேண்டும் என்பதற்காக 2026 சட்டமன்ற தேர்தலில் மகனை போட்டியிட வைக்க தீவிரமாக காய் நகர்த்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் எளிமையான வாழ்க்கையை தொடங்கிய திண்டுக்கல் ரத்தினம் அதற்கு பிறகு சேகர் ரெட்டி உடனான நெருக்கத்திற்கு பிறகு தமிழகம் முழுவதும் அறிந்த நபர் ஆனார்.
எம்எல்ஏ சீட்
தென் மாவட்டங்களில் மணல் குவாரி, கல்வி நிறுவனங்கள் என தொழிலை விரிவு படுத்தியவர் தற்போது தனது மகனை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார் என்கின்றனர். திமுக தரப்பில் இருக்கும் ஒரு மூத்த அமைச்சர் மூலம் தனது தொழில் நெருக்கத்தை வைத்து திண்டுக்கல் ரத்தினம் தனது மகனை போட்டியிட வைக்க முயற்சித்து வருகிறார் என்கின்றனர் திமுக உடன் பிறப்புகள். கட்சியில் சேர்ந்த உடனேயே சில பொறுப்புகள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஸ்ட்ரெய்ட்டா எம்எல்ஏ தான் என்ற முனைப்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை கேட்டுள்ளார் என்றும் சொல்கின்றனர்.
திமுக வேட்பாளர் திண்டுக்கல்
மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு தனது வார்டு மக்களை தொடர்ந்து 'கவனித்து' வரும் அவர் அடிக்கடி பரிசு பொருட்கள் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். மேலும் அவரது தந்தையான திண்டுக்கல் ரத்தினம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உதவுவது, கோவில் திருவிழாக்களுக்கு நன்கொடை தருவது என பொதுமக்களிடையே செல்வாக்கை அதிகரித்து வருவதால் இந்த முறை வெங்கடேசனுக்கு வாய்ப்பு கொடுத்தால் எப்படியும் வெற்றி பெற்று வரலாம் என திமுக தலைமையிடம் எடுத்துச் சொல்லி சீட்டு பெற முயற்சித்து வருகிறார்கள். அதே நேரத்தில் மிக இளம் வயது வேட்பாளரை ஒரு சீனியரை எதிர்த்து நிறுத்தலாமா என யோசிக்கும் திமுக தலைமை பிறகு முடிவெடுக்கலாம் என சொல்லி அனுப்பி உள்ளார்களாம். அதே நேரத்தில் எப்படியும் சீட்டை பெற்றே ஆக வேண்டும் என சென்னையில் முகாமிட்டிருக்கிறது திண்டுக்கல் ரத்தினம் தரப்பு என்கின்றனர் திமுக உடன் பிறப்புகள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications