“வலிமை” டிக்கெட் 1000 ரூபாயா..? தியேட்டர் வாசலில் அஜித் ரசிகர்கள் போராட்டம்..மேலாளரை தாக்க முயற்சி.!
திண்டுக்கல் : நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக உள்ள "வலிமை" திரைப்படத்திற்கான ரசிகர் ஷோவிற்கான டிக்கெட்டுகளுக்கு திண்டுக்கல் ராஜேந்திரா திரையரங்க நிர்வாகம் அதிக தொகை கேட்பதாக கூறி ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தியேட்டர் மேலாளரை தாக்க முயன்றதாகவும், இதனால் காவல்துறையினருக்கும் ரசிகர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Recommended Video
போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் தயாரிக்கப்பட்ட வலிமை திரைப்படம் இம்மாதம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இந்தப் படம் பல கட்ட இழுபறிக்குப் பிறகு வரும் 24ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னதாக கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரை வலிமை அப்டேட் கேட்டு ரசிகர்கள் நச்சரித்தது ஊர் அறிந்த செய்தி.

அஜித்தின் வலிமை
தொடர்ந்து ரசிகர்களின் கோரிக்கையை அடுத்து வலிமை படத்தின் டைட்டில், மோஷன் போஸ்டர், டீசர், சிங்கிள், ட்ரைலர் என அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமூகப் பிரச்சினைகளைப் பேசும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் என இயக்குனர் வினோத் கூறியிருந்த நிலையில் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வேற லெவல் ஹிட்டானது.

ரசிகர்கள் ஆர்வம்
பிரம்மாண்ட சண்டைக்காட்சிகள் அட்டகாசமான பாடல்கள் வேற லெவல் பைக் ஸ்டண்ட் காட்சிகள் என அஜித் ரசிகர்களுக்கு விருந்து படைக்க இருப்பதாக வினோத் கூறியிருந்த நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. படத்தின் சவுண்ட் மிக்ஸிங் மிகச் சிறப்பாக இருப்பதாக சவுண்ட் என்ஜினியர் கூறியிருந்த நிலையில் தியேட்டர்கள் வலிமையை கொண்டாட காத்திருக்கின்றன. வழக்கம் போல் அஜித் வந்து நின்றாலே போதும் எனக்கூறும் ரசிகர்கள் அவரை தரிசிக்க 24ஆம் தேதி எப்போது வரும் எனவும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.

அதிக கட்டணம் என புகார்
வழக்கமான காட்சிகள் இல்லாமல் படம் வெளியாகும் நாள் அன்று காலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் வெளியாக உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் டிக்கெட் புக்கிங் நடைபெற்று வருகிறது. வழக்கமாக ரசிகர் மன்றங்கள் மூலம் டிக்கெட் விற்பனை நடைபெறும் நிலையில் நடிகர் அஜித்குமார் ரசிகர் மன்றங்களை கலைத்து உள்ளதால் தனித்தனியே ரசிகர்கள் டிக்கெட் வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் வலிமை படத்திற்கு விற்கும் டிக்கெட்டுகள் அதிகப்படியாக வருவதாக கூறி அஜித் ரசிகர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தியேட்டர் மேனேஜரை தாக்க முயன்றதாக புகார் எழுந்துள்ளது.

பெரும் பரபரப்பு
திண்டுக்கல்லின் பிரபலமான தியேட்டரான ராஜேந்திர திரையரங்கில் வலிமை வெளியாகவுள்ளது. அதற்காக டிக்கெட் விற்பனையும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் வலிமை திரைப்படத்திற்கான ரசிகர் ஷோ டிக்கெட் வினியோகத்தின் போது திரையரங்க நிர்வாகம் டிக்கெட்டுக்கு ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 500 வரை அதிக தொகை கேட்பதால் அஜித் ரசிகர்கள் திரையரங்கு முன்பாக தர்ணா போராட்டம். தொடர்ந்து ராஜேந்திரா திரையரங்கு கதவினை ரசிகர்கள் பூட்டு போட்டு பூட்டினர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் திண்டுக்கல் ராஜேந்திரா திரையரங்கு மேலாளர் மாயாண்டியை அஜித் ரசிகர்கள் தாக்க முயற்சித்ததாகவும், அஜித் ரசிகர்கள் மற்றும் காவல் துறையினர் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications