வைர கவசமே கொடுக்கலாமே! ஓபிஎஸ் தேவரின் வாரிசா? வெள்ளிக் கவசத்தை யார் கேட்டது? கொந்தளித்த அதிமுக மாஜி!
திண்டுக்கல் : ஓ.பன்னீர்செல்வம் தான் திருடிய பணத்தில் வைரத்திலேயே கவசம் அளிக்கலாம் ஆனால் அதைவிட கேவலமாக உங்களிடம் யார் வெள்ளிக்கவசம் கேட்டது என திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.
அதிமுகவின் 51 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் பழனி சாலையில் திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அதிமுக கழக செயலாளர் ராஜசேகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திரைப்பட நடிகை விந்தியா மற்றும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் அதிமுகவின் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

திண்டுக்கல் சீனிவாசன்
அப்போது பொதுமக்கள் மத்தியில் மேடையில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன்," தெய்வீகத் திருமகனார் முத்துராமலிங்க தேவருக்கு அம்மா அவர்கள் கொடுத்த தங்க கவசத்தை மாட்டுவதற்கு நமக்கு உரிமை இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். குறுக்கு வழியிலே அதற்கான வேலைகளை செய்திருக்கிறார்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள். அதைப்பற்றி நாம் கவலைப்படவில்லை.

வெள்ளிக் கவசம்
ஆனால் அம்மா அவர்கள் கொடுத்த தெய்வீக பொன் கவசத்தை முத்துராமலிங்கருக்கு சாத்தப்பட வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. அம்மா கொடுத்த அந்த தெய்வீக பொன் கவசம் முத்துராமலிங்கத் தேவருக்கு போய் சேர வேண்டும் என எடப்பாடி அவர்கள் கூறினார். ஆனால் நேற்று நடைபெற்ற குருபூஜை விழாவில் வெள்ளியிலே கவசத்தை கொடுத்து ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையிலே நான் வழங்குகிறேன் என துரோகி சொல்லி இருக்கிறார்" என ஓ.பன்னீர் செல்வத்தை மறைமுகமாக தாக்கிப் பேசினார்.

கொள்ளையடித்த பணம்
மேலும் 'அம்மா கொடுத்த தங்கத்திற்கு ஈடு வேறு என்ன இருக்கிறது? எண்ணத்திற்கு வெள்ளியில் கொடுக்கிறாய். கொள்ளையடித்த பணத்தில் வைரத்தில் ஆவது கொடு. திருப்பதி வெங்கடாஜலபதிக்கு சாத்தப்பட்டு இருக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தைப் போன்று முத்துராமலிங்கத் தேவருக்கும் தான் திருடிய பணத்தில் பல்லாயிரம் கோடி மதிப்பீட்டில் வைரத்தில் கவசத்தை வழங்கு.

வைரத்திலேயே கவசம்
ஆனால் தற்பொழுது அதைவிட கேவலமாக வெள்ளியிலே முத்துராமலிங்க தேவருக்கு கவசம் வழங்க வேண்டும் என உங்களிடம் யார் கேட்டது நீங்கள் என்ன தேவருக்கு வாரிசா? என பேசினார். அதிமுக சார்பில் வெள்ளிக் கவசம் வழங்கியதால் தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்ஸின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகக் கூறி வரும் நிலையில், ஓபிஎஸ் சமூகத்தை சேர்ந்தவரான திண்டுக்கல் சீனிவாசன் அவரை ஒருமையில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications