பைக் மோதி தீப்பற்றி எரிந்த அரசு பஸ்.. பிளஸ் 2 மாணவர் பலி.. திண்டுக்கல் அருகே பதைபதைக்கும் விபத்து
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரசு பஸ் மீது பைக் மோதியதில் பிளஸ் 2 மாணவர் பலியானார். 2 பேர் படுகாயமடைந்தனர். மேலும் பைக் மோதி தீப்பிடித்ததில் அரசு பஸ் முழுவதுமாக எரிந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள், டிரைவர், கண்டகர்கள் உயிர் பிழைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மேம்பாலத்தில் அரசு பஸ் இன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பாலத்தில் பைக் ஒன்று வந்தது. பைக்கில் 3 பேர் பயணம் செய்தனர். ஒருவர் பைக் ஓட்ட 2 பேர் பின் இருக்கையில் அமர்ந்திருந்தனர். திடீரென்று பைக் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ் மீது மோதியது. இதனால் பைக்கில் சென்ற 3 பேரும் கீழே விழுந்தனர். பஸ் உடனடியாக நிறுத்தப்பட்டது.

இருப்பினும் பைக்கில் வந்த பிளஸ் 2 மாணவன் பிரவீன் உயிரிழந்தார். அவருடன் வந்த 2 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக பஸ் மீது மோதிய பைக் திடீரென்று தீப்பிடித்தது. இந்த தீ வேகமாக பஸ்சுக்கும் பரவியது. இதனால் பஸ்சும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. முன்கூட்டியே பயணிகள், டிரைவர், கண்டக்டர்கள் வேகமாக வெளியே வந்தனர். இதனால் பஸ்சில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
இருப்பினும் பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. அந்த இடம் முழுவதும் கரும்புகையானத. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்து நடந்த இடம் மேம்பாலம் என்பதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications