இப்படி ஒரு சோதனையில் திண்டுக்கல்! திமுகவை தொடர்ந்து அதிமுகவும் கை கழுவுது..பாமகவுக்கு தாரைவார்ப்பு?
திண்டுக்கல்: லோக்சபா தேர்தலில் திண்டுக்கல் தொகுதியை கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோல அதிமுகவும் கூட்டணியில் இணைய இருக்கும் பாமகவுக்கு திண்டுக்கல் லோக்சபா தொகுதியை ஒதுக்கக் கூடும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் திண்டுக்கல் மாவட்டம் இருந்து வந்தது. ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் திண்டுக்கல் லோக்சபா தொகுதியில்தான் எம்ஜிஆரின் அதிமுக முதன் முதலாக தேர்தல் வெற்றியை பெற்றது.

திண்டுக்கல் தொகுதியைப் பொறுத்தவரை 1952 முதல் 1962 வரை காங்கிரஸ் வசம் இருந்தது. பின்னர் திமுக வாகை சூடியது. 1973 திண்டுக்கல் லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் அப்போதுதான் தொடங்கப்பட்ட அதிமுகவின் மாயத்தேவர் இரட்டை இலை சின்னத்தில் அமோக வெற்றியைப் பெற்றார். அதிமுகவுக்கும் அதன் நிறுவனர் எம்ஜிஆருக்கும் ஆகப் பெரும் நம்பிக்கையை விதைத்தது திண்டுக்கல் லோக்சபா தொகுதி இடைத்தேர்தல் வெற்றி. அதே மாயத்தேவர் 1980 தேர்தலில் திமுக வேட்பாளராகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1984, 1989, 1991-ல் அதிமுக வென்ற தொகுதி. அதிமுகவின் இன்றைய பொருளாளர் சீனிவாசனுக்கு 'திண்டுக்கல்' சீனிவாசன் என்ற அடைமொழியை கொடுத்த தொகுதி இது. 1996 முதல் 2014 தேர்தல் வரை தமாகா, அதிமுக, காங்கிரஸ் மாறி மாறி வெற்றி பெற்ற நிலையில் 2019 லோக்சபா தேர்தலில் திமுகவின் வேலுச்சாமி இத்தொகுதியில் அறிமுகமே இல்லாமல் அசத்தல் வெற்றியைப் பெற்றிருந்தார்.
பொதுவாக திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் திமுக, அதிமுக கட்சிகள் முதலில் போட்டியிட விரும்பும்; பின்னர் கூட்டணி கட்சிகளை சமாளிக்க ஒதுக்கி விடுவது வழக்கம்.
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் சிபிஎம் கட்சியின் பாண்டி, போட்டியிட்டு வெறும் 1.81% வாக்குகளைத்தான் பெற்றார். அதாவது அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸுக்கு அடுத்து 5-வது இடம்தான் சிபிஎம் கட்சிக்கு கிடைத்தது. 2019 லோக்சபா தேர்தலில் பாமக 2-வது இடத்தைப் பெற்றது. இத்தேர்தலில் பாமகவுக்கு 17.96% வாக்குகள் கிடைத்தன.
தற்போதைய தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு (சிபிஎம்) திண்டுக்கல் லோக்சபா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிபிஎம் வேட்பாளராக சச்சிதானந்தன் அறிவிக்கப்பட்டார். இத்தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் மைத்துனர் கண்ணன் போட்டியிடுவார் எனக் கூறப்பட்டு வருகிறது. தற்போது அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெறும் நிலைமை உருவாகி உள்ளது. அப்படி பாமக இடம் பெற்றால் திண்டுக்கல் தொகுதியை அக்கட்சிக்கு ஒதுக்கி சமாளித்துவிடவும் அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாம். 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பெரிய கட்சிகளான ஆளும் திமுகவும் எதிர்க்கட்சியான அதிமுகவும் திண்டுக்கல் லோக்சபா தொகுதியை கை கழுவி விடுவதை அக்கட்சி தொண்டர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது கள நிலவரம்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு!












Click it and Unblock the Notifications