அதிமுக பிரேக் இல்லா வண்டி.. அப்படியே தான் ஓடுது! கடைசியில் ஆக்சிடெண்ட் தான் ஆகும்! கிண்டலடித்த ஐ.பி!
திண்டுக்கல் : அதிமுக அரசு பிரேக் இல்லாத வண்டி கடந்த 10 வருடங்களாக அப்படித்தான் ஓடிக் கொண்டிருந்தது. கடைசியில் விபத்தில் தான் போய் முடியும் என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்திற்கு புதிதாக ரூ 3 கோடி செலவில் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று 03.08.22 நடைபெற்றது இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பி பெரியசாமி கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்," தமிழக முதல்வர் ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்திற்கு மூன்று கோடி செலவில் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அது பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தளபதியின் அரசு முனைப்பாக உள்ளது.

அமைச்சர் ஐ.பெரியசாமி
தமிழக கூட்டுறவுத்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு விவசாய நிலங்கள் இல்லாத விவசாயிகளுக்கு கூட கறவை மாடுகள் வாங்கவும் தீவனங்கள் வாங்கவும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இங்கு தற்பொழுது கியூட் என்ற நுழைவுத் தேர்வு கொண்டு வந்து உள்ள்து இதனால் இங்கு கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கல்வி கற்க முடியாத சூழ்நிலை உள்ளது.

அதிகார துஷ்பிரயோகம்
தமிழ்நாட்டில் கல்வி கற்கக்கூடிய மாணவ மாணவிகளுக்கு காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் சிறப்பு ஒதுக்கீடு என்பது இல்லை. எந்த ஒரு அதிகாரத்தையும் தவறாக பயன்படுத்தக் கூடாது. அமலாக்கத்துறையில் கால் வைக்கக்கூடிய தகுதி கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு கிடையாது. மத்திய அரசு அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வது தவறு அரசியல் லாபத்திற்காக செய்வது ரொம்ப நாள் நீடிக்காது.

உதய் மின் திட்டம்
மின் கட்டணம் உயர்வுக்கு காரணம் உதய் மின் திட்டம் தான். இதில் கையெழுத்திட்டது அதிமுக அரசுதான்
மத்திய அரசு கட்டாயம் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என கூறும் பொழுது அதை செய்வது தவிர வேறு வழி இல்லை மானியத்தை கொடுக்க மாட்டேன் மத்திய தொகுப்பில் இருந்து வழங்கக்கூடிய மின்சாரத்தை வழங்க மாட்டோம் என கூறும் பொழுது தமிழக அரசால் என்ன செய்ய முடியும்.
Recommended Video

பிரேக் இல்லாத வண்டி
உதய் மின் திட்டத்தில் கையெழுத்து போட்டு விட்டு கடந்த 7 வருடமாக மின் கட்டணத்தை உயர்த்தாமல் பல லட்சம் கோடி கடன் வைத்து விட்டு சென்றது அதிமுக அரசு தான். அதிமுக அரசு பிரேக் இல்லாத வண்டி கடந்த பத்து வருடங்களாக அப்படித்தான் ஓடிக்கொண்டு இருந்தது கடைசியில் எங்கே போய் முடியும் விபத்தில் தான் முடியும் அதுபோல் அதிமுக அரசு பல லட்சம் கோடி கடனில் விட்டுச் சென்றுள்ளது. தற்பொழுது தமிழக முதல்வர் மக்களை இந்த விபத்திலிருந்து காப்பாற்றி விட்டார்" என தெரிவித்தார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications