பண்ணை வீடு! 80 காரில் 500 பேரு.. ஓபிஎஸ்சையே மிரள வைத்த பசும்பொன்! அதிர்ந்து போன திண்டுக்கல் அதிமுக!
திண்டுக்கல் ; திண்டுக்கல் மாவட்ட அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர்கள் பசும்பொன் , சுப்பிரமணியன் தலைமையில் 80 வாகனங்களில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் தேனியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் -ஐ சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் ஆரம்பத்தில் அதிர்ஷ்டமும் ஆதரவும், எடப்பாடி பழனிச்சாமிக்கு இருந்தாலும் திடீரென மாறிய அரசியல் காலநிலையால் தற்போது அதிர்ஷ்ட காற்று ஓபிஎஸ் பக்கம் வீசி இருக்கிறது.
ஆதரவாளர்கள் எண்ணிக்கை சரிவு, மாவட்டச் செயலாளர்களின் ஒட்டுமொத்த புறக்கணிப்பு, பொதுக்குழுவில் நடந்த அவமானம் என அடுத்தடுத்து பின்னடைவுகளை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி தற்போது மீண்டும் ஃபார்முக்கு வந்திருக்கிறார்.

அதிமுக மோதல்
ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தனக்கான பதவி காலம் இருக்கிறது எனவும், தனது அனுமதி இல்லாமல் ஒப்புதல் இல்லாமல் கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது என அவர் தொடர்ந்த வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்திருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணையின் போது பல்வேறு கேள்விகளை முன்வைத்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

அதிகரிக்கும் செல்வாக்கு
இதனையடுத்து அவர் தரப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ்சை சந்தித்த ஆதரவு தெரிவிக்கும் ஒன்றிய செயலாளர்கள் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் உற்சாகமடைந்துள்ள ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அந்த எண்ணிக்கையை மேலும் அதிகரித்து அதிமுகவில் தனது செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள தயாராகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை கிழக்கு மேற்கு ஆகிய பகுதிகளில் மாவட்ட செயலாளர்களான திண்டுக்கல் சீனிவாசன் நத்தம் விஸ்வநாதன், ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் கட்சியில் தங்களுக்கு உரிய மரியாதை இல்லை எனவும் ஓ பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக சில நிர்வாகிகள் கூறினர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன், வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்ட கவுன்சிலர்கள் பலரும் ஓபிஎஸ்ஐ நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர், இந்த நிலையில் இன்று 80க்கும் மேற்பட்ட கார்களில் 500 அதிமுகவினர் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்திருக்கின்றனர்.

80 கார்களின் அணிவகுப்பு
ரெட்டியார்சத்திரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மற்றும் வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் ஏற்பாட்டின் பேரில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிளை கழக நிர்வாகிகள், பத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் இன்று 80 கார்களில் தேனீ நோக்கி புறப்பட்டுச் சென்றனர். இதை தொடர்ந்து பெரியகுளம் சென்று அவர்கள் ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதுவரை வந்த நிர்வாகிகள் ஐந்து பேர் பத்து பேர் என வந்த நிலையில் முதன்முறையாக 500க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் வந்து தன்னை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தானே இதை எதிர்பார்க்கவில்லை என ஓ பன்னீர்செல்வம் கூறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications