பழனி அருகே அதிக வெடிச் சப்தத்துடன் திடீர் அதிர்வு! வீடுகளை விட்டு வீதிக்கு அலறி ஓடிவந்த மக்கள்!

Subscribe to Oneindia Tamil

பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள ஆயக்குடி, கணக்கம்பட்டி, டி.கே.என். புதூர், கோம்பைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெடிச்சப்தத்துடன் கூடிய திடீர் அதிர்வு ஏற்பட்டதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சத்தத்தைத் தொடர்ந்து வீடுகள் அதிர்ந்ததாகவும், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் ஆடி அசைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், என்ன நடந்தது எனத் தெரியாமல் அச்சத்தில் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் திரண்டனர்.

Palani people

திடீரென ஏற்பட்ட இந்தச் சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பும் அச்சமும் நிலவியது. வெடிச் சப்தம் போன்ற சத்தம் எதனால் ஏற்பட்டது? வீடுகளில் அதிர்வு உணரப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.

இந்தச் சம்பவம் நில அதிர்வா, வெடிச் சப்தமா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் ஏற்பட்டதா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவத்திற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைத்த பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும்.

பழனி சுற்று வட்டாரப் பகுதிகளில் திடீரென ஏற்பட்ட இந்த அதிர்வு போன்ற உணர்வு அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+