திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திண்டுக்கல் சி.பி.எம். வேட்பாளராக மறைந்த இடதுசாரி தலைவர் என். வரதராஜன் மகன் கல்யாணசுந்தரம் போட்டி?

Google Oneindia Tamil News

சென்னை: திண்டுக்கல் சட்டசபை தொகுதி சி.பி.எம். வேட்பாளராக மறைந்த முதுபெரும் இடதுசாரி தலைவர் என். வரதராஜன் மகன் கல்யாணசுந்தரம் போட்டியிடக் கூடும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திருப்பரங்குன்றம், கந்தர்வக்கோட்டை (தனி), திண்டுக்கல், கோவில்பட்டி, அரூர் (தனி), கீழ்வேளூர் (தனி) ஆகிய 6 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.

புதுச்சேரியில் பரிதாபம்... அதிமுகவை விழுங்கும் பாஜக- 3 தொகுதிகள்தான் தர முடியுமாம் புதுச்சேரியில் பரிதாபம்... அதிமுகவை விழுங்கும் பாஜக- 3 தொகுதிகள்தான் தர முடியுமாம்

இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது. 6 தொகுதிகளிலும் வேட்பாளருக்கான வாய்ப்பு உள்ளவர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் மார்க்சிஸ்ட் கட்சி மாநில குழு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

என்.வி.என். மகனுக்கு வாய்ப்பு?

என்.வி.என். மகனுக்கு வாய்ப்பு?

திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் மறைந்த முதுபெரும் இடதுசாரி தலைவரும் 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவருமான என். வரதராஜன் மூத்த மகன் கல்யாணசுந்தரம் போட்டியிட வாய்ப்புகள் அதிகம் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.

3 முறை எம்.எல்.ஏ. N.Varadarajan.jpg

3 முறை எம்.எல்.ஏ. N.Varadarajan.jpg

1967-ம் ஆண்டு வேடசந்தூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. வாகவும் 1977, 1980 தேர்தல்களில் திண்டுக்கல் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றியவர் என். வரதராஜன். 2001-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை 3 முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராகவும் பணியாற்றினார் என்.வி.என் என்கிற என். வரதராஜன்.

நகர்மன்ற துணைத் தல்லைவர்

நகர்மன்ற துணைத் தல்லைவர்

அருந்ததியிருக்கான 3% உள் ஒதுக்கீட்டுக்காக என்.வரதராஜன் தலைமையில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனையடுத்தே திமுக அரசு அருந்ததியினருக்கு 3% உள் இடஒதுக்கீடு வழங்கியது. என். வரதராஜனின் மூத்த மகன் கல்யாணசுந்தரம் திண்டுக்கல் நகர் மன்ற துணைத் தலைவராகவும் பணியாற்றியவர்.

பாலபாரதிக்கு வாய்ப்பா?

பாலபாரதிக்கு வாய்ப்பா?

திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு 3 முறை எம்.எல்.ஏ.வாக திகழ்ந்தவர் பாலபாரதி. மார்க்சிஸ்ட் கட்சி விதிப்படி 4-வது முறையாக போட்டியிட முடியாது என்பதால் 2016 தேர்தலில் பாலபாரதிக்க் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போதைய தேர்தலில் பாலபாரதிக்காக கட்சி விதிகளை தளர்த்தி போட்டியிட அனுமதித்தாலும் ஆச்சரியம் இல்லை என்கின்றனர் மார்க்சிஸ்ட் வட்டாரங்கள்.

English summary
Senior Left Leader N. Varadarajan's Son may contest as CPM Candidate in Dindigul constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X