சோறு இறங்கும் போது கூறு போட்ட கும்பல்! மனைவி கண்முன் நடந்த கொலை! ’கொலை’ நகராகும் பிரியாணி நகரம்?
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்திருந்த ரவுடி வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில் இந்தாண்டு மட்டும் பல பழிக்குப் பழி கொலை சம்பவங்கள் அரங்கேறி வரும், நிலையில், பிரியாணி நகரம் 'கொலை' நகராகி வருவதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் இருந்து மொட்டணம்பட்டி செல்லும் சாலையில் உள்ளது. எம்.ஜி.ஆர் நகர். இப்பகுதியை சேர்ந்தவர் வினோத் என்பவருக்கு திருணமாகி, மனைவி மஞ்சுளா உடன் வசித்து வந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.

இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு சுள்ளான் என்ற சுள்ளான் ரமேஷ் என்பவரை திண்டுக்கல்லில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வினோத் தற்பொழுது ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
மேலும் திண்டுக்கல்லில் இருந்தால் எதிரிகளால் தனது உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் தற்பொழுது திருப்பூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை திருப்பூர் அழைத்துச் செல்வதற்காக தனது வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று இரவு தனது வீட்டில் தாய், மனைவி, அக்காவுடன் அமர்ந்து வினோத் உணவு அருந்தி கொண்டிருந்தார். அப்பொழுது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து தாய், மனைவி, குழந்தைகள் கண் முன்னே வினோத்தை வெட்டினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த வினோத் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தங்கள் கண் முன்னே வினோத் வெட்டப்படுவதை கண்டு அவரது தாய், மனைவி , குழந்தைகள் அலறி துடித்தனர். இருந்த போதும் அந்த நபர்கள் வினோத்தை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அருகில் இருந்தோர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் வினோத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். முதற்கட்ட விசாரணையில் சுள்ளான் ரமேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக வினோத் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிய வந்திருக்கிறது.
கடந்த 2020 மே மாதம் 9ஆம் தேதி பாரதிபுரம் கருப்பசாமி கோவில் அருகே சுள்ளான் என்ற சுள்ளான் ரமேஷ் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாரதிபுரத்தைச் சேர்ந்த டைசன் வினோ, ஜான்சன் வினோ, செல்வராஜ், மாயக்கண்ணன், வினோத், வேடபட்டியைச் சேர்ந்த அழகர் ஆகியோர் ரமேஷை வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. இதை அடுத்து அவர்கள் ஆறு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
விவகாரம் ஒன்றில் தலையிட்டதால் ரமேஷ் கொலை செய்யப்பட்டதாக அப்போது டைசன் வினோ தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் சுள்ளான் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய பாரதி புரத்தை சேர்ந்தசெல்வராஜ் சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்டார். தற்போது சுள்ளான் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய வினோத்தும் கொலை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளில் திண்டுக்கல்லில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சாதாரண குடி போதை தகராறு, குடும்பத்த தகராறு கொலைகள் அல்லாமல் பழிக்கு பழி கொலைகள் அதிகரித்து வருவது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய குற்றப்பிரிவு போலீசாரும், உளவுத்துறை போலீசாரும் உரிய முறையில் பணி செய்கிறார்களா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. திண்டுக்கல்லில் கடந்த ஆண்டு ஒரு ரவுடி கொலை செய்யப்பட்டதும் அதற்கு பதிலுக்கு பதிலாக சிலர் கொலை செய்யப்பட்டனர். இதேபோல தற்போதும் பழிக்கு பழி கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் காவல்துறை அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து இருந்திருக்கிறது.
-
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications