"500 வேலைக்கு அப்ளை செய்தேன்.. ஒன்றும் கிடைக்கவில்லை!" துபாயில் இந்தியர் பகிர்ந்த அதிர்ச்சி உண்மை!

Subscribe to Oneindia Tamil

துபாய்: வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 4 மாதங்களில் சுமார் 500 வேலைகளுக்கு விண்ணப்பித்த போதிலும் வேலை கிடைக்காமல் திண்டாடி வருகிறார் துபாயில் வசிக்கும் இந்திய இளைஞர்! குறைந்த சம்பளம், நீண்ட வேலை நேரம் மற்றும் நிதி நெருக்கடி என ஏகப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் கூட இப்போது துபாயில் நிலைமை மோசமாக இருப்பதால் வேலையே கிடைக்கவில்லை என்று அவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

இந்தியர்கள் அதிலும் குறிப்பாக தென்னிந்தியர்கள் பலரும் அமீரகத்திற்கு வேலைக்காக செல்வதை வழக்கமாகவே வைத்துள்ளனர். இதற்கிடையே துபாயில் இப்போது நிலைமை மோசமாக இருப்பதாகவும் வேலையே கிடைக்கவில்லை என்றும் அங்கு வசிக்கும் இந்தியர் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது இந்த போஸ்ட் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

Dubai india UAE

கேரள இளைஞர்

கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த 28 வயதான ஸ்ரீராம் சக்கோலங்கரா.. துபாயில் வேலை செய்து வந்த இவர் கடந்த ஏப்ரல் மாதம் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, புதிய வேலையை தேட தொடங்கியிருக்கிறார். கடந்த நான்கு மாதங்களில் மட்டும் சுமார் 400 முதல் 500 நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து இருக்கிறார். ஆனால், எங்கும் எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

துபாயில் பிறந்து வளர்ந்த ஸ்ரீராம், கோழிக்கோட்டில் உள்ள என்ஐடியில் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தார். பின்னர் பெங்களூரில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய அவர், 2023ல் மீண்டும் துபாய் திரும்பினார். வங்கி, ஊடகம் மற்றும் எட்டூ-டெக் துறைகளில் மார்க்கெட்டிங், தகவல் தொடர்பு மற்றும் கிரியேட்டிவ் ஸ்ட்ராடஜி பணிகளில் அனுபவம் கொண்டிருந்தாலும் இவருக்கு இப்போது சரியான வேலை கிடைக்கவில்லையாம்.

வேலை கிடைக்கவில்லை

கடைசியாக தகவல் தொடர்பு பிரிவில் வேலை செய்து வந்த அவர், கடந்த ஏப்ரல் மாதம் வேலைவிட்டுள்ளார். அதன் பிறகு வங்கி, ரியல் எஸ்டேட், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் தகவல் தொடர்பு மற்றும் பிராண்டிங் தொடர்பான பணிகளுக்கு தொடர்ந்து விண்ணப்பித்து வந்துள்ளார். பல நிறுவனங்கள் அவரது ரெஸ்யூமை பார்த்து வேலைக்கு அழைத்துள்ளனர். ஆனால், அவர் முன்பு பெற்ற சம்பளத்தின் நான்கில் ஒரு பங்கு மட்டுமே தர ரெடியாக இருந்துள்ளன. இன்னும் சில நிறுவனங்கள் மாத சம்பளமே தர மாட்டோம்.. பெர்பாமன்ஸ் அடிப்படையிலான ஊதியத்தை மட்டுமே தருவோம் என்றும் சொல்லி அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல், பல நிறுவனங்கள் தினமும் 9 முதல் 10 மணி நேரம், வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்ததாக அவர் கூறினார். துபாய் போன்ற பணக்கார நகரத்தில் இவர்கள் சொல்லும் சம்பளத்தில் வாழ்வது மிகவும் கடினம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விசா சிக்கல்

அவர் கடந்த ஏப்ரல் மாதம் தனது வேலையை ராஜினாமா செய்திருந்த நிலையில், அவரது வேலை விசா தானாக ரத்தானது. இதனால் அதுவும் இப்போது பிரச்சினையாக மாறியிருக்கிறது. இப்போது விசிட் விசாவில் தங்கி வேலை தேடி வரும் ஸ்ரீராம், ஏற்கனவே இந்த விசாவை இரண்டு முறை புதுப்பித்துவிட்டார். வரும் அக்டோபர் மாதம் விசா காலாவதியாகும் நிலையில், அதற்குள் வேலைக்கு சேர வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளார் ஸ்ரீராம்!

வேலை கிடைக்காவிட்டால் இந்தியா திரும்பிவிடலாம் என்று ஸ்ரீராம் முடிவெடுத்திருந்தார். தனது நிலைமை விளக்கி அவர் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்றை போட்ட நிலையில், அதற்கு கிடைத்த வரவேற்பால் தனது முடிவை மாற்றிக் கொண்டாராம்.

வேதனை

வேலை தேடி அலைவது வேதனை அளிக்கும் வகையில் இருப்பதாக குறிப்பிடும் ஸ்ரீராம், இப்போது அவரது 61 வயதான தந்தை மட்டுமே குடும்பத்தின் அனைத்து செலவுகளையும் கவனித்து வருவதாகவும் தனது சேமிப்பும் படிப்படியாக குறைந்து குறைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இப்போது ஒரு பக்கம் வேலை தேடி வரும் ஸ்ரீராம், இன்னொரு பக்கம் சமூக வலைத்தளங்களிலும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். துபாயில் வேலை தேடுவதையே வீடியோவாக வெளியிட்டும் வருகிறார்.

துபாயில் நல்ல வேலை கிடைக்கவில்லை என்றால், பெங்களூர், மும்பை அல்லது ஹைதராபாத் நகரங்களுக்கு சென்று மீண்டும் வேலை தேட திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ள ஸ்ரீராம், இன்னும் சில மாதங்களில் வேலைவாய்ப்பு சந்தை சீராகும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். எப்படியாவது துபாய் சென்றுவிட்டால் நல்ல வேலை கிடைத்து வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என பல ஆயிரம் இந்தியர்கள் நினைத்து வரும் நிலையில், அங்கு நிலைமை இந்தளவுக்கு மோசமாக இருப்பது பகீர் கிளப்புவதாகவே இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+