மேஜர் சிக்கல்! ரொம்ப கஷ்டமான முடிவுதான்! இந்திய அணிக்கு தேவையான மாற்றம்! "இது" மட்டும் நடந்தா.. மாஸ்
துபாய்: ஆசிய கோப்பை 2022 தொடரில் ஆடி வரும் இந்திய அணிக்குள் முக்கியமான பிரச்சனை ஒன்று ஏற்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. சூப்பர் 4 தொடரில் பாகிஸ்தான் வெற்றியை பதிவு செய்து நம்பிக்கையாக உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து ஏமாற்றம் அடைந்தது.
இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக இன்று நடக்கும் ஆசிய கோப்பை ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பைனல்ஸ் செல்வதற்கு இன்றைய ஆட்டம் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஜடேஜா
இந்திய அணியில் தற்போது ஜடேஜா இல்லை. ஜடேஜாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் காயம் குணமடைய 2-3 வாரங்கள் எடுக்கும். அதன்பின் அவர் தேசிய பயிற்சி அகாடமிக்கு செல்ல வேண்டி இருக்கும். அங்கு இவர் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அங்கு இவர் உடல்நிலை தேறுவதற்கு 3-4 வாரங்கள் ஆகும். இதனால் இவர் மொத்தமாக அணிக்கு திரும்ப ஒன்றரை மாதத்திற்கு மேல் ஆகும். இதனால் அவர் இந்த தொடரில் ஆட முடியாது.

சிக்கல்
அதேபோல் உலகக் கோப்பை டி 20 தொடரிலும் இவர் ஆட முடியாது. இதுதான் தற்போது இந்திய அணிக்கு பெரிய சிக்கல். இதனால் இந்திய அணிக்கு ஒரு ஸ்பின் ஆல் ரவுண்டர் குறைவாக உள்ளார். நன்றாக பவுலிங் செய்ய கூடிய ஸ்பின் பவுலர் தேவை. அதோடு பேட்டிங்கும் செய்ய வேண்டும். அப்படி ஒரு பவுலர் தேவை. அந்த இடத்தில் எடுக்கப்படும் வீரர் அஸ்வின் அல்லது அக்சர் பட்டேலாக இருக்கலாம்.

மேஜர் பிரச்சனை
அக்சர் பட்டேல் ஏற்கனவே ஜடேஜா இடத்தில் ஆடி நிரூபித்து இருக்கிறார். அதேபோல் இவர் பேட்டிங்கும் செய்ய கூடியவர். அஸ்வினின் டி 20 ரெக்கார்ட் சரியில்லை என்பதால் அக்சர் பட்டேலை அந்த இடத்தில் எடுக்கலாம். இந்திய அணிக்கு தற்போது இருக்கும் மேஜர் சிக்கல் 6வது பவுலர்தான். ஏனென்றால் பாண்டியாவை 4 ஓவர்கள் முழுமையாக போட விட கூடாது. இன்னொரு வீரர் 2 ஓவர்கள் வீசினால் சரியாக இருக்கும்.

ஓவர்கள்
அப்படிப்பட்ட ஓவர்களை வீசுவதற்கு அக்சர் பட்டேல் போன்ற வீரர்தான் சரியாக இருப்பார். தற்போது சாஹல் விக்கெட்டுகளை எடுப்பது இல்லை. அப்படி இருக்க அக்சர் பட்டேல் கூடுதல் விக்கெட்டுகளையும் எடுப்பார். அணிக்கு நல்ல சமநிலை கிடைக்கும். சாஹலுக்கு பதிலாக அஸ்வின், ஹூடாவிற்கு பதிலாக அக்சர் பட்டேல் என்று களமிறங்கினால் ரவியோடு சேர்ந்து 3 ஸ்பின் பவுலர்கள் அணிக்கு இருப்பார்கள். அணியில் 6 பவுலர்கள் காம்பினேஷனும் இருக்கும்.

அக்சர் பட்டேல்
இந்திய அணிக்கு இது தேவையான மாற்றம். ஏனென்றால் ஜடேஜா அடிக்கடி காயம் அடைகிறார். அவரை நம்பிக்கொண்டே இருப்பதற்கு பதிலாக நல்ல ஆல் ரவுண்டர் ஒருவரை உருவாக்க வேண்டும். ஸ்பின் ஆல் ரவுண்டர் தேவை என்பதால் அக்சர் பட்டேலுக்கு நிறைய வாய்ப்பு கொடுத்து அவரை மெருகேற்ற வேண்டும். இந்த மாற்றம் மட்டும் நடந்து கிளிக் ஆனால் இந்திய அணி சிறப்பான பார்மிற்கு மீண்டும் திரும்பும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications