பேட்டை தூக்கிக்கிட்டு அடிக்க பாய்ந்த வீரர்! சேரை வீசி தாக்கிய பேன்ஸ்.. "அந்த" காரணம்! நடந்தது என்ன?
துபாய்: 2022 ஆசிய கோப்பை தொடரில் நேற்று பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடந்த போட்டியில் நடைபெற்ற சில சம்பவங்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
ஆசிய கோப்பை தொடரில் அதிரடியாக ஆடி வரும் பாகிஸ்தான் அணி இந்த முறை பைனல் சென்றுள்ளது. தொடக்கத்தில் இருந்து சுவாரசியமாக சென்ற ஆட்டத்தில் கடைசி ஓவரில் பாகிஸ்தான் திரில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் போன்ற அணியை எப்படி டிபன்ஸ் செய்ய வேண்டும், எப்படி கடைசி நொடி வரை விக்கெட் எடுத்து அணியை கட்டுப்படுத்த வேண்டும் என்று பாடம் எடுத்தது ஆப்கானிஸ்தான் அணி.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக என்ன மாதிரியான பவுலிங் வியூகத்தை பயன்படுத்த வேண்டும் என்று குறைந்த ஸ்கோர் மேட்சிலேயே நேற்று ஆப்கானிஸ்தான் பாடம் எடுத்தது.

என்ன நடந்தது?
ஷார்ஜாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 129/6 ரன்கள் எடுத்தது. 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் பாகிஸ்தான் ஆடியது. பாபர் ஆஸம் மீண்டும் மோசமாக சொதப்பி ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். ரிஷ்வான் 20, ஃபகார் 5 ரன்கள் என்று சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். அதன்பின் இப்திகார், சதாப் கான் ஆகியோர் சிறப்பாக ஆடினார்கள்.

மோதல்
இருவரும் தலா 30, 36 ரன்கள் எடுத்து நம்பிக்கை கொடுத்தனர். அதன்பின் வரிசையாக முகமது நவாஸ், குஸ்தில் ஷா, ஹாரிஸ் ராப் என்று பல வீரர்களை ஆப்கானிஸ்தான் அணி விக்கெட் எடுத்தது. ஆசிப் அலி மட்டும் களத்தில் இருந்தார். அவர் 19வது ஓவரில் 5வது பந்தில் அஹமது மாலிக் ஓவரில் சிக்ஸ் அடித்தார். இந்த சிக்ஸ் அடித்த பின் அவர் அஹமது மாலிக்கை ஒரு மாதிரி முறைத்து பார்த்தார். மாலிக்கும் பதிலுக்கு அவரை முறைத்து பார்த்தார்.

கொடூரம்
இந்த நிலையில் அடுத்த பந்திலேயே அஹமது மாலிக் ஓவரில் ஆசிப் அலி அவுட் ஆனார். இந்த விக்கெட் போனதும் பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி ஆப்கானிஸ்தான் பவுலர் அஹமது மாலிக்கை பேட்டால் தாக்க சென்றதாக வீடியோ வெளியாகி உள்ளது. ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால்.. முதலில் அஹமது மாலிக்தான் ஆசிப் அலி முகத்திற்கு அருகே போய் மோசமாக நடந்து கொண்டார். அவரின் முகத்திற்கு முன் கையை நீட்டி திமிராக கொண்டாடினார்.

சண்டை
அதோடு ஆசிப் அலி திரும்பி செல்லும் போது அவரின் முதுகில் முட்டுவது போல அஹமது மாலிக் நெஞ்சால் முட்டினார். இதனால் கோபம் அடைந்த ஆசிப் அலி, திரும்பி பார்த்து அவரை அடிப்பது போல சென்றார். இதற்கு அவரும் சண்டைக்கு வா என்று மல்லுக்கு நின்றார். இதற்கு பதிலடி தரும் விதமாக ஆசிப் அலியும் பேட்டை தூக்கிக்கொண்டு அவரை தாக்குவது போல சென்றார். அதற்குள் ஆப்கானிஸ்தான் வீரர்கள் வந்து இரண்டு தரப்பிற்கும் சமாதானம் செய்தனர்.

மோசம்
ஆட்டம் முடிந்த பின் பாபர் ஆஸம் இருவரையும் சமாதானமாக செல்லும்படி கூறியதால் இரண்டு பேரும் கை குலுக்கி சமாதானமாகி சென்றனர். இந்த மோதல் காரணமாக ரசிகர்கள் இடையிலும் மோதல் ஏற்பட்டது. ரசிகர்கள் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். மைதானத்தில் ரசிகர்கள் இருக்கையில் மாறி மாறி இரண்டு அணி ரசிகர்களும் தாக்கிக்கொண்டனர். பலர் சேர்களை வீசி எறிந்து கொடூரமாக சண்டை போட்டனர். இதனால் மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications