ஒரே ஒரு கேட்ச்..தோனியை மறந்துவிட்டு கிருஷ்ணப்பா கவுதமை விட்டு விளாசும் சிஎஸ்கே ரசிகாஸ்.. 9 கோடிப்பே
துபாய்: டெஸ்ட் போட்டி ஆடி ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளான தோனியை கிருஷ்ணப்பா கவுதம் காப்பாற்றி விட்டார்.
Recommended Video
ஒரு பந்து மொத்த நிலவரத்தையும் தலைகீழாக மாற்றிவிட்டதால் அத்தனை பேர் கோபமும் கிருஷ்ணப்பா கவுதம் மீதுதான்.
ஐபிஎல் ஏலத்தின்போது 9.25 கோடி ரூபாய் என்ற பெரிய தொகையை கொடுத்து எடுக்கப்பட்டவர்தான் கிருஷ்ணப்பா கவுதம். ஆனால், இதுவரை அவரை சிஎஸ்கே லைன்-அப்பில் களமிறக்கவில்லை.
நேற்றைய போட்டியில், அதுவும் பரபரப்பான கடைசி நேர முக்கிய கட்டத்தில் சப்ஸ்ட்டிடியூட் ஃபீல்டராக லாங் ஆப் திசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார் அவர்.

என்ன நடந்தது?
ஆட்டம் ரொம்பவே பரபரப்பாக போய்க் கொண்டிருந்த நேரம் அது. டெல்லியின் கடைசி அங்கீகரிக்கப்பட்ட பேட்ஸ்மேன் என்றால் அது ஹெட்மையர்தான். எதிர்முனையில் அக்சர் பட்டேல் நின்று கொண்டிருந்தார். 18 வது ஓவரை வீசினார் பிராவோ. ஃபுல்டாஸ் பந்து ஒன்றை, பிராவோ வீச அதை தூக்கியடித்தார் ஹெட்மையர். அது நேராக கவுதம் கையில் சென்று விழுந்தது. மிகவும் எளிதாக பிடிக்கப்பட வேண்டிய கேட்ச்தான் அது. பந்தை பார்த்து நின்ற இடத்தில் நின்றே பிடிக்க முடியும். ஒரு அடி கூட ஓடத் தேவையில்லாமல், அல்வா மாதிரி வந்து விழுந்தது அந்த பந்து. ஆனால், அந்த கேட்ச்சை விட்டார் கவுதம். அத்தோடு, அது பவுண்டரிக்கும் ஓடிச் சென்று வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது.

நிலைமை மாறியது
அதுவரை பந்துக்கு மேல் ரன் தேவை என்ற நிலையிருந்த டெல்லி அணிக்கு அதன் பிறகு, பந்தை விட ரன்கள் குறைவாக எடுத்தால் போதும் என்ற நிலை உருவானது. கவுதம் அந்த கேட்ச்சை இந்திய ஃபீல்டர்களுக்கு இயல்பாக வரக்கூடிய, கப் வகை கேட்ச் யுத்திக்கு மாறாக, ரிவர்ஸ் கப் வகையில் கையை வைத்து பிடிக்க முயன்றதுதான் அதை மிஸ் செய்ய காரணமாக மாறியது. பொதுவாக ஆஸ்திரேலிய வீரர்கள்தான் பந்தை இந்த வகையில் கேட்ச் பிடிப்பார்கள். அவர்களுக்கு அது பள்ளிக் கூட காலத்திலிருந்தே பழக்கமானது. ஆனால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அப்படி பிடிப்பதில்லை. வெகுவாக பயிற்சி பெற்ற பிறகுதான், அது மாதிரி கையை வைத்து கேட்ச் பிடிப்பது வழக்கம். ஆனால் ஸ்டைல் என்று நினைத்தாரோ என்னவோ கவுதம் அப்படி கையை வைத்து கேட்ச்சை மிஸ் செய்தார்.

கவுதம் மீது கடுப்பு
இதனால் கவுதமை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டனர். இதற்காகவா 9 கோடி கொடுத்தோம், இந்த கேட்சை பள்ளிக் குழந்தை கூட பிடிக்குமே என்று வறுத்தெடுக்க துவங்கினர். இந்த நிலையில்தான், தோனி 27 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்து டெஸ்ட் போட்டி ஆடியதால் சிஎஸ்கே அதிக ரன்களை எடுக்க முடியாமல் தோற்றது என்பது மறந்து போய் கவுதம் கேட்ச் விட்டதால்தான் தோற்றது என்று தோனி ரசிகர்கள் திசை திருப்பி விட்டதாக மீம்ஸ்கள் சுற்றி வருகின்றன.

இப்படி பண்ணிட்டீங்களே
முதல்வன் படத்தில் ரகுவரன் கதாப்பாத்திரம், அர்ஜுன் கதாப் பாத்திரத்தை சுட முயன்றதாக திடீரென பழியை போட்ட மாதிரி கவுதம் மீது பழி போட்டு விட்டதாக கூறுகிறது இந்த மீம்.

பழியை ஏத்துக்கப்பா
கவுதமை பழி ஏற்றுக்கச் சொல்லி தோனி ரசிகர்கள் கெஞ்சி கேட்பதை போல கிண்டல் செய்கிறது இந்த மீம்.

தோனியை காத்த வீரன்
ஒரு போர் வீரனை போல கவுதம்தான், தோனியை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் என்கிறது இந்த மீம்.

நழுவிய தோனி
கவுதமை எல்லோரும் விமர்சனம் செய்யும்போது தோனி இப்படித்தான் நைசாக நழுவிவிட்டார் என்று கிண்டல் செய்கிறது இந்த படம்.

அப்பா மட்டும் வந்துரக்கூடாதாம்
சிஎஸ்கே-டெல்லி போட்டி நடைபெற்றபோது, தோனி மகள் ஜிவா விசில் ஊதியபடி ஊக்கம் கொடுத்தார். முக்கிய கட்டம் வந்தபோது, கும்பிட்டுக் கொண்டிருந்தார். அணி வெற்றிக்காக கும்பிடுகிறார் என்று எல்லோரும் நினைத்திருந்தால் இந்த மீம், தோனி பேட்டிங்கிற்கு வந்து விட கூடாது என்று மகள் வேண்டுவதாக கூறுகிறது. அதாவது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிக ரன்களை எடுக்கனுமாம். அதைத்தான் ஜிவா வேண்டுகிறாராம்.

ஏமிரா இதி
கவுதம் கேட்சை விட்டதும், சிஎஸ்கே ரசிகர்கள் ரியாக்ஷன் இதுதான் என்கிறது இந்த மீம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications