டேட்ஸ் சாலட், கேரட் தந்தூரி.. பிரதமர் மோடிக்கு அமீரக அதிபர் அளித்த விருந்து.. ஸ்பெஷல் மெனு என்ன?
துபாய்: ஐக்கிய அரபு அமீரமகத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபரை சந்தித்து பேசினார். தொடர்ந்து அமீரக அதிபர் பிரதமர் மோடிக்கு டேட்ஸ் சாலட், கேரட் தந்தூரி என பலவகை உணவுகளை விருந்தளித்தார்.
பிரான்ஸ் நாட்டில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்டோரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது ரஃபேல் உள்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி அங்கிருந்து நேராக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு ஒருநாள் பயணமாக சென்றார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபிக்கு வந்த பிரதமர் மோடியை அமீரக இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஷயாத் அல் நஹ்யான் வரவேற்றார். இதையடுத்து பிரதமர் மோடி, அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது எரிபொருள், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். மேலும் இருநாடுகள் சார்ந்த வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த சந்திப்புக்கு பிறகு பேசிய பிரதமர் மோடி, உள்ளூர் கரன்சி மூலமாகவே இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான வர்த்தகத்தை தொடங்க இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் தற்போது 85 பில்லியன் டாலராக உள்ளது. இது 100 பில்லியன் டாலரை தாடும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

இதன் தொடர்ச்சியாக பல்வேறு ஒப்பந்தங்கள் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரக அதிபர் விருந்து அளித்தார். அந்த உணவு விருந்தில் பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்த லிஸ்ட் வெளியானது. வகை வகையான உணவு வகைகள் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதாவது, ஸ்டார்ட்டர் உணவாக ஹரீஸ் எனப்படும் கோதுமையில் செய்த டிஷ், டேஷ் சாலட் ஆர்கானிக் காய்கறிகளை கொண்டு தயாரான சாலட், மசாலா சாஸில் பொறிக்கப்பட்ட காய்கறிகள் உள்ளிட்ட உணவுகள் பரிமாறப்பட்டுள்ளன. முற்றிலும் வெஜிடேரியன் வகை உணவு வகைகளே பரிமாறப்பட்டுள்ளது. அதன் பிறகு மெயின் டிஷ் ஆக கருப்பு உளுந்து மற்றும் கோதுமையில் தயாரான உணவு மற்றும் காலிபிளவர் கேரட் தந்தூரி ஆகியவை சேர்த்து பரிமாறப்பட்டுள்ளன.
விருந்தின் கடைசியாக இனிப்பு வகையாக பருவகாலங்களில் கிடைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்களை கொண்டு செய்யப்பட்ட பாயாசம் பரிமாறப்பட்டது. பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட அனைத்து உணவுகளும் வெஜிடபிள் ஆயிலில் தயாரிக்கப்பட்டவை. பால் அல்லது முட்டை பொருட்கள் எதுவும் இல்லாத உணவே பரிமாறப்பட்டுள்ளது.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications