ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை.. டி20 போட்டியில் டெஸ்ட் மேட்ச் ஆடிய தோனி.. வைரலாகும் மீம்ஸ்
துபாய்: டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய ஐபிஎல் லீக் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சிஎஸ்கே தோற்க கேப்டன் தோனியின் ஆமை வேக நிதான ஆட்டம் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. கூடுதலாக 10 ரன்களை எடுத்திருந்தாலும் சிஎஸ்கே வெற்றி பெறும் சூழல் இருந்த இந்த போட்டியில், ஜடேஜா அல்லது பிராவோவை களமிறக்காமல், தோனி முன்கூட்டியே வந்து பந்துகளை அதிகம் சாப்பிட்டதால்தான் சிஎஸ்கே அணியால் 20 ஓவர்கள் முடிவில் 136 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.
இத்தனைக்கும் 20 ஓவர்கள் முடியும்போது 5 விக்கெட்டுகள்தான் போயிருந்தது. தோனி மட்டும் பந்துகளை அதிகமாக எடுத்துக் கொண்டு அதை விட குறைவாக ரன்னை அடிக்காமல் அதிகமாக அடித்திருந்தால் ஆட்டத்தின்போக்கே வேறு மாதிரி போயிருக்கும். ஆனால் 27 பந்துகளில் 18 ரன்கள் அடித்து கிட்டத்தட்ட டெஸ்ட் போட்டி போல விளையாடியிருந்தார் தோனி.

தொடர்ந்து தோல்வி
ஒருவேளை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதால், பரிட்சாத்த முயற்சிகளில் தோனி இறங்கியிருக்க கூடும். ஆனால் தோல்வி தோல்விதானே. அதுவும் தொடர்ந்து இரு போட்டிகளில் தோற்பது அடுத்த சுற்றுகளில் அணி வீரர்கள் நம்பிக்கையை குலைக்காதா என்ற கேள்வி எழாமல் இல்லை.

12 வருடங்களில் முதல் முறை
ஐபிஎல் துவங்கிய கடந்த 12 ஆண்டுகளில் இதுதான் முதல் முறையாக 25 பந்துகளுக்கு மேல் சந்தித்தும் தோனியால் ஒரு சிக்ஸர் அல்லது பவுண்டரியை கூட அடிக்க முடியவில்லை. இது ஒரு சோக சாதனைதான். ஆம்.. நேற்றைய போட்டியில் அவர் பவுண்டரி அல்லது சிக்சர் அடிக்கவில்லை. இந்த நிலையில்தான் தோனி பேட்டிங் பற்றி மீம்ஸ் வைரலாக சுற்றி வருகிறது.

கேம் சேஞ்சர்
போட்டியை மாற்றக் கூடிய வீரர்கள் என்ற பெயரில் ஒவ்வொரு சீசனிலும், வீரர்களுக்கு பாயிண்ட்கள் கொடுப்பார்கள். தினமும் போட்டியின்போது இப்படி ஒரு பட்டியலை டிவியில் காண்பிப்பார்கள். தோனி அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தால் எப்படி இருக்கும் என்று கிண்டல் செய்கிறது இந்த மீம். அதாவது எதிரணிக்காக போட்டியை மாற்றக் கூடியவர் தோனி என்கிறது.

பந்தை சாப்பிட்டார்
தோனி பேட்டிங் செய்ய பந்துகளை எதிர்கொண்ட மாதிரி தெரியவில்லை. ஏதோ பந்தியில் குலோப் ஜாமுன் சாப்பிட உட்கார்ந்தவர் மாதிரி பந்துகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தார் என்று கிண்டல் செய்கிறது இந்த மீம்.
Recommended Video

ஸ்பார்க் யாருக்கு இல்லை
கடந்த சீசன் ஐபிஎல் தொடரில், இளைஞர்களிடம் ஸ்பார்க் இல்லை என்றார் தோனி. ஆனால், ருத்துராஜ் 5 போட்டிகளில் 311 ரன்களை எடுத்துள்ளார். தோனி கடந்த 25 போட்டிகளில் மொத்தமே 266 ரன்கள்தான் எடுத்துள்ளார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் அவர் எடுத்த ரன் 47 மட்டுமே என்கிறது இந்த மீம்ஸ்.

புஜாரா, ரஹானே
புஜாரா, ரஹானே போன்ற டெஸ்ட் பேட்ஸ்மேன்கள், தோனி பேட்டிங் செய்யும் வேகத்தை பார்த்து இப்படித்தான் சிரித்தபடி இருப்பார்கள் என்கிறது இந்த மீம்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications