தோனி எதிர்ப்பால் அம்பையர் வைடு தராதது தப்பில்லையாமே.. ரூல்ஸ் சொல்லுது.. மீம்ஸ்சும் தெறிக்குது
துபாய்: அம்பையர் வைடு கொடுக்கப் போனபோது தோனி கத்தி வாக்குவாதம் செய்ததால், அவர் தனது முடிவை கை விட்டதுதான் இப்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சை விஷயமாக மாறியுள்ளது.
18.2 வது ஓவரின்போது ரஷீத் கானுக்கு தாக்கூர் வீசிய பந்து வைடாக போனது. எனவே வைடு கொடுக்க நடுவர் பால் ரைஃபல் கையை அகல விரிக்கச் சென்றார். ஆனால் தோனி கோபத்தோடு, இது வைடு இல்லை என்று, வாக்குவாதம் செய்தார். அவரது குரலையும், ஆவேசத்தையும் பார்த்த நடுவர் சட்டென முடிவை மாற்றி வைடு இல்லை என பஞ்சாயத்தை முடித்துவிட்டார்.
நடுவர் தனது முடிவை எப்படி மாற்றலாம்.. தோனி கோபப்பட்டால் நடுவர் அழகான வைடு பந்தை கூட இல்லை என கூறுவாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

நடுவர் செய்தது தப்பில்லை
வெற்றி இலக்கை ஹைதராபாத் அணி எட்டிப் பிடிக்க வாய்ப்பு இருந்தபோது இந்த வைடு தரப்படாததுதான் சர்ச்சைகள் அதிகரிக்க காரணம். அதேநேரம், கிரிக்கெட் விதிமுறைகள்படி, நடுவர் பால் செய்தது தப்பு இல்லை. ஏனெனில், நடுவர் தனது முடிவை மாற்றம் செய்து கொள்ளலாம், அதை முறைப்படி செய்து கொண்டால் பிரச்சினை இல்லை என்ற சலுகை தரப்பட்டுள்ளது. அதை பால் பயன்படுத்தியுள்ளார். ஆனால் வைடு என்பது நன்கு தெரிந்தும் ஏன் நடுவர் வைடு தரவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பாக மீம்கள் சுடச் சுட பறக்கின்றன.

ஏழாம் அறிவு தோனி
ஏழாம் அறிவு திரைப்படத்தில், டாங் லீ, கதாப்பாத்திரம், நோக்கு வர்மத்தால், எதிராளியை கட்டிப்போடும். அதேபோல இவர் தோனி லீ. பார்வையாலே எதிரில் நிற்பவரை கட்டுப்படுத்திவிடுவார் என்று சொல்கிறது இந்த மீம்.

ஆடு திருடு போகல
சூனா பானா ஆட்டை திருட.. ஆட்டு உரிமையாளர் பஞ்சாயத்தை கூட்ட.. சூனா பானா மிரட்ட.. ஆடு திருடு போன மாதிரி கனவு கண்டேன் என்று பிராது கொடுத்தவர் பல்டியடிப்பார். இதுவும் அப்படித்தான் இருக்கிறது.

அதுக்கு என்ன இப்போ
அது பக்கா வைடு என்று, பிற அணி ரசிகர்கள் ஆணித்தரமாக கூறி வருகிறார்கள். சிஎஸ்கே ரசிகர்களுக்கும் அது தெரியும். அதுக்கு என்ன இப்போ.. போடா வைடு கொடுத்தாச்சு என சிஎஸ்கே ஃபேன் கிண்டல் செய்தால் எப்படி இருக்கும் என்று கூறுகிறது இந்த மீம்.

முறுக்கிய தோனி
நடுவர் கையை விரிக்கச் சென்றபோது, தோனி இப்டித்தான் கையை முறுக்கியிருப்பார் என்று சொல்கிறார் இந்த தெலுங்குப்பட ரசிகர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications