நியூசிலாந்து டாஸ் வென்றால், இந்திய ரசிகர்கள் டிவியை ஆப் செய்ய வேண்டியதுதானா? எமிரேட்சில் ஏன் இப்படி?

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இங்கு ஒரு விஷயம் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கிறது.

ஸ்காட்லாந்து vs ஆப்கானிஸ்தான் போட்டியை தவிர்த்து விட்டால், எஞ்சிய ஆட்டம் டாஸ் வெல்லும் அணி அல்லது சேஸிங் செய்யும் அணியால் மட்டுமே வெல்லப்பட்டுள்ளது.

டாஸ் வென்ற அணிகள், எதிரணியை பேட்டிங் செய்ய அழைத்தால் அவ்வளவுதான். அப்போதே, சேஸிங் செய்யப்போகும் அணி வெல்வது உறுதி என்று ரசிகர்கள் டிவிஐ ஆப் செய்து விடலாம்.

வானிலை நிலவரம்

வானிலை நிலவரம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. அங்கு வானிலை 25 டிகிரி முதல் 30 டிகிரி வரை இருக்கும். அதாவது, அதிக குளிர் அல்லது அதிக வெப்பம் இல்லை. அங்கே மாலையில் பனி பொழியத் தொடங்குகிறது. பனிப்பொழிவு ஆரம்பித்ததும் பவுலர்கள் திணறுகிறார்கள். பந்தை க்ரிப் செய்து பிடிக்க முடியவில்லை. எனவே, நினைத்த இடத்தில் அவர்கள் பந்து வீச முடிவதில்லை.

இந்தியா-பாகிஸ்தான்

இந்தியா-பாகிஸ்தான்

உதாரணமாக இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பாருங்கள். டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச முடிவு செய்தது. போட்டி தொடங்கும் போது பனி அதிகம் இல்லை ஆனால் நேரம் செல்ல செல்ல பனி அதிகமாக விழ ஆரம்பித்தது. பனிப்பொழிவு அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதை இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு பிறகு கேப்டன் கோலியும் கூறியிருந்தார். பனிப்பொழிவுதான் பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்த மிகப் பெரிய காரணம் என்று கோலி கூறியிருந்தார்.

வேகப்பந்து வீச்சாளர்கள்

வேகப்பந்து வீச்சாளர்கள்

வேகப்பந்து வீச்சாளர்களுக்குதான் இது பெரும் பிரச்சினையாக உருவாகுகிறது. இந்திய பந்துவீச்சில் பும்ரா மற்றும் ஷமி இருவரும் வேகமாக பந்து வீசுகிறார்கள். இது தவிர புவனேஷ்வர் குமார் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் மீடியம் வேகத்தில் ஸ்விங் செய்கிறார்கள். இதுபோன்ற ஸ்விங் பவுலர்களுக்கு பனி பெரும் பாதிப்பை ஏற்படுத்துவது கிடையாது. ஷமி மற்றும் பும்ரா பந்து வீசியபோது இதைப் பார்க்க முடிந்தது. ஷமி ஃபுல் லெந்த் பந்து வீச நினைத்த போதெல்லாம், அவர் ஃபுல் டாஸ் ஆனார்.

Recommended Video

    Ind Vs NZ வாழ்வா சாவா போட்டியில் Newzealand அணிக்கு பின்னடைவு | Oneindia Tamil
     பனிப்பொழிவு

    பனிப்பொழிவு

    ட்யூ காரணமாக, பாகிஸ்தானின் ஒரு விக்கெட் கூட இந்திய அணியால் வீழ்த்த முடியவில்லை. இப்போது இந்தியாவின் அடுத்த ஆட்டம் நியூசிலாந்துக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. துபாயில் இரு அணிகளுக்கும் பனிப்பொழிவு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்தியா டாஸ் வென்றால்தான் ஆட்டத்தை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் பிட்ச் நிபுணர்கள். இது இந்தியா மட்டுமல்ல அனைத்து அணிகளிலும் நடக்கிறது. எனவேதான் டாஸ் வென்ற பிறகு அணிகள் முதலில் பந்துவீச விரும்புகின்றன. அதேநேரம், ட்யூ பிரச்சினையையும் தாண்டி வெல்ல இந்திய அணி சிறப்பு பயிற்சிகளை செய்து வருகிறது. அது பலன் கொடுத்தால் டாஸ் வெல்லா விட்டாலும் போட்டியை வெல்ல முடியும்.

     வங்கதேசம் செய்த தப்பு

    வங்கதேசம் செய்த தப்பு

    அதேநேரம், நேற்று வங்கதேசம் வெற்றி பெற்றும், கூட, முதலில் இங்கிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது. அது வங்கதேச அணிக்கு மிகப்பெரிய தோல்வியை பரிசாக வழங்கியது. நிலைமையைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும் முதலில் வங்கதேசம் பேட்டிங் செய்ய முடிவு செய்ததற்கு முக்கியமான காரணம் அந்த அணி வெற்றி பெற்ற போட்டிகளில் 80 சதவீதத்துக்கும் மேல் முதலில் பேட்டிங் செய்ததுதான். சேஸிங் விஷயத்தில் வங்கதேசம் ரொம்பவே பலவீனமான அணி. ஆனால் இது வங்கதேச மைதானங்களுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். வங்கதேச மைதானங்களில், நேரமாக, போகப்போக பந்து சுழல் பந்துக்கு சாதகமாக மாறிக்கொண்டிருக்கும். ஆனால் அரபு எமிரேட்ஸ் மைதானங்களில் ட்யூ பிரச்சினை இருப்பது தெரிந்தும், கைக்கு கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டு பேட்டிங் செய்தது வங்கதேச அணி.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+