ரத்த வெள்ளத்தில் கிடந்த இந்திய பைலட்.. கடைசியில் செய்த "அந்த" ஒரு காரியம்! 174 பயணிகள் உயிர் தப்பினர்

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: இஸ்ரேல் நோக்கி சென்று கொண்டிருந்த ஃப்ளைதுபாய் விமானத்தில் துணை விமானியால் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த கேப்டன் ஸ்மித் மச்சார் எடுத்த ஒரு முக்கியமான முடிவு, விமானத்தில் இருந்த 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறது. இக்கட்டான நேரத்தில் துரிதமாக செயல்பட்ட கேப்டன் ஸ்மித்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்.

சவுதி அரேபியாவில் இருந்து டெல் அவிவ் நோக்கி சென்ற ஃப்ளைதுபாய் FZ 1073 விமானத்தில் தொடக்கத்தில் எல்லாமே சரியாகவே இருந்துள்ளது. மூன்று மணி நேர பயணத்தில் சுமார் இரண்டு மணி நேரம் அமைதியாகவே இருந்தது. அப்போது திடீரென முதலில் 7700 என்ற எமர்ஜென்சி அலர்ட் அனுப்பப்பட்டது.

Flydubai Pilot Stabbing Pilot

எமர்ஜென்சி

இது விமானத்தில் ஏதோ எமர்ஜென்சி ஏற்பட்டிருப்பதை குறிக்கும். சில விநாடிகளிலேயே 7500 என்ற மற்றொரு எமர்ஜென்சி அலர்ட் அனுப்பப்பட்டது. விமானத்தை கடத்தும் முயற்சி அல்லது சட்டவிரோத தலையீடு இருக்கலாம் என்பதை இது உணர்த்துகிறது.

அதே நேரத்தில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 17,000 அடி உயரம் வரை வேகமாக சரிந்துள்ளது. இஸ்ரேலுக்கு அருகில் விமானம் சென்று கொண்டிருந்ததால், கடத்தல் முயற்சி என அஞ்சிய அந்நாடு போர் விமானங்களை தயார் நிலையில் வைத்தது. விமானத்தில் மோதல்கள் ஏற்பட்டாலும் கூட விமானம் கடைசியில் பாதுகாப்பாகவே தரையிறக்கப்பட்டது.

என்ன நடந்தது!

இந்த சம்பவத்தின் முழுமையான வரிசை இன்னும் தெளிவாகவில்லை. ஆனால் துணை விமானியுடன் சண்டையிட்டு கொண்டு இருந்த கேப்டன் ஸ்மித் மச்சார் அவசரநிலை அலர்ட் அனுப்பியிருக்கலாம் என கூறப்படுகிறது. ஸ்மித் மச்சாரை மடிக்கக்கூடிய கத்தியால் துணை விமானி தாக்கியதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். காக்பிட்டில் பொருத்தப்பட்டிருந்த அவசரக்கால கோடரியை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக தெளிவான தகவல்கள் இல்லை.

அந்த ஒரு செயல்

கடுமையான காயங்களுடன் காக்பிட் தரையில் ரத்தத்தில் கிடந்த ஸ்மித், தனது உடலில் இருந்த கடைசி சக்தியை பயன்படுத்தி கதவை திறந்ததாக இஸ்ரேல் பிரதமரின் செய்தித் தொடர்பாளர் டோரன் ஸ்பீல்மேன் தெரிவித்துள்ளார். இந்த ஒரு செயலே விமானத்தை காப்பாற்றியுள்ளது. ஏனென்றால் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு விமானிகளை பயணிகள் யாரும் அணுக முடியாதபடி காக்பிட் மாற்றி அமைக்கப்பட்டது. உள்ளே இருந்து மட்டுமே காக்பிட் திறக்க மடியும்.

ஸ்மித் மட்டும் உள்ளே இருந்து திறக்கவில்லை என்றால் மிக மோசமான ஒரு சம்பவம் நடந்திருக்கலாம். எனவே, பலமுறை கத்திக்குத்து காயமடைந்த நிலையில் கதவை திறப்பதற்கு மிகுந்த துணிச்சலும் எனர்ஜியும் தேவைப்பட்டிருக்கும். கதவு திறந்தவுடன் சில பயணிகள் காக்பிட்டுக்குள் ஓடி சென்றனர். அங்கு ஸ்மித் மச்சார் தரையில் காயங்களுடன் கிடப்பதையும், மற்றொரு பைலட் விமானத்தின் கட்டுப்பாட்டு அமைப்பை சேதப்படுத்திக் கொண்டிருந்ததையும் பயணிகள் பார்த்துள்ளனர்.

பயணிகள் துணிச்சல்

அப்போது அங்கிருந்த சில பணிகள் விமானி மீது பாய்ந்து அவரை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் காரணமாக விமானத்தை விபத்திற்குள்ளாகும் முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்த செயலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் பாராட்டியுள்ளார். படுகாயமடைந்த நிலையிலும் கதவை திறந்ததால் கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோவாக செயல்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காக்பிட்டுக்குள் சென்ற பயணிகளில் பல் மருத்துவர் டாக்டர் ஷோட்டா முசாயேவும் இருந்தார். தலையிலும் கைகளிலும் பலத்த காயங்களுடன், அதிகளவு ரத்தத்தை இழந்த நிலையில் ஸ்மித் மச்சார் ரத்த அழுத்தமும் ஆபத்தான அளவுக்கு குறைந்திருந்தது. இன்னும் சில நிமிடங்கள் தாமதித்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்க முடியாது. சரியான நேரத்தில் ஷோட்டோ தேவையான சிகிச்சையை அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+