Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நியூசிலாந்து-இங்கிலாந்து அரையிறுதியில் ஆட்டத்தையே மாற்றிய அந்த மொமண்ட்! 3 ஓவரில் விளாசிய 57 ரன்கள்

Subscribe to Oneindia Tamil

துபாய்: இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 20 ஓவர்

உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் முக்கியமான நேரத்தில் போட்டியை இங்கிலாந்து பக்கம் மாற்றினார் மொயீன் அலி. ஆனால், நியூசிலாந்து அணி சிறப்பாக பேட்டிங் செய்து வெற்றியை வசப்படுத்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடிவரும் மொயீன் அலி, அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற இரண்டாவது கட்ட ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு சிறப்பாக ஆடினார்.

அதே ஆட்டத்திறனை இங்கிலாந்து அணிக்காகவும் இன்று அவர் காட்டி முக்கியமான நேரத்தில் வேறு பக்கம் திசை திருப்பி நியூசிலாந்தை திணற வைத்தார். இதற்கு முன்பு டி20 உலக கோப்பை நாக்அவுட் கட்டங்களில் நியூசிலாந்து 2 முறை கால் வைத்து இருமுறையும் தோற்றது. இங்கிலாந்து 4 முறை கால் வைத்து, 3 முறை வென்றிருந்தது. முக்கிய கட்டங்களில் நியூசிலாந்துக்கு இருக்கும் இந்த சறுக்கலை, இன்றைய போட்டியில் வெளிக் கொண்டுவரவும் மொயின் அலியின் அந்த ஆட்டம் உதவியது. ஆனால் நியூசிலாந்து அணியும் பதிலுக்கு பக்காவாக பேட் செய்து மொயீன் அலிக்கு பதிலடி கொடுத்து விட்டனர்.

நியூசிலாந்து பந்து வீச்சு

நியூசிலாந்து பந்து வீச்சு

உலக கோப்பை அரையிறுதி போட்டி அபுதாபி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இங்கு டாஸ் வென்ற அணி பெரும்பாலும் முதலாவது பந்துவீச்சை தேர்ந்தெடுப்பது வழக்கம். இரண்டாவது பந்துவீசும் போது பனிப்பொழிவு காரணமாக பந்துவீச்சாளர்கள் சரியாக பேச முடியாமல் கஷ்டப்படுவார்கள் என்பது இதற்கு முக்கியமான காரணம். இன்று நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. கேப்டன் கேன் வில்லியம்சன் எதிர்பார்த்தபடி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

நியூசிலாந்து பக்கா வியூகம்

நியூசிலாந்து பக்கா வியூகம்

நியூசிலாந்து அணி தலைவர் வில்லியம்சன் மூளைக்காரர் என்று பாராட்டப்படக்கூடியவர். அந்த அணி பந்து வீசும் போது பந்துவீச்சின் லைன் மற்றும் லென்த்தில் அது பக்காவாக எதிரொலித்தது. நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் நன்கு ஹோம்வொர்க் செய்து விட்டு வந்திருந்தனர். ஜேசன் ராய் ஆடவில்லை என்பதற்காக இங்கிலாந்து அணிக்கு ஜானி பேர்ஸ்டோ ஓபனிங் ஆட்டக்காரராக களம் கண்டார். அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் வழக்கம்போல அதிரடி காட்டினால் நியூசிலாந்து கதை கந்தலாகியிருக்கும் என்பதை உணர்ந்து அவருக்கு மட்டும் ஷார்ட் பிட்ச் பந்துகளை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் வீசினர். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது.

ஜோஸ் பட்லர்

ஜோஸ் பட்லர்

வழக்கமாக சரவெடி போல ஆடும் ஜோஸ் பட்லர் 24 பந்துகளில் 29 ரன்கள் மட்டும்தான் எடுத்து அவுட் ஆனார். முன்னதாக ஜானி பேர்ஸ்டோ 13 ரன்களில் அவுட் ஆனார். பொதுவாக இங்கிலாந்தின் பலம் ஓபனிங் பேட்ஸ்மேன்கள்தான். ஜேசன் ராய் இல்லாதது மற்றும் ஜோஸ் பட்லர் இன்று மிகப்பெரிய அதிரடியை காட்ட முடியாமல் போனது ஆகியவற்றால் அந்த விஷயத்தில் இங்கிலாந்து கோட்டை விட்டது. நியூசிலாந்து வியூகமும் வெற்றி பெற்றது. இதன் பிறகுதான் டாவிட் மலானுடன், மொயின் அலி ஜோடி சேர்ந்தனர். ஆரம்பத்தில் மெதுவாக ஆடிய இந்த ஜோடி பிறகு கியரை மாற்றி சற்று வேகமெடுத்தது.

மொயீன் அலி ஆட்டம்

மொயீன் அலி ஆட்டம்

அதேநேரம், டாவிட் மலான் 41 ரன்களில் அவுட்டானார். மொயீன் அலி கடைசி வரை அவுட் ஆகவில்லை 37 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் இதில் அடங்கும். கடைசி நேரத்தில் லிவிங்ஸ்டன் அதிரடி காட்ட முயன்றார். 17 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு இங்கிலாந்து அணி 166 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்தின் இலக்கு

நியூசிலாந்தின் இலக்கு

நியூசிலாந்து அணியை பொறுத்த அளவில் 160 ரன்களுக்கு அல்லது 150 ரன்களுக்கு கீழே எதிரணி எடுத்தால் அதை எளிதாகச் சேஸ் செய்து விடக் கூடிய ஒரு அணியாக பார்க்கப்படுகிறது. கடந்த பல போட்டிகளாக அதன் ஆட்டத்திறன் அப்படித்தான் இருந்துள்ளது. ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எப்படியோ அந்த மாதிரிதான் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி. மிகப் பெரிய ஸ்கோரை எதிரணியை எடுக்க விடமாட்டார்கள் , ஒருவேளை எதிரணி அவ்வாறு எடுத்துவிட்டால் நியூசிலாந்து ஜெயிப்பது கஷ்டம் ஆகிவிடும். கம்போர்ட் ஸோன், என்று சொல்வார்களே அது 160 ரன்களுக்குக் கீழே தான் . ஆனால் மொயீன் அலி கடைசி நேரத்தில் அதிரடி காட்டியதன் விளைவாக இங்கிலாந்து அணி 166 ரன்கள் எடுத்ததால் நியூசிலாந்து அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. துவக்கத்திலிருந்தே அதிரடியாக ஆட வேண்டிய கட்டாயம் நியூசிலாந்துக்கு ஏற்பட்டது.

வில்லியம்சன் அவுட்

வில்லியம்சன் அவுட்

இதன் காரணமாகத்தான் மார்ட்டின் கப்டில் 4 ரன்களிலும், கேப்டன் கேன் வில்லியம்சன் 5 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி ஒருவேளை 10 அல்லது 20 ரன்களை குறைவாக எடுத்திருந்தால், கேன் வில்லியம்சன் தட்டித்தட்டி சிங்கிள் ஓடி பார்ட்னர்ஷிப் அமைத்து, நியூசிலாந்து அணியை வெற்றி பெறச் செய்து இருப்பார். இதுதான் அவரது வழக்கமான பார்முலா. ஆனால் ரன் அதிகரித்துவிட்டதால் வித்தியாசமான ஷாட் ஆட நினைத்து அவர் விக்கெட்டை பறிகொடுத்தார். நியூசிலாந்து அணிக்காக இந்த தொடரில் அதிகமாக ரன் அடித்தவர் மார்ட்டின் கப்டில். மார்டின் கப்தில். 5 போட்டிகளில் 176 ரன்கள் எடுத்திருந்தார். கனே வில்லியம்சன் 5 போட்டிகளில் 126 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் இருவரும் ரன் அழுத்தம் காரணமாக அடுத்தடுத்து நடையை கட்டினர்.

சிஎஸ்கே வளர்ப்பால் முடியலியே

சிஎஸ்கே வளர்ப்பால் முடியலியே

என்னதான் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி பார்க்காவாக ஸ்கெட்ச் போட்டு, இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக பந்து வீசினாலும் கடைசி நேரத்தில் மொயீன் அலி அதிரடி காட்டிய காரணத்தால் நியூசிலாந்து அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. அவர்களின் ஒட்டுமொத்த திட்டத்தையும் அது குலைத்தது. டெஸ்ட் மேட்ச் போலவே ஆடி, ரன் அடிப்பதே தெரியாமல் அடித்து வெல்வதுதான் நியூசிலாந்தின் டிரேட் மார்க்காக இருந்தது. ஆனால் இங்கிலாந்தின் ரன்கள் 166 என்பதால் அந்த பார்முலாவை நியூசிலாந்து ஆரம்பத்தில் கையில் எடுக்க முடியவில்லை. ஆனால் பிறகு கியரை மாற்றிய நியூசிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. மிட்சல் 72 ரன்களுடன் நாட்அவுட்டாக நின்று, வெற்றியை உறுதி செய்தார். கான்வே 44 ரன்கள் விளாசினார். ரன் எடுக்க திணறியபோது ஜேம்ஸ் நீசம் 11 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை வீழ்த்துவதில் முக்கிய பங்கு வகித்தார். 1 ஓவர் மிச்சமிருந்தபோதே நியூசிலாந்து வென்றது. கடைசி 4 ஓவர்களில் 57 ரன்கள் தேவைப்பட்டது நியூசிலாந்துக்கு. ஆனால் 3 ஓவர்களில் 57 ரன்கள் வந்தது. முதலில் ஜோர்டான் ஓவரில் 23 ரன்கள், பிறகு ரஷீத் ஓவரில் 14 ரன்கள், வோக்ஸ் வீசிய 19வது ஓவரில் 20 ரன்கள் விளாசியது நியூசிலாந்து. இதுதான் போட்டியின் திருப்புமுனையாகும். 2019ம் ஆண்டு, 50 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் சூப்பர் ஓவர் போய் இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து தோற்று வெற்றிவாய்ப்பை நூலிழையில் தவற விட்டது. இன்று அதற்கு பழி தீர்த்துக் கொண்டது நியூசிலாந்து. இவ்வாண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நியூசிலாந்து வென்றது. இப்போது, டி20 உலக கோப்பை பைனலுக்கும் போயுள்ளது. பாகிஸ்தான் அல்லது ஆஸ்திரேலியாவை அந்த அணி இறுதிப் போட்டியில் துபாயில் சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+