பாயிண்ட் வரட்டும்.. தோனி ஸ்டைலில் டெஸ்ட் பேட்டிங் ஆடிய வீரர்கள்.. அணியின் தோல்விக்கு மென்டர் காரணமா?

Subscribe to Oneindia Tamil

துபாய்: 2021 உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா நேற்று படுதோல்வி அடைந்துள்ளது. இந்திய அணியின் தோல்வியை தொடர்ந்து பலர் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

முக்கியமாக கேப்டன் கோலி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஒரு கேப்டனாக பேட்டிங் ஆர்டரை மாற்றி மாற்றி களமிறக்கியது. ஆல் ரவுண்டரை தேர்வு செய்வதில் சொதப்பியது.

ஆட்டத்தின் திட்டமிடலில் மோசமாக சொதப்பியது என்று கோலி மீது கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. கோலிக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் ஆலோசகர் தோனி மீதும் கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

விமர்சனம்

விமர்சனம்

இந்திய அணிக்கு அறிவுரை வழங்கவும், வெற்றியை உறுதி செய்யவும் தோனியை பிசிசிஐ ஆலோசகராக நியமனம் செய்தது. முக்கியமாக டி 20 போட்டிகளில் தோனியின் கேப்டன்சி சிறப்பாக இருக்கும் என்பதால் அவர் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார். ஆனால் தோனியின் ஆலோசனை இந்திய அணிக்கு பெரிதாக இந்த தொடரில் உதவியதாக தெரியவில்லை.

தோனி

தோனி

தோனியின் ஆலோசனைக்கு கீழ் இந்திய அணியின் பேட்டிங்கில் பெரிய மாற்றம் தெரியவில்லை. அதேபோல் ஸ்பின் பவுலிங்கிலும் (ஸ்பின்னர்களுக்கு நன்றாக அறிவுரை சொல்வார்) பெரிய மாற்றம் தெரியவில்லை. முக்கியமாக தோனி வந்தால் கோலியின் கேப்டன்சியில் மாற்றம் ஏற்படும், அணியின் திட்டமிடலில் மாற்றம் ஏற்படும், பவுலிங் ரொட்டேஷன், பிளானிங் மாறும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எந்த விதமான மாற்றமும் இந்திய அணியில் ஏற்படவில்லை.

Recommended Video

    IND vs NZ: 5 interesting stat facts | T20 World Cup 2021 | OneIndia Tamil
    மாற்றம் இல்லை

    மாற்றம் இல்லை

    இன்னும் சொல்லப்போனால் கோலியின் கேப்டன்சி வியூகங்கள் முன்பு இருந்ததை விட இந்த சீசனில் இன்னும் மோசமாகி இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். கடந்த இரண்டு போட்டிகளாக கோலியின் அணித்தேர்வு, பேட்டிங் ஆர்டர், பவுலிங் ரொட்டேஷன், பீல்டிங் செட்டப் என்று எதுவும் அவ்வளவு சிறப்பாக இருந்ததாக தெரியவில்லை. தோனி பெரிய அளவில் இந்திய அணிக்கு பலன் அளித்ததாக தெரியவில்லை.

    கேப்டன்

    கேப்டன்

    இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இப்போதும் தோனிதான் பெஸ்ட் கேப்டன். இந்திய அணிக்காக அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வாங்கிய ஒரே கேப்டன். ஆனால் ஆலோசகராக தோனி அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை என்றுதான் கூற வேண்டும். முக்கியமாக தோனியின் வருகைக்கு பின் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக சொதப்பி உள்ளது. பேட்ஸ்மேன்கள் பாடி லாங்குவேஜ் மொத்தமாக மாறியுள்ளது.

    ஆர்வம்

    ஆர்வம்

    ஒரு ஆர்வம் இன்றி... விறுவிறுப்பின்றி இந்திய வீரர்கள் கொஞ்சம் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். மிக முக்கியமாக எல்லா வீரர்களும் தோனி ஸ்டைலில் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார்கள். 16, 17வது ஓவர்களில் தேவையின்றி டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடிக்கொண்டு இருந்தனர்.

    வேகம்

    வேகம்

    ஜடேஜாவாது கடைசி ஓவரில் கொஞ்சம் வேகம் காட்டினார். ஆனால் அவர் உட்பட எல்லோரும் பாயிண்ட் வரட்டும், பாயிண்ட் வரட்டும் என்பது போல காத்து இருந்தனர். அதிலும் அதிரடி காட்டும் பண்ட் கூட சிங்கிள் அடித்து டொக் வைத்துக்கொண்டு இருந்தார். கடந்த 2 வருடமாக தோனி ஆடிய அதே ஸ்டைலில் இவர்கள் ஆடியது பார்க்கவே அதிர்ச்சியாக இருந்தது.

    என்ன ஆனது

    என்ன ஆனது

    நெட்டிசன்களும் தற்போது இதற்காக தோனியை கடுமையாக கிண்டல் செய்து வருகிறார்கள். இந்திய அணியின் தோல்விக்கு மென்டரின் ஆலோசனைகளும் ஒரு வகையில் காரணம் என்று கூறி நெட்டிசன்கள் பலர் விமர்சனம் வைத்து வருகிறார்கள். தோனிதான் அணியின் தோல்விக்கு முழு காரணம் இல்லை என்றாலும் ஆலோசகராக அவரின் பெயரும் விமர்சனத்தில் அடிபட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+