அச்சச்சோ இன்றைக்கு இவர்தான் அம்பயரா? போச்சு.. இந்திய அணிக்கு ராசியே கிடையாதே - பின்னணி!
துபாய்: இந்திய அணி இன்று நியூசிலாந்துக்கு எதிராக ஆடும் போட்டியில் கள நடுவர்களின் ஒருவராக ரிச்சர்ட் கெட்டில்பார்க் பணியாற்ற இருக்கிறார்.
2021 டி 20 உலகக் கோப்பை தொடரின் மிக முக்கியமான ஆட்டம் இன்று நடக்க உள்ளது. இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மேட்ச் நடக்க உள்ளது.
இரண்டு அணிகளும் இதற்கு முன் பாகிஸ்தானோடு நடந்த போட்டியில் தோல்வி அடைந்துவிட்டது. இதனால் இந்த போட்டி இரண்டு அணிகளுக்கும் கிட்டத்தட்ட ஒரு நாக் டவுட் போட்டி போல இருக்கும்.

நடுவர்
இந்திய அணி இன்று நியூசிலாந்துக்கு எதிராக ஆடும் போட்டியில் நடுவர்களின் ஒருவராக ரிச்சர்ட் கெட்டில்பார்க் பணியாற்ற இருக்கிறார். இவர் முன்னாள் இங்கிலாந்து வீரர் ஆவார். நடுவராக பல வருடமாக பணியாற்றி வரும் இவர் அனுபவம் பெற்ற முக்கியமான ஐசிசி நடுவர்களில் ஒருவர்.

ரிச்சர்ட் கெட்டில்பார்க்
ரிச்சர்ட் கெட்டில்பார்க்தான் இந்திய அணி 2019ல் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் செமி பைனலில் நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்த போது நடுவராக இருந்தவர். இவர்தான் தோனி ரன் அவுட் ஆன போது ஷாக்கிங் ரியாக்சன் கொடுத்தது. அந்த ரியாக்சனை கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

ராசி இல்லை
இவர் இந்திய அணிக்கு கொஞ்சம் ராசி இல்லாத நடுவராக பார்க்கப்படுகிறது. முக்கியமான போட்டிகளில் இவர் நடுவராக இருக்கும் போதெல்லாம் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. ஆம் 2014ல் டி 20 உலகக் கோப்பை பைனலில் இந்தியா இலங்கையிடம் தோல்வி அடைந்தது. அப்போது ரிச்சர்ட் கெட்டில்பார்க்தான் நடுவர்.

செமி பைனல்
அதேபோல் 2015ல் உலகக் கோப்பை செமி பைனலில் இந்தியா ஆஸ்திரலியாவிடம் தோல்வி அடைந்தது. 2016ல் டி 20 உலகக் கோப்பை செமி பைனலில் மேற்கு இந்திய தீவுகளிடம் இந்தியா தோல்வி அடைந்தது இந்த போட்டிகளின் போதும் ரிச்சர்ட் கெட்டில்பார்க்தான் கள நடுவராக இருந்தார். இப்படி இந்தியா முக்கியமான போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்த போதெல்லாம் இவர்தான் நடுவர்.
|
நாக் அவுட்
இந்த நிலையில் இன்று நடக்கும் போது இந்திய அணிக்கு கிட்டத்தட்ட நாக் அவுட் போட்டி போன்றது. அதிலும் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இதனால் ரிச்சர்ட் கெட்டில்பார்க் இன்று நடுவராக இருப்பது இந்திய அணிக்கு கெட்ட சகுனமாக பார்க்கப்படுவதாக நெட்டிசன்கள் பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள். இவர் வந்தாலே முக்கிய போட்டிகளில் நாம் தோல்வி அடைந்து விடுவோமே என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications