அவரை உட்கார வையுங்கள்.. பிசிசிஐக்கு பறந்த மெசேஜ்.. வாளியோடு வந்த வீரர்கள்.. தமிழக வீரருக்கு சிக்கல்?

Subscribe to Oneindia Tamil

துபாய்: நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று நடக்க உள்ள இந்திய மேட்சில் தமிழ்நாடு வீரர் வருண் சக்ரவர்த்தி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் நன்றாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

2021 உலகக் கோப்பை டி 20 சீசனில் வருண் சக்ரவர்த்தி இந்திய அணிக்காக சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரால் ஐபிஎல் போட்டிகளில் ஆடியது போல உலகக் கோப்பை போட்டிகளில் வருண் சக்ரவர்த்தியால் சரியாக ஆட முடியவில்லை.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக இவரால் சரியாக பவுலிங் செய்ய முடியவில்லை. அந்த போட்டியில் இவர் ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை.

ஸ்பின்

ஸ்பின்

பொதுவாக அனுபவம் வாய்ந்த ஸ்பின் பவுலர்கள் பிட்ச் ஒத்துழைக்கவில்லை என்றாலும் ஏதாவது செய்து விக்கெட் எடுப்பார்கள். ஆனால் வருண் சக்ரவர்த்தி பிட்ச் ஒத்துழைக்கவில்லை என்றதும் மோசமாக சொதப்ப தொடங்கினார். அவரால் பனி படர்ந்த பந்தில் சரியாக பந்தை ஸ்பின் செய்ய முடியவில்லை. இதனால் வருணை நம்பி களமிறங்கிய இந்திய அணி ஏமாற்றம் அடைந்தது.

கோரிக்கை

கோரிக்கை

இந்திய நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் திலீப் தோஷி போன்ற வல்லுனர்கள் வருணை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். வருண் ஐபிஎல் போட்டிகளில் நன்றாக ஆடினார். ஆனால் அவர் சர்வதேச போட்டிகளில் இன்னும் சரியாக ஆடவில்லை. அவரை நம்பி ரிஸ்க் எடுக்க கூடாது. அதேபோல் வருண் காலில் காயம் உள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் அவரை இறக்க வேண்டியது இல்லை. இந்திய அணி சாஹலை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அணியில் இல்லை, என்று திலீப் தோஷி குறிப்பிட்டுள்ளார்.

லெக் ஸ்பின்

லெக் ஸ்பின்

இந்த நிலையில் இன்னும் பல கிரிக்கெட் விமர்சகர்கள் இந்திய அணி ஒரு லெக் ஸ்பின் பவுலரை முயற்சி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். லெக் ஸ்பின் பவுலர்கள் பனி படர்ந்த பந்தில் நன்றாக பவுலிங் செய்வார்கள். இதனால் ராகுல் சாகரை இந்திய அணி முயன்று பார்க்கலாம் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

இன்றைய போட்டி

இன்றைய போட்டி

இதனால் இன்றைய போட்டியில் நன்றாக ஆட வேண்டிய சிக்கலில் வருண் சக்ரவர்த்தி இருக்கிறார். தற்போது வருண் சக்ரவர்த்தி உள்ளிட்ட அனைத்து பவுலர்களும் ஈர வாளியோடு பயிற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். அதாவது ஈர வாளியில் பந்தை நனைத்து, அதை வைத்து பவுலிங் செய்து வருகிறார்கள். ஈரமான பந்தில் பவுலிங் செய்து அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதால் இப்படி பவுலிங் செய்து வருகிறார்கள்.

ஈர வாளி

ஈர வாளி

வருணும் இப்படி பயிற்சி மேற்கொண்டார். வருண் இன்றைய போட்டியில் கண்டிப்பாக ஆடுவார். ஒரு போட்டியில் சரியாக ஆடவில்லை என்பதற்காக இவரை அணியில் இருந்து நீக்க மாட்டார்கள். ஆனால் ராகுல் சாகர் லைனில் நிற்பதால் இன்று கண்டிப்பாக நன்றாக ஆட வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+