துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எச்சரிக்கை.. "என்சிஏ" ட்ரில்லை கையில் எடுத்த இந்திய அணி.. இனி "பனி" எல்லாம் பக்கத்துலேயே வர முடியாது

Google Oneindia Tamil News

துபாய்: நியூசிலாந்து அணிக்கு எதிரான டி 20 உலகக் கோப்பை போட்டிக்காக இந்திய அணி பவுலர்கள் வித்தியாசமான பயிற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளனர்.

Recommended Video

    Ind Vs NZ வாழ்வா சாவா போட்டியில் Newzealand அணிக்கு பின்னடைவு | Oneindia Tamil

    2021 உலகக் கோப்பை டி 20 தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடப்பதால் மொத்தமாக ஆட்டத்தின் போக்கே மாறியுள்ளது. இதுவரை நடந்த பெரும்பாலான போட்டியிலும் இரண்டாவது பவுலிங் செய்த அணி வெற்றிபெறவில்லை. சேசிங் செய்த அணிதான் தொடர்ந்து வென்று வருகிறது. ஆப்கானிஸ்தான் ஸ்காட்லாந்து மேட்ச் தவிர அனைத்திலும் இதுதான் ரிசல்ட்.

    ஆர்யன் கான் வழக்கில் பேரம்.. '8 மணி நேரம்' முக்கிய சாட்சி அளித்த பரபரப்பு வாக்குமூலம் ஆர்யன் கான் வழக்கில் பேரம்.. '8 மணி நேரம்' முக்கிய சாட்சி அளித்த பரபரப்பு வாக்குமூலம்

    நேற்று நடந்த இரண்டு போட்டிகளிலும் இதேதான் நடந்தது. இதற்கு காரணம் மைதானத்தில் நேரம் செல்ல செல்ல பெய்ய கூடிய பனிப்பொழிவு. அதிக அளவு பனி காரணமாக இரண்டாவது இன்னிங்சில் பவுலிங் செய்வது கஷ்டம் ஆகியுள்ளது.

    வெற்றிபெறவில்லை

    வெற்றிபெறவில்லை

    பனியால் பந்து ஈரமாகிவிடுகிறது. பந்து எளிதாக வழுக்கி சென்றுவிடுகிறது. ஆப் ஸ்பின் பவுலர்கள் பந்தை சுற்ற முடியவில்லை. அதேபோல் ஆப் ஸ்பின் பவுலர்கள் சரியாக பந்தை கிரிப் கொடுத்து சுழற்ற முடியவில்லை. இது ஒருபுறம் இருக்க பாஸ்ட் பவுலர்கள் யார்க்கர் போட முடியவில்லை. பந்து வழுக்கி சென்று லோ புல்டாஸ் ஆகிவிடுகிறது. இதனால் பேட்ஸ்மேன்கள் எளிதாக சேஸ் செய்து வென்று விடுகிறார்கள்.

    கோலி சொன்ன கஷ்டம்

    கோலி சொன்ன கஷ்டம்


    2014 டி 20 உலகக் கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடந்த போதும் இதேபோல்தான் சேசிங் அணிகள் அதிகம் வென்றன. இதைத்தான் பாகிஸ்தான் தோல்விக்கு பின்பும் இந்திய கேப்டன் கோலி கூறினார். பனி சிறிய விஷயம்தான் சென்றாலும் பந்து வழுக்குவதால் சரியாக பவுலிங் செய்ய முடிவது இல்லை. இது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக சென்று விடுகிறது. இதனால் டாஸ் வெல்வது முக்கியமாகிறது என்று குறிப்பிட்டார்.

    என்சிஏ பயிற்சி

    என்சிஏ பயிற்சி

    இந்த நிலையில்தான் இந்தியா பனியில் பவுலிங் செய்ய பயிற்சி எடுக்க வேண்டும்.. போக போக பனி அதிகம் ஆகும். சூழ்நிலை மோசமாகும் என்று பிசிசிஐ அதிகாரிகள் பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால்தான் தற்போது இந்திய அணி தேசிய கிரிக்கெட் அகாடமியான என்சிஏவின் ட்ரில் ஒன்றை இந்திய பவுலர்கள் கையில் எடுத்துள்ளனர். பணியில் பவுலிங் செய்வதற்கு என்றே தேசிய கிரிக்கெட் அகாடமியில் கோர்ஸ் ஒன்று இருக்கிறது. அதன்படி பந்தை ஈரமாக்கி பவுலிங் செய்வார்கள்.

    என்ன செய்வார்கள்

    என்ன செய்வார்கள்

    பந்தை தண்ணீர் வாளியில் லேசாக நனைப்பார்கள். மொத்தமாக பந்தை ஈரமாக்காமல், பனி படர்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு பதம் வரும் வரையில் தண்ணீரில் நனைத்து பின் அந்த பந்தை வைத்து பயிற்சி செய்வார்கள். அதேபோல் கொஞ்சம் லோஷன் தடவி பந்தை வழுக்கும் பதத்திற்கு கொண்டு வந்து பவுலிங் செய்வார்கள். பனியில் பவுலிங் போட வசதியாக இந்த பயிற்சியை இந்திய பவுலர்கள் எடுக்க தொடங்கி உள்ளனர்.

     லென்த் மாற்ற வேண்டும்

    லென்த் மாற்ற வேண்டும்

    இதன் மூலம் மைதானத்தில் உண்மையாக பவுலிங் செய்யும் போது அது வித்தியாசமாக தெரியாது. பந்தின் கிரிப் பழக்கப்பட்டதாக மாறிவிடும். பவுலர்கள் இதனால் எந்த விதமான திணறலுக்கும் உள்ளாகாமல் பந்தை பவுலிங் செய்ய முடியும். பனி பந்தில் பழக்கப்பட்டுவிட்டால் போதும் அதன்பின் சிரமம் இருக்காது. கடந்த 3 நாட்களாக இந்திய பவுலர்கள் இந்த பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது முடியாத காரியம் என்று கூற முடியாது.

     முடியாது என்று இல்லை

    முடியாது என்று இல்லை

    பயிற்சி எடுத்தால் இந்த வித்தை கைக்குள் வந்துவிடும். இதில் முக்கியம் பாஸ்ட் பவுலர்கள் யார்க்கர் போடுவதை தவிர்க்க வேண்டும். அது லோ புல்டாஸ் பந்தாக செல்ல வாய்ப்பு உள்ளது. அதேபோல் ஷார்ட் பந்து போட்டால் ஈரம் காரணமாக அது மிகவும் ஸ்லோ ஆகி பேட்ஸ்மேன்கள் அடிக்க வசதியாக மாறிவிடும். இதனால் குட் லென்த்தில் தொடர்ந்து வீசினால், பந்தின் ஈரம் காரணமாக பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள். இதற்கான பயிற்சியும் நடந்து வருகிறது.

    லெக் ஸ்பின்

    லெக் ஸ்பின்

    அதேபோல் ஆப் ஸ்பின் பவுலர்கள் இதில் பெரிதாக எதுவும் செய்ய முடியாது. முடிந்த அளவு விரல்களை ஈரமான பந்தில் பவுலிங் செய்து பயிற்சி எடுக்க வேண்டும். ஆனால் லெக் ஸ்பின் பவுலர்கள் மணிக்கட்டை சுற்றுவதால் அவர்களுக்கு பெரிய பிரச்சனை இருக்காது. பந்து வழுக்குவது பற்றி அவர்கள் அவ்வளவாக கவலைப்பட வேண்டியது கிடையாது என்று கூறப்படுகிறது.

    வருண் ராகுல் மாற்றம்

    வருண் ராகுல் மாற்றம்

    இதனால் இந்திய வீரர்கள் இது தொடர்பான பயிற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி கடந்த போட்டியில் பனியால் கடுமையாக திணறினார். இதனால் ஒரே லெக் ஸ்பின் பவுலரான ராகுல் சாகர் அணிக்குள் வர அதிக வாய்ப்புகள் உள்ளன. ராகுல் சாகர் லெக் ஸ்பின் என்பதால் பனியால் அதிகம் பாதிக்கப்பட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    India vs NZ match in the T20 world cup: How Men in Blue will tackle the dew in the ground that affected bowling.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X