"துபாய் ஓகே தான்! ஆனால்.." குடும்பத்துடன் தாயகம் திரும்பிய இந்திய பெண்! சொன்ன மிக முக்கியமான மேட்டர்
துபாய்: அமீரகத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்த இந்தியப் பெண் தனது குடும்பத்துடன் இந்தியா திரும்பியுள்ளார். துபாயில் கை நிறையச் சம்பாதித்தாலும் கூட அவர் இந்தியா திரும்ப முடிவு செய்துள்ளார். அவர் எதற்காக இந்தியா திரும்பும் முடிவை எடுத்தோம் என்பது குறித்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
பெரும்பாலும் அப்படி அமீரகம் செல்லும் இந்தியர்கள் அங்கேயே இருந்துவிடுவார்கள். பணிக் காலம் எல்லாம் முடிந்து ஓய்வு பெறும் வயதிலேயே அவர்கள் இந்தியா திரும்புவார்கள். கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பான சேவை கிடைக்கும் அமீரகத்தை விட்டுவிட்டு இந்தியா திரும்புவது என்பது அவ்வளவு ஒன்றும் ஈஸியான முடிவு இல்லை. ஆனால் கேரளாவைச் சேர்ந்த லீபா சுபின் தாயகம் திரும்ப முடிவு செய்துள்ளார்.

துபாய் வாழ் இந்தியர்
யூடியூபரான லீபா சுபினுக்கு துபாய் ஓகே தான் என்றாலும் அவர் தனது சொந்த ஊருக்குத் திரும்ப முடிவு செய்துள்ளார். இது ஏதோ எமோஷ்னலாகவோ அல்லது அவசர கதியிலோ எடுத்த முடிவு இல்லை என்கிறார். மிகத் தெளிவாக யோசித்து, மன அமைதியுடன் கூடிய வாழ்க்கைக்காக எடுத்த முடிவு தான் இது என்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அதில் அவர் பல வருட வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பிறகு ஏன் குடும்பத்துடன் சொந்த ஊருக்குத் திரும்ப முடிவு செய்தேன் என்பதை சுபின் விளக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும், "இது ஒரு திடீர் முடிவு அல்ல. பல விஷயங்கள் குறித்து நீண்ட யோசனைக்குப் பிறகு எடுத்த முடிவு. மன அமைதிக்கு இதுவே சரியான முடிவாக இருக்கும். தீவிர யோசித்தே இந்த முடிவை எடுத்தோம்" என்று அவர் தெரிவித்தார்.
சிக்கல்கள்
விசா புதுப்பித்தலும், துபாயில் வீட்டு வாடகை புதுப்பித்தலும் ஒரே நேரத்தில் வந்ததாகவும் அப்போது தான் இது செட் ஆகாது என்று முடிவெடுத்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். இது தொடர்பாக அவர் மேலும், "அந்த நேரம் தான் எங்களை யோசிக்க வைத்தது. குடும்பமாக, குறிப்பாகக் கணவன் மனைவியாக, அனைத்தையும் நிதானமாகவும், நேர்மையாகவும் பார்க்கத் தூண்டியது" என்று அவர் பகிர்ந்து கொண்டார்.
துபாயில் அவர்களது குழந்தையின் தினசரி நடைமுறையே அவர்கள் கேரளா திரும்ப ஒரு முக்கியக் காரணமாக இருந்துள்ளது. துபாயில் அவர்கள் குழந்தை காலை 6 மணிக்கே கிளம்பிவிடுமாம். பள்ளிக்குச் செல்லச் சுமார் 90 நிமிடங்கள் செலவிட்டது. ஆனால் கேரளாவில், பள்ளி வெறும் 10 நிமிடத் தூரத்தில் உள்ளது. இந்த ஒரு விஷயமே அவர்களின் வாழ்க்கைத் தரத்தைக் கணிசமாக மேம்படுத்தியது.
நிதி சுதந்திரம்
நிதி சுதந்திரமும் இதில் முக்கியப் பங்கை வகித்தது. கேரளாவில் சொந்த வீட்டிற்குக் குடியேறியது, அதிக வாடகைச் சுமையிலிருந்து விடுவித்து என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.. இது தொடர்பாக அவர், "இன்று நாங்கள் கடன் இல்லாத, இஎம்ஐ இல்லாத சூழ்நிலையில் இருக்கிறோம். துபாய் வாழ்க்கையை விட இந்த மனச் சுதந்திரம் எங்களுக்கு மிக முக்கியமானது" என்றார்.
மேலும், அவர்களின் பெற்றோர்களுக்கும் வயதாகிவிட்டது. இந்த நேரத்தில் அவர்களுடன் இருப்பது தான் ஒரு கடமை என்று கருதியுள்ளனர். மீண்டும் கேரளாவுக்குத் திரும்பியது விலகியிருந்த சொந்தபந்தங்களுடன் மீண்டும் உறவுகளைப் புதுப்பிக்க உதவியதாகவும் அவர் தெரிவித்தார்.
யோசித்து பாருங்கள்
தனது பதிவில், சுபின், "இது எங்களுக்கு ஒர்க் அவுட் ஆனது. ஆனால், உங்களுக்கு இது ஒர்க் அவுட் ஆகாமல் போகலாம்.. ஆனால், நீங்கள் இது குறித்து யோசித்துப் பார்க்கலாம். ஓடி கொண்டே இருக்காமல் சற்று அமர்ந்து யோசிக்கலாம். அப்போ தான் உங்களுக்கு எது தேவை என்பது உங்களுக்குப் புரியும்" என்றார். அவரது இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
-
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
தீராத "கேரளா" தலைவலி.. வென்றாலும் கூட நிம்மதியாக இருக்க முடியாது! என்ன செய்ய போகிறார் ராகுல்? -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி












Click it and Unblock the Notifications