"அடடே என்ன மனுஷன்.!" சட்டென காரை நிறுத்திய துபாய் இளவரசர்.. இந்திய குடும்பத்தினருக்கு சர்ப்ரைஸ்
துபாய்: துபாயில் வசித்து வரும் இந்தியக் குடும்பத்தினருக்கு அவர்கள் வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது அங்கு வசித்து வரும் இந்தியக் குடும்பத்தினர் ஒருவருடன் போட்டோ எடுக்க துபாய் இளவரசர் பொதுவெளியில் காரை நிறுத்தியுள்ளார். மேலும், அவர்களின் குழந்தைக்குச் சின்ன கிப்டையும் கொடுத்துள்ளார். இது குறித்து நாம் பார்க்கலாம்!
ஐக்கிய அமீரக நகரங்களில் இந்தியர்கள் அதிகம் வசித்து வருவது அனைவருக்கும் தெரியும். அங்கு வேலைக்காகப் பலரும் செல்கிறார். அப்படியே குடும்பத்துடன் வசிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அப்படி துபாயில் குடும்பத்துடன் வசித்து வரும் இந்திய புலம்பெயர்ந்த ஊழியர் தான் சௌரப் ஜெயின்.

இந்தியக் குடும்பம்
அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மறக்கவே முடியாத ஒரு சம்பவம் இப்போது நடந்துள்ளது. அதாவது அவர்கள் அல் குத்ரா ஏரியைச் சுற்றிப் பார்க்கச் சென்றுள்ளனர். அப்போது தான் சௌரப் ஜெயின் குடும்பத்தினருக்கு ஒரு மறக்க முடியாத சம்பவம் நிகழ்ந்தது.
அதாவது அப்போது ஐக்கிய அரபு அமீரகத் துணைத் தலைவரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் காரை அவர்கள் பார்த்துள்ளனர். பின் ரஷித்தை பார்க்க விரும்பிய சவுரப் குடும்பத்தினர் அவரது காரை நோக்கிச் சென்றுள்ளனர். இவர்கள் வருவதைப் பார்த்து ஷேக் முகமது தனது காரின் ஜன்னலைக் கீழே இறக்கி கை அசைத்துள்ளார். மேலும், சௌரப்பின் குழந்தைகளான மிஷிகா, தக்ஷ் ஆகியோருடன் போட்டோ எடுக்கவும் ஒப்புக்கொண்டார்.
என்ன நடந்தது!
இது குறித்து பிரபல ஆங்கில ஊடகமான ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திடம் ஜெயின் கூறுகையில், "நாங்கள் வீக் எண்டிற்கு அல் குத்ரா ஏரியில் இருந்தபோது தான் இது நடந்தது. அப்போது என் மனைவி DUBAI 1 நம்பரை கொண்ட காரைப் பார்த்தார். அது ஷேக்கின் கார் என்பது இங்கு அனைவருக்குமே தெரியும். இதனால் அவரை பார்க்க காருக்கு அருகே சென்றோம். காரை நெருங்கியதும் அவர் ஜன்னலைக் கீழே இறக்கி, எங்களுக்குக் கை அசைத்தார்.
கிப்ட்
என் மகன் அவரது தீவிர ரசிகன் என்பதால், குழந்தைகளுடன் போட்டோ எடுக்க அனுமதி கேட்டோம். அவர் துளியும் யோசிக்காமல் போட்டோ எடுக்கச் சம்மதித்தார். மேலும், குழந்தைகளை அழைத்துப் போட்டோ எடுத்துக் கொண்டார். அது மட்டுமின்றி என் மகளுக்கு ஒரு கோல்ட் காபியையும் வழங்கினார். மேலும், எங்கள் பிள்ளைகளை அவர் ஆசீர்வாதம் செய்தார். அவரது செயல் வீக் எண்ட்டை மகிழ்ச்சிகரமாக மாற்றிவிட்டது. இதை நாங்கள் மறக்கவே மாட்டோம். அவரது பணிவு குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில் நான் அதிர்ஷ்டசாலி" என்றார்.
முதல்முறை இல்லை
அதேநேரம் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் குறித்து இதுபோன்ற செய்திகள் வருவது இது முதல்முறை இல்லை. அவர் எப்போதுமே பொதுமக்கள் எளிதாக அணுகக்கூடிய ஒரு தலைவராகவே இருந்துள்ளார். பொதுமக்களுடன் செல்ஃபி எடுக்கவும், வாழ்த்து தெரிவிக்கவும் அவர் பல முறை இதுபோல காரை பொதுவெளியில் நிறுத்தியுள்ளார். அவரது காரை குறுக்கிட்ட பெண்ணை பாதுகாவலர் பிடிக்கச் சென்றபோதும் கூட வேண்டாம் எனத் தடுத்தவர் தான் ஷேக் முகமது!
மேலும், சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஷேக் முகமது, எப்போதும் பொதுமக்களுடன் தொடர்பிலேயே இருப்பார். இப்படித் தான் ஒரு முறை அவர் துபாயில் பிரபல உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அங்குப் பலரும் இருந்த நிலையில், சத்தமில்லாமல் அனைவருக்கும் பில்லை செலுத்திட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications