தேசியக் கொடியை வாங்க மறுத்த ஜெய் ஷா.. எழுந்த விமர்சனங்கள்! "மேட்டரே வேற.." ஆதரவாக வரும் பாஜகவினர்
துபாய்: இந்திய அணியின் வெற்றிக்கு பின் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பிசிசிஐ செயலாளரும், மத்திய அமைச்சர் அமித் ஷா மகனுமான ஜெய் ஷா, தேசியக் கொடியை வாங்க மறுத்துள்ள சம்பவத்திற்கு எதிர்க்கட்சி பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
நடப்பு ஆண்டு ஆசிய கோப்பை தொடரின் 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று இரவு நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த இந்தியா- பாகிஸ்தான் அணிகள் அந்த போட்டியில் மோதியதால், போட்டி மீது எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு எகிறியது. இதில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணி, ரிஷப் பன்ட்-க்கு பதில் தினேஷ் கார்த்திக்கை களத்தில் இறக்கியது.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, ஒரு பந்து மீதம் இருக்கையில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ரிஸ்வான் 43 ரன்களை எடுத்தார். இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணி சிறப்பு
பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரரான கே.எல். ராகுல் ஆட்டத்தின் 2வது பந்தில், ரன் ஏதும் எடுக்காமல் கோல்டன் டக் முறையில், அதாவது தான் சந்தித்த முதல் பந்திலேயே, ஆட்டமிழந்தார். இதனைத்தொடர்ந்து வந்த அடுத்தடுத்த ஓவர்களில் கோலி, ரோஹித் இருவரும் தங்கள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். 8 ஆவது ஓவரின் கடைசி பந்தில் ரோஹித் சர்மா 12 ரன்கள் எடுத்தும், பிறகு 34 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து விராட் கோலியும் ஆட்டமிழந்தனர். இதனால் 53 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. எனினும் ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் கணிசமாக ரன்களை எடுத்ததால் கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. 3 பந்துகளில் 6 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் ஹர்திக் பாண்டியா சிக்சர் அடித்து வெற்றிபெற உதவினார். 17 பந்துகளில் 1 சிக்கல் 4 பவுண்டரிகள் உள்பட 33 ரன்களைக் குவித்ததுடன், பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளை ஹர்திக் பாண்டியாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

துபாய் வந்த ஜெய் ஷா
உலகக் கோப்பை டி20 ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி தரும் வகையில் ஆசிய கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி தோற்கடித்திருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நேரில் காண வேண்டும் என்று ஏராளமான ரசிகர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், பிசிசிஐ நிர்வாகிகள், ஐக்கிய அரபு அமீரக ஷேக்குகள் மைதானத்தில் குவிந்தனர். பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவும், போட்டியை காண துபாய் மைதானம் வந்தார்.

தேசியக் கொடியை வாங்க மறுத்த ஜெய் ஷா
இந்தப் போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற பின் இந்திய ரசிகர்களும், பிசிசிஐ நிர்வாகிகளும் உற்சாகத்தில் இருந்தனர். கை தட்டியும், கோஷங்கள் எழுப்பியும், உற்சாகத்தை வெளிப்படுத்தினர். பல இந்திய ரசிகர்கள் தேசியக் கொடியை ஆட்டியும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். ஜெய்ஷாவும் கை தட்டியபடி நின்று கொண்டிருந்தார். அப்போது ஜெய் ஷாவிடம் அருகில் இருந்த நபர் (உதவியாளர் எனக் கூறப்படுகிறது) இந்திய தேசியக் கொடியை கொடுக்கிறார். ஆனால் ஜெய்ஷா, தலையை அங்கும் இங்குமாக அசைத்து, வேண்டாம் என்று சொன்னார். அப்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கேமரா அதை லைவாக காட்டிக் கொண்டிருந்தது. இதன்பிறகு கேமரா வேறு பக்கம் திரும்பிவிட்டது. அங்கே பிறகு என்ன நடந்தது என தெரியவில்லை. ஆனால், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பதிவிடும் நெட்டிசன்கள், இதே செயலை வேறொருவர் செய்திருந்தால் குறிப்பாக ராகுல் காந்தியாக இருந்திருந்தால், அவர்களை பாஜகவினர் தேசத் துரோகி என்று அழைத்திருப்பார்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.

விமர்சனங்கள்
தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி நிர்வாகி ஒய்.சதீஷ் ரெட்டி இன்னும் ஒருபடி மேலே போய், "ஆர்எஸ்எஸ் மூதாதையர்களின் வழியில் ஜெய் ஷா.." எனக் காட்டமாக விமர்சித்துள்ளார். அதாவது ஆர்எஸ்எஸ் இந்திய தேசியக் கொடிக்கு முக்கியத்துவம் தராது என அவர் கூறியுள்ளார். மோகன் குமாரமங்கலமும், ஜெய் ஷா செயலை விமர்சனம் செய்துள்ளார். அதேநேரம் பாஜக ஆதரவாளர்கள் வேறு ஒரு வாதத்தை முன் வைக்கிறார்கள். ஜெய் ஷா, இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் செயலாளராக மட்டும் இருந்தால் தேசிய கொடியை ஏந்தியிருப்பார். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் அவர் இருக்கிறார். எனவே ஆசிய நாடுகளுக்கு அவர் பொதுவானவர். அவர் இந்திய தேசியக் கொடியை எப்படி ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் உயர்த்தி பிடிக்க முடியும். அது நடுநிலைமை தவறியதாக ஆகிவிடுமே என்கிறார்கள். மேலும், ஜெய் ஷா கை தட்டியது, இந்தியாவிற்காக அல்ல, எந்த போட்டியாக இருந்தாலும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் என்ற முறையில் அதைச் செய்வார் என்கிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications