துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடேங்கப்பா இத்தனை கோடியா!.. துபாயில் மீண்டும் ஒரு பிரமாண்ட பங்களா வாங்கிய முகேஷ் அம்பானி

Google Oneindia Tamil News

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உலகின் மிகப்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி புதிதாக ஏராளமான வசிதிகள் கொண்ட பிரமாண்ட சொகுசு பங்களாவை விலைக்கு வாங்கியுள்ளார்.

ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவரான முகேஷ் அம்பானி மும்பையில் உள்ள சொகுசு பங்களாவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

தெற்கு மும்பையில் அமைந்துள்ள அண்டலியா என்ற சொகுசு பங்களாவில் முகேஷ் அம்பானி வசித்து வரும் பங்களா உலகின் மிக விலை உயர்ந்த வீடுகளில் ஒன்றாகும்.

முகேஷ் அம்பானி வீடு தகர்க்கப்படும்.. நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய போன்.. மர்ம நபரை தூக்கிய போலீஸ்முகேஷ் அம்பானி வீடு தகர்க்கப்படும்.. நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய போன்.. மர்ம நபரை தூக்கிய போலீஸ்

பிரம்மாண்ட சொகுசு பங்களா

பிரம்மாண்ட சொகுசு பங்களா

44 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த வீட்டில் இல்லாத வசதிகளே இல்லை என்று சொல்லப்படுகிறது. 27 மாடிகளை கொண்ட இந்த பிரம்மாண்ட சொகுசு பங்களாவில் ஹெலிபேடுகள் முதற்கொண்டு உள்ளன. இந்த வீட்டின் மதிப்பு மட்டும் 2.9 பில்லியன் மதிப்பு என்று சொல்லப்படுகிறது. அண்டிலியா சொகுசு பங்களாவை பராமரிக்க மட்டும் 600 பேர் முழுநேரமாக பணியாற்றுவதாக சொல்லப்படுகிறது.

ரூ. 1347 கோடி மதிப்பில்

ரூ. 1347 கோடி மதிப்பில்

இப்படி இந்தியாவில் இவ்வளவு பெரிய சொகுசு பங்களா இருக்கையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் ரூ. 1347 கோடிக்கு ஒரு சொகுசு பங்களாவை வாங்கியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் ஜுமைரை பகுதியில் இந்த சொகுசு பங்களாவை அவர் வாங்கியுள்ளார். இந்த சொகுசு பங்களாவினை அல்ஷாயா குழுமத் தலைவராக உள்ள முகமது அல்ஷாயாவிடம் இருந்து வாங்கியதாக கூறப்படுகிறது.

ஏராளமான வசதிகள்

ஏராளமான வசதிகள்

ஏற்கனவே துபாய் ஜுமைரா பகுதியில் கடந்த சில மாதத்திற்கு முன்பு மகன் ஆனந்த் அம்பானி சுமார் ரூ 600 கோடி மதிப்பில் சொகுசு பங்களா வாங்கினார். தற்போது அதைவிட 2 மடங்கு அதிகமுள்ள இந்த பங்களாவை முகேஷ் அம்பானி வாங்கியுள்ளார். மேலும் முன்பு வாங்கிய பங்களாவிற்கு அருகிலேயே இந்த பங்களாவையும் அவர் வாங்கியுள்ளார். தற்போது அவர் வாங்கிய இந்த பங்களாவிலும் ஏராளமான வசதிகள் இருக்கிறதாம்.

 வெளிநாட்டினரே அதிகம்

வெளிநாட்டினரே அதிகம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் மொத்த மக்கள் தொகையில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு முக்கிய ஆதாரமாக இது இருந்து வருகிறது. இங்கு இந்தியர்கள் அதிகளவில் சொத்துக்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன்ர. கடந்த மாத இறுதியில் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் சொத்து மதிப்புகள் மட்டும் 70 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

English summary
Mukesh Ambani, the world's richest man, has bought a brand new luxury bungalow in Dubai, United Arab Emirates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X