பாகிஸ்தான் vs ஆஸ்திரேலியா: உலக கோப்பை அரையிறுதியில் வெற்றி யாருக்கு? லாரா கணிப்பு இதுதான்!
துபாய்: 20 ஓவர் உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
Recommended Video
நடப்பு உலக கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக ஆடி வரும் இந்த இரண்டு அணிகளில் யார் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைய வாய்ப்பு இருக்கிறது என்பது பற்றி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதற்கு முன்பு, இவ்விரு அணிகளும் சந்தித்துக்கொண்ட போட்டிகளின் வெற்றி சதவீதமாக இருக்கட்டும், இந்த உலக கோப்பை செயல்பாடாக இருக்கட்டும், இரண்டிலுமே பாகிஸ்தான் அணிக்கு கூடுதல் அட்வான்டேஜ் இருக்கிறது.

கடந்த பாதை
நடப்பு உலக கோப்பை தொடரில் குரூப் 1ல் ஆஸ்திரேலியாவும், குரூப் 2ல் பாகிஸ்தானும் இருந்தன. சூப்பர் 12 ஆட்டங்களில் இந்தியா, நியூசிலாந்து உட்பட தனது பிரிவில் இருந்த அனைத்து அணிகளுடனான போட்டிகளிலும் வெற்றி பெற்று பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியது. இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியை தவிர பிற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அந்த குரூப்பில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறியது.

எமிரேட்ஸ் சாதகம்
இரு அணிகளும், பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே எந்த அணி வெற்றி பெறும் என்ற ஒரு எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 50 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் ஆஸ்திரேலியா என்னதான் பெரிய பிஸ்தா அணியாக இருந்தாலும், 20 ஓவர் கிரிக்கெட் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளது. இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் 12 முறை பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது, 9 முறை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. ஒட்டுமொத்த புள்ளிவிபரம் பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக இருக்கிறது. மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்பது பாகிஸ்தான் அணியின், மற்றொரு தாயகம் போல மாறிவிட்டது. ஏனென்றால், பாகிஸ்தான் நாட்டுக்கு, பிற, கிரிக்கெட் அணிகள் செல்லாத நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடர்ந்து பாகிஸ்தான் விளையாடி அனுபவங்களை பெற்று விட்டது. எமிரேட்ஸ் மைதானங்களில் பாகிஸ்தானுக்கு நிறைய ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்த்து கோஷங்கள் அணிக்கு உத்வேகம் அளிக்கிறது.

லாரா கருத்து என்ன?
இந்த நிலையில்தான், மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா இதுதொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். ட்விட்டரில் இதுபற்றி பிரையன் லாரா கூறுகையில், ஆஸ்திரேலிய அணி மிகவும் அபாயகரமான என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவர்களிடமுள்ள வீரர்களை வைத்து எந்த அணியை வேண்டுமானாலும் தோற்கடிக்க முடியும். ஆனால் பாகிஸ்தானுக்கு சிறப்பான பேட்டிங் மற்றும் பந்து வீச்சு அமைந்துள்ளது. எனவே அவர்கள் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு செல்வார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

டாஸ் முக்கியம்
அதேநேரம் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் சம பலத்தோடு இருப்பதால் இன்று யார் வெற்றி பெறுவார் யார் தோல்வி பெறுவார் என்பதை தீர்மானிப்பதில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் டாஸ் வெற்றி பெற்றால் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யும். பொதுவாக இங்குள்ள மைதானங்களில் இரண்டாவது பந்துவீசும் அணிக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில், நியூசிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது இங்கிலாந்தை வீழ்த்துவதில் முக்கிய பங்கு வகித்தது.

ஆஸ்திரேலிய அதிவேக பந்து வீச்சு
அதேநேரம், நடப்பு உலக கோப்பை தொடரில் இதுவரை பாகிஸ்தான் வீரர்கள் 150 கிலோ மீட்டருக்கும் மேல் வேகமாக பந்து வீசும் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளவில்லை. ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகிய இருவரும் அந்த அளவுக்கு வேகத்தில் பந்து வீச கூடியவர்களாக இருக்கிறார்கள். இது பாகிஸ்தான் அணிக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும். பாபர் ஆசம் மற்றும் ரிஸ்வான் இந்த சவாலை சமாளித்தால், பாகிஸ்தான் தற்போது இருக்கக்கூடிய பலமான சூழ்நிலையில் இறுதிப்போட்டிக்குள் நுழைவது எளிதாகிவிடும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications