ஆர்சிபி திருந்தவேயில்லை.. முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 111, மொத்தம் அடிச்சதோ 156, கலாய்க்கும் மீம்ஸ்
துபாய்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இரண்டாவது பாதி ஆட்டத்தில் மொத்தமாக சொதப்பித் தள்ளியது தொடர்பான கிண்டல் மீம்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றிவருகின்றன.
Recommended Video
ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது.
பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலி மற்றும் தேவதத் படிக்கல் ஆகியோர் களமிறங்கினர் .

சிறப்பான பார்ட்னர்ஷிப்
வழக்கத்தைவிட நேற்று இவர்களின் பார்ட்னர்ஷிப் வெகு சிறப்பாக அமைந்தது. கோலி வெகு நாட்களுக்கு பிறகு அரைசதம் கடந்து அசத்தினார். படிக்கல்லும், அரைசதம் கடந்தார். முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்து சென்னை அணிக்கு அச்சுறுத்தலாக மாறியது .200க்கு மேலே ரன்கள் குவிக்கப்படும், சென்னை அணிக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டு இருந்தனர் .

அதிரடி ஆட்டக்காரர்கள்
ஏனென்றால் இந்த விக்கெட்டுகள் சென்ற பிறகும், ஏபி டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல் போன்ற அதிரடி மன்னர்கள் பின்வரிசையில் தயாராக இருந்தது இதற்கு ஒரு முக்கிய காரணம். ஆனால் சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து ஆர்சிபி அணி 156 ரன்கள் மட்டும்தான் எடுக்க முடிந்தது. அதாவது முதல் 10 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்த அந்த அணி கடைசி 10 ஓவர்களில் வெறும் 66 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஃபீனிக்ஸ் பறவையாய் எழும் சென்னை
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை ஏன் ஒருமுறைகூட ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை என்பதற்கு நேற்றைய இந்த ஒரு போட்டியும் மிகச் சிறந்த உதாரணம். எப்போதுமே அந்த அணி இப்படித்தான், கணிக்க முடியாமல் தடுமாறும் தனியாகவே இருந்து வந்துள்ளது. அதேநேரம் வீழ்ச்சி அடைந்து விடும் என்று நினைக்கும் தருவாயில் இருந்து ஃபீனிக்ஸ் பறவை போல எழுந்துவரும் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் எப்போதுமே இருந்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில் மீண்டும் ஒருமுறை, இவ்விரு உதாரணங்களும் நிரூபிக்கப்பட்டன. கடைசி நேரத்தில் தோனி படை சிறப்பாக பந்துவீசி பெங்களூர் அணியை கட்டுக்குள் வைத்தது. இதன் காரணமாக 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை எளிதாக வெற்றியை சுவைக்க முடிந்தது.

பல்லே பல கோடி போகும்
பெங்களூர் அணி தொடர்பாக பல்வேறு கிண்டல், கேலி மீம்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றிவருகிறது. அதில் ஒருசில உங்களுக்காக: வலைக்குள் என்ன இருக்கு என்று தெரியாமல், பல்லே பல கோடி போகும் என்று கூறும் காமெடி போல, ஆர்சிபி ரன் வேட்டையாடப் போகிறது என்று ரசிகர்கள் பேசி வந்ததாகவும், கடைசியில் பிய்யா.. பிய்யா.. என்ற காமெடி கிளைமேக்ஸ்தான் நடந்தது என்றும் கிண்டல் செய்கிறது இந்த மீம்.

ஆர்சிபி திருந்தவேயில்லை
முதல் 10 ஓவரில் 90 ரன்கள் எடுத்து பிறகு 66 ரன்கள்தான் எடுத்ததால், ஆர்சிபி இன்னும் திருந்தவேயில்லை என்று கிண்டல் செய்கிறது இந்த மீம்.

குதிரை மாதிரி ஆரம்பித்து..
முதல் 10 ஓவர் குதிரை மாதிரி தெரிந்தது. ஆனால் கடைசி 10 ஓவர் ஆர்சிபி நிலைமை இப்படி வரையப்பட்ட மோசமான ஓவியம் போல மாறிவிட்டது என்று கேலி செய்கிறது இந்த ட்வீட்.

சிஎஸ்கே கிங்
அதேநேரம், சிஎஸ்கே ஆட்டத்தை குறைத்து சொல்லிவிட முடியாதல்லவா. ஒரு சீசன் ப்ளேஆப் போகலன்னதும் பழைய சிஎஸ்கேவ மறந்துட்டிங்களாடா என்று சிஎஸ்கே கேட்பதை போல ஆட்டம் இருந்தது என்கிறது இந்த ட்வீட்.
-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
76 பந்துகளுக்கு பின் முதல் சிக்ஸ்.. சூர்யவன்ஷி கிட்ட சொல்லிடாதீங்க.. குஜராத்தை வெளுக்கும் ரசிகர்கள்! -
இதுக்கு பேருதான் ஆதிக்கம்.. ஆர்சிபிக்கு எதிராக 3வது முறை.. பவர்பிளேயிலேயே சுருண்ட கில் - சுதர்சன்! -
குஜராத் அணி கதை ஓவர்.. ஹேசல்வுட்டிடம் 3வது முறையாக வீழ்ந்த சுப்மன் கில்.. சைலண்ட்டான அகமதாபாத்! -
'பிரின்ஸ்'னு சொல்லிக்கிட்டா பத்தாது.. விராட் கோலி மாதிரி விளையாடவும் செய்யணும்.. 25 பந்தில் அரைசதம்! -
2வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல காத்திருக்கும் ஆர்சிபி.. குஜராத் அணி வெல்ல என்ன செய்ய வேண்டும்? -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications