ஆர்சிபிக்கு எதிராக 3 தப்பான முடிவுகள்.. கோபமடைந்த கோலி.. அம்பயரிடம் சென்று ஆவேச வாக்கு வாதம்
துபாய்: சார்ஜாவில் நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டியில், அம்பயரிடம் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Recommended Video
வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற கட்டாயத்தில் எலிமினேட்டர் சுற்றில் நேற்று இவ்விரு அணிகளும் மோதின.
முதலில் பேட் செய்த விராட் கோலி அணி 138 ரன்களைத்தான் எடுக்க முடிந்தது. இதற்குள் கொல்கத்தாவை கட்டுப்படுத்த கடும் முயற்சிகள் தேவைப்பட்டன. ஆனால் அதற்கு முட்டுக் கட்டை போடுவதை போல இருந்தது அம்பயர் செயல்பாடு.

சர்ச்சை முடிவுகள் அறிவித்த நடுவர்
அதிலும் விரேந்தர் சர்மா என்ற நடுவர் கொடுத்த முடிவுகள் அனைத்துமே சர்ச்சைக்குரியதாகவே இருந்தன. மொத்தம் 3 முறை இதே நடுவர் தப்பான முடிவை கூறினால் விராட் கோலிக்கு எப்படி இருக்கும். ஆம்.. சஹல் பந்து வீச்சில் கொல்கத்தா வீரர் திரிபாதி எல்பிடபிள்யூ ஆனபோதும் வீரேந்திர சர்மா அவுட் தரவில்லை. டிஆர்எஸ் கேட்டார் கோலி. அதில் அது கிளியர் அவுட் என்பது தெரியவந்தது. எனவே மூன்றாவது நடுவர், அவுட் கொடுத்தார்.

வாக்குவாதம்
விக்கெட் வீழ்ந்ததை கொண்டாடிய கோலி, அதன்பிறகு நேராக வீரேந்திர சர்மாவிடம் சென்றார். நான்தான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.. பால் நேரா ஸ்டெம்புக்கு போவதை போலதானே இருந்தது.. அது ஏன் உங்களுக்கு தெரியவில்லை.. என்பது போல கைகளை ஆட்டி ஆட்டி கோபத்தோடு நடுவரிடம் விராட் கோலி பேசினார். இந்த காட்சிகளை டிவியில் பார்த்ததும் ஏதோ பெரிய மோதல் என ரசிகர்கள் நினைத்தனர்.

ஆர்சிபிக்கு எதிராக அம்பயர்
3 முறை வீரேந்திர சர்மா ஆர்சிபிக்கு எதிராக தப்பாக தீர்ப்பு வழங்கினார். ஒவ்வொரு முறையும் கோலி டிஆர்எஸ் போய், அது தப்பான முடிவு என்பதை நிரூபித்தார். 3 அடி வாங்கிய பிறகு திரைப்படங்களில் எம்ஜிஆர் பதிலடி தருவதை போல விராட் கோலியும் பொங்கிவிட்டார். இருப்பினும் அடுத்த ஓவர் இடைவெளியில் களத்தில் நின்ற மற்றொரு சக நடுவர் கோலியிடம் வந்து, இப்படியெல்லாம் பேசக் கூடாது பார்த்துக்கோங்க என்பதை போல ஏதோ சொன்னார். அதை நல்லபிள்ளையாக கேட்டுக் கொண்ட கோலி சிரித்த முகத்தோடு அங்கேயிருந்து நகர்ந்து சென்றார்.

என்ன தவறுகள்?
ஆர்சிபி பேட்டிங் செய்தபோது சபாஷ் அகமது மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோருக்கு வீரேந்திர சர்மா எல்பிடபிள்யூ கொடுத்தார். ஆனால் டிஆர்எஸ்சில் அது தவறு எனத் தெரியவந்தது. பேட்டில் பந்து பட்ட பிறகுதான், கால் காப்பில் பந்து பட்டது. எனவே அவுட் இல்லை. டிஆர்எஸ்சில் அவுட் இல்லை என அறிவிக்கப்பட்டது. 3வது விஷயம், ஆர்சிபி பவுலிங் போடும்போது திரிபாதிக்கு அவுட் இல்லை என்று வீரேந்திர சர்மா கூறியதாகும்.

கேப்டனாக விராட் கோலி
இந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இதையடுத்து ஆர்சிபி வெளியேறியது. கேப்டனாக விராட் கோலிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் தொடராகும். தொடர்ந்து ஆர்சிபி அணிக்கு ஆடப்போவதாக விராட் கோலி நேற்று அறிவித்தார். ஆனால், கேப்டனாக தொடரப்போவதில்லை என்பது ஏற்கனவே அவர் வெளியிட்ட அறிவிப்பாகும்.
-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
76 பந்துகளுக்கு பின் முதல் சிக்ஸ்.. சூர்யவன்ஷி கிட்ட சொல்லிடாதீங்க.. குஜராத்தை வெளுக்கும் ரசிகர்கள்! -
இதுக்கு பேருதான் ஆதிக்கம்.. ஆர்சிபிக்கு எதிராக 3வது முறை.. பவர்பிளேயிலேயே சுருண்ட கில் - சுதர்சன்! -
குஜராத் அணி கதை ஓவர்.. ஹேசல்வுட்டிடம் 3வது முறையாக வீழ்ந்த சுப்மன் கில்.. சைலண்ட்டான அகமதாபாத்! -
'பிரின்ஸ்'னு சொல்லிக்கிட்டா பத்தாது.. விராட் கோலி மாதிரி விளையாடவும் செய்யணும்.. 25 பந்தில் அரைசதம்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications