துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனி வாட்ஸ்அப்-இல் ஹார்ட் விட்டா ஜெயில் கன்பார்ம்.. காதலர் தினத்தில் வந்த ஷாக் நியூஸ்!

Google Oneindia Tamil News

துபாய்: வாட்ஸ் அப்பில் ஹார்ட் எமோஜியை அனுப்பி தொந்தரவு செய்வதைச் சவுதி பாலியல் குற்றமாக அறிவித்துள்ளது.

உலகின் பல நாடுகளையும் இணையம் புரட்டிப் போட்டுள்ளது. இணையச் சேவை காரணமாகப் பல நாடுகளில் ஏகப்பட்ட புரட்சிகரமான மாற்றங்கள் நடந்துள்ளன. இவை எல்லாம் நல்ல விஷயம்தான்

பிற்பகல் 3 மணி நிலவரம்.. உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் 49.24 சதவீதம் வாக்குகள் பதிவு! பிற்பகல் 3 மணி நிலவரம்.. உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் 49.24 சதவீதம் வாக்குகள் பதிவு!

ஆனால், அதேநேரம் இணையம் காரணமாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சைபர் குற்றங்களைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

 சவுதி

சவுதி

ஒருவர் வாட்ஸ்அப்பில் ஹார்ட் எமோஜியை அனுப்பி தொந்தரவு செய்தால் அவருக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படலாம் எனச் சவுதி சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சவுதி சட்டப்படி, ஹார்ட் எமோஜியை அனுப்பியவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 100,000 சவுதி ரியால் அபராதம் விதிக்கப்படலாம் என அந்நாட்டுச் சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குற்றம்

குற்றம்

சவுதி அரேபியாவின் மோசடி தடுப்பு சங்கத்தின் உறுப்பினரான அல் மோடாஸ் குட்பி அந்நாட்டின் செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "வாட்ஸ்அப்பில் ஹார்ட் இமோஜியை அனுப்புவது பாலியல் தொல்லை குற்றத்திற்குச் சமம். சில குறிப்பிட்ட படங்கள் மற்றும் இமோஜிகளை சாட் செய்யும் போது பயன்படுத்துவது பாலியல் குற்றமாகவே கருதப்படும். இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட நபர் புகார் அளித்தால், இது போன்ற மேசெஜ்களை அனுப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

எமோஜிகள்

எமோஜிகள்

எந்தவொரு நபரும் இதுபோன்ற மெசேஜ் செயலிகளில் அனுமதியின்றி உரையாடலைத் தொடங்கினால் அல்லது சிவப்பு ஹார்ட் அனுப்புவது போன்ற அசவுகரியத்தை ஏற்படுத்தும் உரையாடல்களில் ஈடுபட்டால் அதையும் பாலியல் குற்றமாகவே கருதப்படும். சவுதி நாட்டில் இருக்கும் ஹாரஸ்மென்ட் எதிர்ப்பு அமைப்பின்படி, பாலியல் தொல்லை என்பது ஒரு நபர் தனது செயல் உட்பட எந்த வகையிலும் பாலியல் அர்த்தத்துடன் செய்யப்படும் அனைத்து விதமான சைகை என வரையறை செய்யப்பட்டுள்ளது. எனவே, இதில் பாலியல் அர்த்தங்களுடன் ஹார்ட் எமோஜிகளை அனுப்புவதும் அடங்கும்" என்று அவர் தெரிவித்தார்.

 சட்டம் சொல்வது

சட்டம் சொல்வது

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம். அப்போது விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், இது போன்ற மெசேஜ்களை அனுப்பியவரே அனைத்துக்கும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அவர் தெளிவுபடுத்தினார். இந்த வழக்கில், குற்றவாளிக்கு எதிராக 100,000 சவுதி ரியான் அல்லது இரண்டு வருடச் சிறைத் தண்டனை விதிக்கப்படும். ஒருவர் திரும்பத் திரும்ப இதே செயல்களில் ஈடுபட்டால் அவருக்கு ஐந்து வருடச் சிறைதண்டனை மற்றும் 300,000 சவுதி ரியால் அபராதம் விதிக்கப்படும்.

English summary
Saudi expert warned public that sending someone a red heart on WhatsApp can land the sender in jail: According to the Saudi law, if the sender was found to be guilty, he could be jailed for two to five years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X