சாதித்த ஐக்கிய அரபு அமீரகம்.. செவ்வாய்க்கு செல்லும் ஆர்பிட்டர்.. வெற்றிகரமாக ஏவப்பட்ட ராக்கெட்.. செம

Subscribe to Oneindia Tamil

துபாய்: செவ்வாய் கிரகத்தை நோக்கி ஐக்கிய அரபு அமீரகம் தற்போது வெற்றிகரமாக ராக்கெட் ஒன்றை அனுப்பி உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் வகையில் ஆர்பிட்டர் ஒன்றை அனுப்பி உள்ளது.

உலகம் முழுக்க தற்போது செவ்வாய் கிரகம் மீதான ஆராய்ச்சி தீவிரம் அடைந்து வருகிறது. அதிலும் இந்தியாவின் மங்கள்யான் திட்டம் 1 மற்றும் 2 உலகம் முழுக்க கவனம் ஈர்த்தது. இதனால் மற்ற நாடுகளும் இந்த ஆராய்ச்சியில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.

தற்போது அமெரிக்காவின் மார்ஸ் 2020 திட்டம், சீனாவின் தியான்வென் 1 திட்டம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோப் திட்டம் ஆகிய மூன்று திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு பின் முக்கியமான பல பிளான்கள் இருப்பதாக கூறுகிறார்கள்.

அமீரகம் வெற்றி

அமீரகம் வெற்றி

அந்த வகையில் தற்போது செவ்வாய் கிரகத்தை நோக்கி ஐக்கிய அரபு அமீரகம் தற்போது வெற்றிகரமாக ராக்கெட் ஒன்றை அனுப்பி உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் உருவாக்கி இருக்கும் இந்த ஸ்பேஸ் மிஷனுக்கு ஹோப் (Hope) என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. அரபி மொழியில் இந்த திட்டத்திற்கு அல் - அமல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது . இதன் அர்த்தம் ஹோப் (Hope) என்பதாகும். இந்த ஹோப் (Hope) ஆர்பிட்டர் அமீரகத்தில் இருக்கும் Mohammed bin Rashid Space Centre மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் வருவதை பயன்படுத்திக் கொண்டு இந்த திட்டங்களை மூன்று நாடுகளும் செயல்படுத்த உள்ளது . இந்த காலகட்டத்தில் செவ்வாய் கிரகம் பூமியில் இருந்து மிக அருகில் 55 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். இதை பயன்படுத்தி மிக எளிதாக அங்கு ஸ்பேஸ் மிஷன்களை அனுப்ப முடியும். இதை பயன்படுத்தி தற்போது அமீரகமும் விண்கலம் ஒன்றை அனுப்பி உள்ளது.

விண்ணில் ஏவியது

விண்ணில் ஏவியது

இந்த ஹோப் ஜப்பானில் இருக்கும் தனேகாஷிமா ஸ்பேஸ் செண்டரில் இருந்து இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.51 மணிக்கு இது விண்ணில் ஏவப்பட்டது. ஜப்பானின் H-IIA ராக்கெட் மூலம் இந்த ஹோப் (Hope) விண்ணுக்கு அனுப்பப்படுகிறது. இந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோப் (Hope) செவ்வாய் கிரகத்தில் தரையிறங்காது. மாறாக இந்த ஹோப் (Hope) செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும். மங்கள்யான் திட்டம் 1 போல இது செவ்வாய் கிரக்கத்தை சுற்றி வரும்.

எத்தனை மாதம்

எத்தனை மாதம்

அதாவது ஒரு ஆர்பிட்டர் போல இது செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும். அதிகாலையில் இந்த ஆர்பிட்டர் வெற்றிகரமாக ராக்கெட்டில் இருந்து பிரிந்து செவ்வாய் கிரகத்தை நோக்கி சென்றது. அடுத்த 7 மாதங்களுக்கு இது செவ்வாய் கிரகத்தை நோக்கி செல்லும். வரும் பிப்ரவரி மாதம் இது செவ்வாய் கிரகத்தை அடையும். இந்த ஹோப் (Hope) மொத்தம் செவ்வாய் கிரகத்தை அடைந்த பின் 687 நாட்கள் அதை சுற்றும்.

7 மாதம் விண்ணில் பயணம்

7 மாதம் விண்ணில் பயணம்

7 மாதம் விண்ணில் செவ்வாயை நோக்கி இந்த ஆர்பிட்டர் செல்லும். இதில் இருந்து திரஸ்டர் எஞ்சின்கள் இயக்கப்பட்டு இது செவ்வாய் கிரகத்தை நோக்கி அனுப்பப்படும். இதில் இருக்கும் சோலார் பேனல்கள் மூலம் இதற்கான எஞ்சின் சக்தி அளிக்கப்படும். இந்த ஆர்பிட்டர் எடை 1350 கிலோகிராம் கொண்டது. சூரிய மின்சாரத்தில் இது இயங்க கூடியது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் 7 நாடுகள் ஒன்றாக இணைந்ததன் 50ம் ஆண்டு கொண்டாட்டத்தை கொண்டாடும் வகையில் இந்த ஹோப் (Hope) அனுப்பப்பட்டு இருக்கிறது. அரபு நாடுகளில் இருந்து செயல்படுத்தப்படும் மிகப்பெரிய ஸ்பேஸ் திட்டமாக இது பார்க்கப்படுகிறது. இது அந்த நாட்டு மக்கள் இடையே பெரிய அளவில் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காரணம் என்ன

காரணம் என்ன

செவ்வாய் கிரகத்தில் இந்த ஹோப் (Hope) பின் வரும் ஆராய்ச்சிகளை செய்யும்.

வானிலை மற்றும் காலநிலை குறித்து ஆராய்ச்சி செய்யும்.

அங்கு கட்டுமானங்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதா என்று மண் ஆராய்ச்சி செய்யும்.

நீர் இருக்கிறதா என்று ஹோப் ஆராய்ச்சி செய்யும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+