முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள்! துபாயில் கேக் வெட்டி கொண்டாடிய அமீரகத் திமுகவினர்!
கடல் கடந்தும் களைக்கட்டும் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா
துபாய்: முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் வரும் மார்ச் 1ஆம் தேதி வரவுள்ள நிலையில், துபாயில் அமீரகத் திமுக சார்பில் கொண்டாட்டங்கள் களைக்கட்டத் தொடங்கியுள்ளன.
ஸ்டாலினின் பிறந்தநாளை பெரியளவில் துபாயில் கொண்டாடத் திட்டமிட்டுள்ள அமீரகத் திமுக பொறுப்பாளரும், அயலக தமிழர் நலவாரிய உறுப்பினருமான எஸ்.எஸ் மீரான் அமீரக திமுக நிர்வாகிகளுடன் அது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே அதன் ஒரு பகுதியாக துபாய் லேண்ட்மார்க் நாசர் ஸ்கொயர் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கேக் வெட்டி அமீரகத் திமுகவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதேபோல் இந்த விழாவில் கலந்துகொண்ட திமுக அயலக அணி துணைச் செயலாளர் முத்துவேல் ராமசாமி, முதலமைச்சர் ஸ்டாலின் செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். அவரைத் தொட்ரந்து பேசிய அயலக தமிழர் நலவாரிய உறுப்பினர் எஸ்.எஸ் மீரான், வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரும் நலத்திட்டங்களை பட்டியலிட்டார்.
அயலக தமிழர்களுக்காக முதல்வர் ஸ்டாலின் பார்த்து பார்த்து பல நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக கூறினார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் இது போல் ஒரு வாய்ப்பு அமையவில்லை எனக் கூறினார். ஆகையால் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை முழுமையாக அறிந்து பயன்பெற்றுக் கொள்ள எஸ்.எஸ்.மீரான் அறிவுறுத்தினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் 70வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் துபாய் தமிழ் சங்கச் செயலாளர் தாஹா, தொழிலதிபர் ஜெசிலா பானு, முஸ்லிம் லீக் பரக்கத் அலி , சமூகவலைதள செயற்பாட்டாளர் பிலால் அலியார், அமீரக திமுக நிர்வாகிகள் முஸ்தபா, சரத் பாபு, செந்தில் பிரபு , இன்ஜினியர் பாலா, 89.4 எஃப்.எம் மகேந்திரன், பாண்டியன், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் பாலா, எத்திசாலத் பாலா, ஜபருல்லா, ஜாகுவார் குரூப் நிறுவனங்கள் தலைவர் ஷா , மற்றும் தொழிலதிபர் ராமச்சந்திரன், பெனாசீர், கவிஞர் சசிகுமார், கவிஞர் மஞ்சுளா கடையநல்லூர் உதுமான், மேலப்பாளையம் பருத்தி இக்பால், அமீரக திமுக பிஆர்ஓ கபீர், பாலாஜி பாஸ்கரன் மற்றும் மற்றும் தமிழர்கள் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications
