"ஆடம்பரத்தின் உச்சம்!" வாயை பிளக்கும் வசதிகள்! இதுதான் உலகின் காஸ்ட்லி சூட் ரூம்! ஜஸ்ட் ரூ.83 லட்சம்
துபாய்: உலகின் ஆடம்பரமான சூட் ரூம்களில் ஒன்று பார்க்க எப்படி இருக்கும் என்பதைக் காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. பார்க்கவே பிரமிக்க வைக்கும் அந்த வீடியோவை பார்த்தாலே நீங்கள் ஸ்டன் ஆகிவிடுவீர்கள்.
உலகில் ஆடம்பரம் என்பது இப்போது புதிய உச்சத்தைச் சென்று வருகிறது. ஒரு பக்கம் கொரோனா காரணமாக ஏழைகள் மேலும் மேலும் ஏழையாகி வரும் நிலையில், ஆடம்பரம் என்பது புதிய உச்சத்தை எட்டி வருகிறது இதற்கு நாம் பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

ஆடம்பர சூட்: உலகின் மிக ஆடம்பரமான சூட் ரூம்களில் ஒன்றில் தங்கியிருப்பது எப்படி இருக்கும் தெரியுமா.. அதக்கு எல்லாம் பல லட்சம் கொடுக்க வேண்டுமா என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால், உண்மையில் நீங்கள் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் அந்த ஆடம்பரமான சூட் ரூம் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம். அலன்னா பாண்டே என்ற நபர் இதற்காகப் பிரத்தியேகமாக வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார்.
உலகின் மிக விலையுயர்ந்த சூட் ரூம் குறித்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். அந்த அலன்னா வேறு யாரும் இல்லை பிரபல பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேயின் சகோதரியாவார். அந்த வீடியோவை பார்த்தால் நிச்சயம் ஒரு நொடி உங்கள் தலையே சுற்றிவிடும். அந்தளவுக்கு சூட் ரூமின் ஒவ்வொரு இடத்திலும் பிரம்மாண்டம், பிரமிப்பு என அனைத்தையும் நீங்கள் உணர்வீர்கள். அழகியலுடன் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சூட் ரூம் நிச்சயம் உங்களைக் கவரும்.
ஆச்சரியத்தின் உச்சம்: துபாயில் உள்ள அட்லாண்டிஸ் தி ராயல் என்ற நட்சத்திர விடுதியில் தான் இந்த ஆடம்பரமான சூட் ரூம் அமைந்துள்ளது. அவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவை பார்த்தால் நிச்சயம் நீங்கள் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே செல்வீர்கள். அதில் அலுவலகம், நூலகம் மற்றும் கான்பரன்ஸ் ரூம், டேபிள் டென்னிஸ், மினி பார் எனப் பல வசதிகள் கொட்டி கிடக்கிறது.
பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறதே.. சரி இந்த ரூமில் தங்க என்ன செலவாகும் எனக் கேட்கிறீர்கள். ஒரு நாளைக்குத் தங்க ஜஸ்ட் ஒரு லட்சம் டாலர். அதாவது ஜஸ்ட் 83 லட்சம் தான். இந்த சின்ன தொகையைக் கொடுத்தால் போதும் இந்த சூட் ரூமில் ஒரு நாள் தங்கலாம். இதை சூட் ரூம் எனச் சொல்வதைக் காட்டிலும் பிரம்மாண்ட மாளிகை என்றே சொல்லலாம். அந்தளவுக்குப் பிரம்மாண்டம் நிறைந்த ஒன்றாக இது இருக்கிறது.
சூட் ரூம் சிறப்புகள்: இந்த சூட் ரூம் இரண்டு மாடிகளில் பிரம்மாண்டமாக இருக்கிறது. நான்கு பெட் ரூம், பிரைவேட் என்ட்ரன்ஸ், ஒரே நேரத்தில் 12 பேர் சாப்பிடும் டைனிங் டேபிள், என்டர்டெயின்மென்ட் ரூம், ஒரு நீச்சல் குளம் என்று ஊரே வியக்கும் வகையில் இந்த சூட் ரூம் இருக்கிறது.
துபாயில் உள்ள இந்த அட்லாண்டிஸ் தி ராயல், ஆடம்பரத்தின் உச்சமாக இருக்கிறது. பிரம்மாண்டம், ஆடம்பரம் ஆகியவற்றை மறுவரையறை செய்வதாக இந்த சொகுசு ஹோட்டல் இருக்கிறது. உலகின் முன்னணி வடிவமைப்பாளர்கள், கட்டிடக் கலைஞர்கள் இணைந்து உருவாக்கியது தான் இந்த அட்லாண்டிஸ் தி ராயல். கடந்த ஜனவரி மாதம் தான் இந்த ஹோட்டல் திறக்கப்பட்டது. அதில் உலகெங்கும் இருக்கும் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications