Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தோனி கிரேட்.. அஸ்வின் செய்த தப்புக்கு மைதானத்தில் வைத்தே திட்டினார்! 'சம்பவத்தை' போட்டுடைத்த சேவாக்

Subscribe to Oneindia Tamil

துபாய்: மைதானத்தில் வைத்து ரவிச்சந்திரன் அஸ்வின் நடந்து கொண்ட விதம் பிடிக்காமல், சிஎஸ்கே கேப்டன் தோனி அவரை திட்டியுள்ளார். இந்த சம்பவத்தை இப்போது வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்.

Recommended Video

    வெற்றிக்கு பின்னர் CSK ரசிகர்களை புகழ்ந்த தல Dhoni

    கடந்த சில நாட்களாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் பெயராக மாறியுள்ளது அஸ்வின்தான். இதற்கு காரணம், அவர் மைதானத்தில் நடந்து கொண்ட விதம்.

    டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் இடையே சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது, கொல்கத்தா கேப்டன் மோர்கன் மற்றும் அஸ்வின் இடையே மைதானத்தில் வைத்து ஆவேச வாக்குவாதம் ஏற்பட்டது.

    தினேஷ் கார்த்திக் விளக்கம்

    தினேஷ் கார்த்திக் விளக்கம்

    இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்று தெரியாமல் ரசிகர்கள் வழக்கமான சண்டை என்று நினைத்து விட்டு விட்டனர். கூடவே டிம் சவுத்தியும் அஸ்வினுடன் வம்பு செய்திருந்தார். ஆனால் போட்டிக்கு பின்னர் நிகழ்ச்சியில் பேசிய தினேஷ் கார்த்திக், அந்த சண்டை ஏன் என்று விளக்கம் அளித்தார். அஸ்வின் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் பேட்டிங் செய்தபோது, சிங்கிள் ஓடினர். அப்போது, திரிபாதி பந்தை த்ரோ செய்தார். அந்த பந்து பந்த் கையில் பட்டு வேறு பக்கம் போனது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்த அஸ்வின் 2வது ரன் ஓடச் செய்தார். அஸ்வின் அவுட்டாகி வெளியே போனது டிம் சவுத்தி மற்றும் மோர்ன் இந்த சம்பவத்தை குத்திக் காட்டி பேசியதால் அஸ்வின் வாக்குவாதம் செய்ததாக தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.

    அஸ்வின் செயல்பாடுகள்

    அஸ்வின் செயல்பாடுகள்

    அஸ்வின் நடந்து கொண்டது ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் இல்லை என்று விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. ஏற்கனவே சில முறை, அஸ்வின் பந்து வீசும்போது நான் ஸ்ட்ரைக்கர் என்ட் பகுதியிலிருந்து ஓடும் பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்தவர் மற்றும் ரன் அவுட் செய்துவிடுவேன் என்று எச்சரித்தவர் அஸ்வின் என்பதால் சர்ச்சை பெரிதாக அதிகரித்துக் கொண்டே சென்றது.

    வீரேந்திர சேவாக் பேட்டி

    வீரேந்திர சேவாக் பேட்டி

    இந்த நிலையில்தான், கிரிக்கெட் வெப்சைட் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள வீரேந்திர சேவாக், அஸ்வின் தொடர்பான ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார். பஞ்சாப் அணிக்காக சேவாக் விளையாடியபோது, 2014ம் ஆண்டு அந்த சம்பவம் நடந்துள்ளது.

    அஸ்வினை திட்டிய தோனி

    அஸ்வினை திட்டிய தோனி

    அப்போது, அஸ்வின், சிஎஸ்கே அணிக்காக ஆடினார். மேக்ஸ்வெல்லை அஸ்வின் தனது பந்து வீச்சில் அவுட் செய்தார். அப்போது நான் எதிர்முனையில் நின்று கொண்டு இருந்தேன். அவுட் செய்ததும் ஆவேசமானார் அஸ்வின். கீழே கிடந்த மண்ணை அள்ளி, மேக்ஸ்வெல்லை நோக்கி ஊதி தள்ளினார். எதிரே நின்ற எனக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால், நான் எதுவும் போய் சொல்லவில்லை. ஆனால், சிஎஸ்கே கேப்டன் தோனியும் இதை ரசிக்கவில்லை. அவர் அஸ்வினிடம் இப்படிச் செய்யக் கூடாது என்று கண்டித்தார். அஸ்வினை திட்டினார்.

    வெளியே சொல்லக் கூடாது

    வெளியே சொல்லக் கூடாது

    இந்த சம்பவத்திற்கு நான் சாட்சி என்ற போதிலும், அதுகுறித்து நான் வெளியே கூறவில்லை. மைதானத்தில் எது நடந்தாலும் அது அங்கேயே முடிந்துவிட வேண்டும். வெளியே வந்து சொல்லக் கூடாது. இப்போது தினேஷ் கார்த்திக், மைதானத்திற்குள் நடந்ததை வெளியே சொல்லியது தப்பு. தினேஷ் கார்த்திக்தான் இந்த சர்ச்சைகளின் முதல் குற்றவாளி. இவ்வாறு வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். தோனிக்கும் சேவாக்கிற்கும் பனிப்போர் இருந்ததாக சேவாக் ஆதரவாளர்கள் கூறுவது வழக்கம். சேவாக்கை அணியிலிருந்து நீக்கச் செய்தது தோனி என்பது அவர்கள் குற்றச்சாட்டு. ஆனால், தோனியின் பெருந்தன்மை குறித்து சேவாக்கே தனது பேட்டியில் சுட்டிக் காட்டியது குறிப்பிடத்தக்கது. அதுபோன்ற யூக விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பதாகவும் அமைந்துள்ளது சேவாக் பேட்டி.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+