மினுமினுக்கும் துபாய் தங்கம்.. இந்திய தங்கத்தை விட தூய்மையானதா? அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே
துபாய்: பொதுவாகவே இந்தியாவில் நாம் வாங்கும் தங்கத்தை விட துபாயில் தங்கம் பளபளப்பாகவும் மினுமினுப்பாகவும் இருக்கும். பலரும் இந்தியா தங்கத்தை விட துபாயில் தங்கம் தூய்மையானது என்றும் இதன் காரணமாகவே அது மினுமினுக்கும் வகையில் இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால், அதில் உண்மை இல்லை. அப்போ ஏன் துபாய் தங்கம் மட்டும் மினுமினுக்குது என்ற கேள்விக்கு உங்களுக்கு வரலாம்.! இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இந்தியர்கள் பலரும் வேலைக்காக துபாய் செல்கிறார்கள். அதுபோல துபாய் செல்வோர், விடுமுறை நாட்களில் இந்தியா திரும்பும்போது அங்கிருந்து பல பொருட்களை வாங்கி வருவார்கள். அப்படி துபாயில் இருந்து தங்கம் வாங்கி வந்தால்.. அதன் பளபளப்புத்தன்மை பலரது கவனத்தையும் ஈர்க்கும்.

துபாய் தங்கம்
இந்த துபாய் தங்கம் அனைவரையும் கவர்கிறது. அதேநேரம் இந்தியத் தங்கம் சற்று மங்கலாகவோ அல்லது மினுமினுப்பு குறைவாகவே இருக்கும். இந்த வித்தியாசம் பரவலான விவாதங்களை ஏற்படுத்துகிறது. துபாய் தங்கம் அதிகத் தூய்மையானதா? இந்தியத் தங்கத்தில் என்ன பிரச்சனை என பல கேள்விகள் எழும்.
உண்மையில் இந்த கலர் மாற்றத்திற்குக் காரணம் தூய்மை இல்லை.. மாறாக அலாய் உலோகங்கள் மற்றும் நுட்பமான ரசாயனத்தில் உள்ளது. அனைவருக்கும் தெரியும் தூய்மையான தங்கம் என்றால் அது 24 கேரட் தான். அது வெளிர் மஞ்சள் வெள்ளை நிறத்தில் இருக்கும். இருப்பினும், அது மென்மையான இருக்கும். எளிதாக உடைந்துவிடும். அதில் தங்கத்தைச் செய்ய முடியாது. இதனால் பிற உலோகங்களுடன் கலந்து 22K (91.6% தூய்மை) தங்கத்தில் தான் நகைகளை உருவாக்குவார்கள். இதைத் தான் இந்தியாவில் 916 எனும் ஹால்மார்க் என்பார்கள்.
காரணம் என்ன
அதாவது 91.6% தங்கமும் மீதமுள்ள 8.4% பிற உலோகமும் கலந்து இறுக்கும். இங்கு தான் விஷயமே வருகிறது.. துபாயில் தங்கத்துடன் ஜிங்க் அல்லது வெள்ளியைக் கலக்கின்றனர். இது தங்கத்திற்குக் கூடுதல் பளபளப்பை அளிக்கிறது. அங்கு வரும் சுற்றுலாப்பயணிகளும் மற்றும் உள்ளூர் மக்களும் இதுபோல பளபளப்பான தங்கத்தையே விரும்புவதால் அதை வாங்குகிறார்கள். ஜிங்க் சேர்க்கப்படுவதால் மேக்கிங் சார்ஜும் அங்கு குறைவு!
மறுபுறம் இந்தியாவில் காப்பர் தான் முதன்மை அலாயாக பயன்படுத்துகிறது. இது தங்க நகைகளுக்குச் சிவப்பு-மஞ்சள் நிறத்தை அளிக்கிற. இந்தியாவில் பாரம்பரியமாகவே காப்பரை கலந்து தான் தங்க நகைகளைத் தயாரித்தார்கள். அதையே தான் இப்போதும் பாலோ செய்கிறார்கள். மேலும், வெயிட் அதிகம் உள்ள செயின், வளையல்கள், கோயில் நகைகளுக்கு இதுவே தேவையான வலிமையை வழங்குகிறது.
இரண்டும் தூய்மை
அதேநேரம் தூய்மையைப் பொறுத்தவரை இரண்டுமே ஒன்று தான். துபாயில் துபாய் மியூனிசிபாலிட்டி அமைப்பும், இந்தியாவில் BIS அமைப்பும் கடுமையான தரநிலைகளை நிர்வகித்து வருகிறது. எனவே தரத்தில் எந்தவொரு மாற்றமும் இருக்காது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் துபாயில் தங்கம் ஜிங்க் அலாய்கள் இருப்பதால் முதலில் பளபளப்பாகத் தோன்றினாலும் அது சீக்கிரமே மங்கலாகும். மறுபுறம் காப்பர் நகைகள் நீண்ட காலம் நீடிக்கும்.
எது பெஸ்ட்?
தங்கத்தை வாங்குவோர் கலரை வைத்து அதன் தூய்மையை நிர்ணயம் செய்யக்கூடாது. மாறாக எவ்வளவு கேரட் என்பதை வைத்தே முடிவு செய்ய வேண்டும். இப்போது பெரும்பாலான முக்கிய கடைகளில் கேரட்டோமீட்டர் (Karatmeter) வந்துவிட்டது. அதில் நீங்கள் தங்கத்தின் தூய்மையைச் சரிபார்க்கலாம். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் துபாய் தங்கம் மினுமினுப்பாக இருந்தாலும் கூட ஈஸியாக உடையலாம். ஆனால், இந்தியத் தங்கம் அதைவிட வலிமையானது.












Click it and Unblock the Notifications