மொத்த இந்தியாவும் உன் பின்னாடி இருக்கு ஆடு.. நியூசி. மேட்சில் ஸ்காட்லாந்து வீரர் அப்படி சொன்னது ஏன்?
துபாய்: நியூசிலாந்து அணிக்கு எதிராக நடக்கும் டி 20 உலகக் கோப்பை ஆட்டத்தில் ஸ்காட்லாந்து வீரர் இன்று பேசிய விஷயம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
2021 டி 20 உலகக் கோப்பை போட்டி தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று ஆப்கானிஸ்தான் இந்திய அணிகளுக்கு இடையில் டி 20 மேட்ச் நடக்க உள்ளது. இதில் இந்தியா கட்டாயம் வெல்ல வேண்டும்.
ஏற்கனவே பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக இந்தியா தோல்வி அடைந்துள்ளது. இந்தியாவின் செமி பைனல் வாய்ப்பிற்கு இதனால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா
இந்தியா மேட்ச் தற்போது இன்னொரு பக்கம் நியூசிலாந்து - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஸ்காட்லாந்து அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பவுலிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் குப்தில் மட்டும் நன்றாக ஆடி வருகிறார். கேன் வில்லியம்சன் டக், கான்வாய் , மிட்சல் 13 என்று சொற்ப ரன்களில் அவுட்டாகி உள்ளனர்.

இந்தியா
இந்த நிலையில் இந்த போட்டியில் ஸ்காட்லாந்து பவுலர் கிறிஸ் கிரேவ்ஸ் பவுலிங் செய்யும் ஸ்காட்லாந்து கீப்பர் மேட் கிராஸ் மிகவும் உற்சாகமாக இருந்தார். நல்லா போடு.. நல்லா போடு என்று உற்சாகப்படுத்தினார். அதோடு நிற்காமல்.. மொத்த இந்தியாவும் உன் பின்னாடிதான் இருக்கு. உனக்குதான் சப்போர்ட் பவுலிங் செய் என்றும் கூறி உற்சாகப்படுத்தினார்.

உற்சாகம்
ஸ்காட்லாந்து கீப்பர் கிறிஸ் இப்படி கூறியது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. இவர் இப்படி சொல்ல காரணம் இருக்கிறது. இந்திய அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துவிட்டது. ஆனால் நியூசிலாந்து ஒன்றில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. இன்று நியூசிலாந்து ஸ்காட்லாந்து அணியிடம் தோல்வி அடைந்தால் அது இந்தியாவிற்கு சாதகம் ஆகும்.
Recommended Video

சாதகம்
ஸ்காட்லாந்து வெற்றி பெற்றால் இந்திய அணிக்கு செமி பைனல் செல்லும் வாய்ப்பு கொஞ்சம் அதிகரிக்கும். இதனால் இந்தியர்கள் பலரும் ஸ்காட்லாந்து வெல்ல வேண்டும் என்று அந்த அணிக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். இதனால்தான் இந்தியாவே உன் பின்னாடி இருக்கிறது. தைரியமாக ஆடு என்று ஸ்காட்லாந்து வீரர் கிறிஸ் சக வீரருக்கு இன்று மைதானத்தில் ஊக்கம் அளித்தார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications