கோவை-சேலம் ரோட்டில்.. பஸ் டிரைவர் தவறால் விபத்தில் சிக்கிய 6 வாகனங்கள்! “காந்தம்”போல் ஒட்டிய கார்கள்
ஈரோடு: சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து ஆறு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே சித்தோடு அருகே சமத்துவபுர மேடு பகுதியை கடந்து செல்லும் சேலம் - கோவை நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.
அவற்றுடன் இன்னோவா சொகுசுக் கார் மற்றும் டாடா ஏஸ் மினி சரக்கு வாகனமும் சென்று கொண்டிருந்தன. அப்போது அவ்வழியாக சேலம் மாவட்டம் எடப்பாடி நோக்கி மினி பேருந்து சென்றுகொண்டிருந்தது.
வேகமாக வந்த அந்த பேருந்து சொகுசுக் கார் மற்றும் டாட்டா ஏஸ் வாகனங்களுக்கு இடையே முந்திக்கொண்டு செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக இந்த இரண்டு வாகனங்கள் மீதும் மினி பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அதே இடத்தில் 3 வாகனங்களும் சட்டென நின்றன.
அப்போது அதன் பின்னால் வந்த மாருதி வேன், சொகுசுக்கார், மற்றும் பெருந்துறையில் உள்ள பிரிட்டானியா நிறுவனத்திலிருந்து 35 பேருடன் வந்து கொண்டிருந்த மற்றொரு மினி பேருந்து ஆகிய மூன்று வாகனங்களும் விபத்துக்குள்ளான வாகனங்கள் மீது மோதி விபத்துள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.
முக்கியமான இந்த தேசிய நெடுஞ்சாலையில் ஆறு வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டதன் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்து விபத்து நிகழ்ந்த இடத்திற்கு வந்த போலீசார் விபத்துக்கு உள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications